SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியாக பிரம்மம் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராய் தியாகபிரம்மம் எனப் போற்றப்பட்டு கர்நாடக இசைக்கு பெரும் சேவை செய்த இசைஞானி,  தியாகராஜர்.

பரம ராம பக்தரான ராமபிரம்மம்-சீதம்மாவின் மூன்றாவது புதல்வராக அவதரித்தவர், தியாகராஜர்.

தனது தாய்மொழியான தெலுங்கில், பல அபூர்வ ராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியவர். இன்றும்கூட பிரபல வாய்ப்பாட்டு கலைஞர்களால் அவரது எல்லா கீர்த்தனைகளும் பாடப்பட இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜர், சொண்டி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவருளால் சங்கீதத்தை மிகச்சிறந்த முறையில் கற்றுத்  தேறினார். 18வது வயதில் திருமணம் நடந்தேறியது.

சரபோஜி மன்னன் தன் சபையில் பாட இவரை அழைத்த போது, ‘நிதிசால சுகமா..?’ எனும் கல்யாணி ராக கிருதியைப் பாடி, ‘ராமனுக்கல்லால் பாமரனுக்குப் பாடுகில்லேன்’ என்று உறுதியாகச் சொன்னவர்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மகான் ராமகிருஷ்ண யதீந்த்ரரின் உபதேசப்படி 21 ஆண்டுகளில் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்து,  மனதை உருவேற்றி, புடம்போட்டு, ராமரை நேரில் தரிசனம் செய்த புண்ணியம் பெற்றவர்.

நாரதர், ஒரு துறவி வடிவில் இவருக்கு தரிசனமளித்து, ஸ்வரார்ணவம் எனும் சங்கீத நூலைப் பரிசளித்தார். அதன் துணை கொண்டே தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் நிறைந்த பாடல்களை இயற்றியருளினார்.

தியாகராஜர் சிறுவயது முதலே பூஜித்து வந்த சீதா-ராம-லட்சுமண விக்கிரகங்களை அவர் சகோதரர் காவிரியில் தூக்கி எறிந்தார்.  அவற்றைக் காணாது மனம் நொந்தபோது ராமபிரான் திருவருளால் அவை மீண்டும் அவருக்குக் கிடைத்தன.

ஒரு முறை தியாகராஜர் தீர்த்த யாத்திரை சென்றபோது வழிப்பறிக் கொள்ளையரிடம் அகப்பட்டுக்கொள்ள ராம, லட்சுமணரே, வீரர் கள் போல் வந்து அவர்களிடமிருந்து தியாகராஜரைக் காத்தனர்.

ஒருமுறை தியாகராஜர் நோயுற்றிருந்தபோது திருவையாறு தர்மசம்வர்த்தினி அம்பிகையே அவருக்கு கஷாயம் தயாரித்து வழங்கினாள்.  ராமபிரான் ஆணைப்படியே தான் அவ்வாறு செய்ததாகக் கூறி மறைந்தாள்.

கனராக பஞ்சரத்னம், நாரத பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், கோவூர் பஞ்சரத்னம், ஸ்ரீரங்க பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் ஆகிய பல பஞ்சரத்ன கீர்த்தனைகளை இவர் இயற்றியிருக்கிறார்.

தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், கன்னையா பாகவதர், சித்தூர் ராதாகிருஷ்ணையர்  போன்ற பல இசை மேதைகள் இவரிடம் இசை கற்றவர்களே.

வால்மீகி 2400 சுலோகங்களில் ராமாயணத்தை இயற்றினார். தியாகராஜர் 2400 கீர்த்தனைகளில் ராமாயணத்தைப் பாடியுள்ளதால், வால்மீகியே தியாகராஜராக அவதரித்தார் என கூறப்படுகின்றது.

திருவாரூரில் 1767ம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் நாள் பிறந்த தியாகராஜர், 1847ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதற்கு பத்து  நாட்கள் முன்பு, ‘க்ருப நெல..’ எனும் சகானா ராக கீர்த்தனையில் தாம் இறைவனடி சேர்வதாகக் கனவு கண்டதை பாடியிருக்கிறார்.

இவரது பூத உடல், தக்க மரியாதையுடன், அவரது குரு சொண்டி வெங்கடராமையரின் சமாதி அமைந்திருக்கும் காவிரி நதிக்கரையில், திருவையாற்றில், தகனம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் தை மாத பகுளபஞ்சமி தினத்தன்று இசைக் கலைஞர்கள், ‘ஜகதானந்த’, ‘துடுகு கல’, ‘ஸாதிஞ்சனே ஓ மனஸா’, ‘கன கன ருசிரா’, ‘எந்தரோ மஹானுபாவலு’ எனும் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தியாகராஜ ஆராதனையில் கலந்து கொள்வதை இசைக் கலைஞர்கள் மிகவும் புனிதமாகவும் கௌரவமாகவும் போற்றுகின்றனர்.

கர்நாடக இசைப் பாரம்பரியத்தின் அறிவிக்கப்படாத குரு பீடம்தான் திருவையாறு தியாகபிரம்மத்தின் சமாதிக் கோயில்.

வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து நதிகள் பாய்ந்தோடும் புண்ணியத் தலத்தில், ஐயாரப்பரின் நேர் பார்வையில், தென்றல் தாலாட்டும் அமைதியான இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீது தியாகராஜர் பாடிய கீர்த்தனைகள் புகழ் பெற்றவை.

-ந.பரணிகுமார்

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்