SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா : கொடியேற்றத்துடன் துவக்கம்

2018-02-21@ 12:53:43

ஜெயங்கொண்டம்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 1ல் தீர்த்தவாரி நடக்கிறது. அாியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரத்தில் பிரஹன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. மாமன்னன் ராஜேந்திரசோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக கி.பி.1036ல் இக்கோயிலை கட்டினார். கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயிலை போன்றே கட்டப்பட்ட இக்கோயில் யுனெஸ்கோவால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கொடிமரம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது, 85 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2017 பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம்  நடைப்பெற்றது.

கொடிமரம் வைக்கப்பட்ட ஓராண்டுக்கு பின்னர் ஆகம விதிப்படி பிரமோற்சவ விழா நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. கடந்த ஆண்டு வரை கொடி மரம் வைக்காமல் இருந்ததால் பிரமோற்சவம் நடத்த முடியவில்லை, அதன்படி இந்த ஆண்டு இக்கோயிலில் பிரமோற்சவ விழாவை நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்தனர், நேற்று கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று, காஞ்சி அன்னாபிஷேக கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு திரவியபொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது சிவனடியார்கள் தேவார திருமுறைகளை பாடினர். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26ம் தேதி திருக்கல்யாணமும், மார்ச் 1ம் தேதி மாசிமக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimalai-3

  பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்