SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிரிச்சுகிட்டே கடுமையாகப் பேசறது ஒரு கலைதான். அந்தக் கலையில நீங்க வல்லவங்க. ஆனா, பேச்சின் உஷ்ணம் கேட்பவரை தகிக்கும்; சிரிப்பு சமாதானப்படுத்தாதுங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. குடும்ப விவகாரங்கள்ல மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீங்க. உங்களைப் பாராட்டி உங்கக் குடும்பத்தாரைக் குறை சொல்ற உறவுக்காரரோ, நண்பரோ உங்ககிட்டேயிருந்து ஏதேனும் ஆதாயத்தை எதிர்பார்க்கறாங்கங்கறதுதாங்க உண்மை. மற்றபடி, உத்யோகத்ல மேன்மையான நிலைமையை அடைவீங்க. பதவி, ஊதிய உயர்வெல்லாம் தானே கிடைக்குமுங்க. மேலதிகாரி உங்கமேல பிரத்யேக கருணை காட்டுவாருங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கு வாய்ப்பு இருக்குங்க. சிலருக்கு இருப்பதைவிட கூடுதல் ஆதாயம் கொண்ட வேறு வேலையும் கிடைக்குமுங்க. மகான் தரிசனம் மனதுக்கு நிம்மதி தருமுங்க. முதுகு, மறைமுகப் பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பேச்சில் இனிமை சேர்த்துக்கோங்க; செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; தொந்தரவெல்லாம் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.


2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல அனாவசிய குழப்பத்துக்கு ஆளாக நேரிடுமுங்க. உங்களையும் மீறி சில தவறுகள் நிகழலாங்கறதால ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க. பிறர் செய்யற தவறுக்கு நீங்க பொறுப்பேற்க வேண்டியிருக்குமுங்க. பொறுமையாக சூழ்நிலையைக் கையாளுங்க. கொடுக்கல், வாங்கல் விஷயங்கள்ல யாராவது நம்பிக்கையானவரை சாட்சியாக வெச்சுகிட்டு இறங்குங்க. இது பின்னாளில் வரக்கூடிய சிக்கலைத் தவிர்க்குமுங்க. மனசில் இனம் புரியாத பயம் தலைதூக்குமுங்க. ஆனா, அதெல்லாம் அனாவசியமானதுங்கறதை சில சம்பவங்கள் உணர்த்துமுங்க. அதிக முயற்சிக்கு சொற்ப பலன்தானே கிடைக்குதுன்னு வருந்தாதீங்க; உரிய பலன், உங்க பொறுமைக்குப் பரிசாகக் கிடைக்குமுங்க. ரத்தத்ல சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசிய பேச்சில் ஈடுபடாதீங்க. செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து வணங்குங்க; சங்கடங்கள் நிவர்த்தியாகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விடுபட்ட குலதெய்வ வழிபாட்டுக்கான ஆன்மிகப் பயண வாய்ப்பு வந்தா, அதுக்கு முக்கியத்துவம் கொடுங்க. அப்படிக் குடும்பத்தாரோடு போய் வழிபட்டு வந்து நல்வாழ்க்கைக்கான இறைசக்தியை சேமிச்சுக்கோங்க. மனசு திடீரென்று சந்தோஷத்தால் துள்ளுமுங்க. அது ஏதோ சமீபிக்கும் எதிர்கால நன்மையைச் சொல்லும் அறிகுறியாக இருக்குமுங்க. வாகனத்தில் எந்தப் பழுதையும் அலட்சியப்படுத்தாம உடனே சரிபண்ணிக்கோங்க. விளையாட்டாகப் பேசுவதாக நினைச்சு, யாரையும் ஓவரா கிண்டலடிக்காதீங்க; அது உங்களையே திருப்பித் தாக்குமுங்க. உத்யோகம், தொழில், வியாபாரம் எல்லாம் எந்த சிக்கலும் இல்லாம சீராகப் போகுமுங்க. வயிற்றில் அமிலச் சுரப்பு கோளாறு ஏற்படலாமுங்க. சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புது பொருள் சேருமுங்க. வியாழக்கிழமை இஷ்டப்பட்ட மகான் சந்நதிக்குப் போய் வணங்குங்க; வளம் காண்பீங்க.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சின்னச் சின்னதா உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமுங்க. அதிக உழைப்பு, களைப்பு, சரியான தூக்கமில்லேன்னாலும், பிராணாயாமம், சிறிது தொலைவு நடைன்னு சின்ன உடற்பயிற்சிகளால சுறுசுறுப்பாக இயங்க முடியுமுங்க. ஒருவர் செய்த தவறை அடுத்தடுத்து சுட்டிகாட்டாதீங்க; இது உறவையும், நட்பையும் தூரத்துக்கு விலக்கி வைக்குமுங்க. நடிக்கறவங்களை நம்பி, நல்லவங்களைப் புறக்கணிக்காதீங்க. அவசியமில்லாத இரவுப் பயணத்தைத் தவிர்க்கணுமுங்க. கேளிக்கைகளைத் தவிர்த்து உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்துக்கோங்க. உத்யோகம், தொழில், வியாபார இடங்கள்ல யாரையும் பகைச்சுக்காதீங்க. வயிற்றிலும், மூட்டுகளிலும் பாதிப்பு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சொந்த நலனை மறந்து பிறருக்கு உதவப் பாருங்க. திங்கட்கிழமை சிவாலயத்தில் நடைபெறும் பூஜை, அபிஷேகத்துக்கு வில்வம், கங்கை நீர் வாங்கித் தாங்க; சீராகும் வாழ்க்கை.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் எந்த அளவுக்கு தம் பணியில் ஈடுபாடு காட்டறீங்களோ அந்த அளவுக்கு உயர்வீங்க. சக ஊழியர்களை அனுசரிச்சுகிட்டுப் போய், அவங்களுக்குத் தேவையான உதவிகளை முன்வந்து செய்ங்க. அலுவலகப் பணி நேரத்துக்கு அப்புறமும் இப்படி நீங்க செய்யக்கூடிய உதவி, உங்களுக்குப் பரவலான நற்புகழையும், பலன்களையும் தருமுங்க. வியாபாரம், தொழிலில் ஏற்கெனவே தொடர்பு இருந்து இப்போது அது விட்டுப்போயிருக்கும் நண்பர்களைத் தேடிப்பிடித்துப் பேசுங்க; அவங்க நிலைமைகளை விசாரிச்சுத் தெரிஞ்சுக்கோங்க. இது உங்களுக்கும் சரி, அவர்களுக்கும் சரி, எதிர்கால நன்மைகளை அளிக்குமுங்க. அடிவயிற்றில் வலி ஏற்படுமுங்க. சிலருக்கு அஜீர்ண கோளாறு உண்டாகலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் சொல்லும் யோசனைகள் பாராட்டப்படுமுங்க. சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலைமாலை சாத்தி வழிபடுங்க; வெற்றிகள்
அணிவகுக்கும்.


6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த முக்கியமான விஷயத்ல இறங்கு முன்னாலும் குடும்பத்தார் மற்றும் உங்க நலன்ல அக்கறை இருக்கற நண்பர்கள் கிட்ட யோசனை கேட்டுக்கோங்க; இது எதிர்கால அதிர்ச்சிகள்லேர்ந்து உங்களைக் காப்பாற்றுமுங்க. உத்யோகத்ல இடமாற்றம் வந்தா ஏற்றுக்கோங்க. வேறு வீட்டுக்கு மாறும் வாய்ப்பையும் உடனே பயன்படுத்திக்கோங்க. மனசில் ஏற்பட்டிருந்த சந்தேகம், குழப்பமெல்லாம் விலகுவதால நீங்க எடுக்கற புது முயற்சிகள் வெற்றி தருமுங்க. புதுத் தொழில் தொடங்கவும் முடியுமுங்க. சிலர் விஷ ஜந்துகளால் கடிபட நேரிடலாம்; அதனால பாழ் கட்டிடம், செடி-கொடி அடர்ந்த தோட்டம் அல்லது காட்டுப் பகுதியிலிருந்து விலகி இருங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தன்னிச்சையாக புது முயற்சிகள்ல இறங்காதீங்க. செவ்வாய்க்கிழமையில புற்றுள்ள அம்மன் கோயிலுக்குப் போய், எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வணங்குங்க. வாழ்வில் மணம் வீசும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பேச்சில் இனிமையைக் கூட்டிக்கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியமுங்க. ஏதேனும் கோபம், வருத்தம்னா அதை உடனேயே வெளிக்காட்டிக்காம, குறிப்பிட்ட இடத்தை விட்டுப் போயிடறது நல்லதுங்க. ஏன்னா இந்த காலகட்டம் அப்படி. நீங்க சொல்றதை சரியா காதிலே வாங்கிக்காமலேயே எதிராளி சண்டைக்குத் தயாராகிடுவாங்க; எச்சரிக்கையா இருங்க. பிள்ளைகளின் முன்னேற்றம் சந்தோஷம் தருமுங்க. உத்யோகஸ்தர்களுக்குப் புது பொறுப்புகள் வந்து சேருமுங்க. நெருப்பினோடு அல்லது உயரத்தில் ஏறி வேலை செய்யறவங்க கவனமா இருங்க; தேவையான பாதுகாப்பு கவசங்களைக் கட்டாயம் பயன்
படுத்துங்க. கண்-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யாரையும் அளவுக்கு மீறி புகழாதீங்க; அது உங்களுக்கே அபவாதமாகிடும். வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்க; பெருமை பொங்க வாழ்வீங்க.


8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத பணவரவு, திடீர் பொருளாதாரப் பிரச்னையை சமாளிக்குமுங்க. குடும்பத்ல சுப விசேஷங்கள், புது வீட்டுக்கு முன் பணம் செலுத்துதல், வீட்டில் பெரியவங்களுக்கு ஏற்படற திடீர் நோய் அல்லது இனிய நண்பருக்கு ஏற்பட்டிருக்கும் பணமுடைன்னு ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்களுக்குப் பணம் தேவைப்படலாமுங்க. இதுக்கு, மறந்தே போயிருந்த நீங்க கொடுத்திருந்த கடன் தொகை, அல்லது இன்கம் டாக்ஸ் ரிடர்ன், பாரம்பரிய சொத்துப் பங்குன்னு பணம் வந்து நிலைமையைக் காப்பாத்தறதோட உங்க பெயருக்கும் புது அந்தஸ்து கொடுக்குமுங்க. புது அங்கீகாரம் பெறுவீங்க; பொது அமைப்பு எதிலாவது கௌரவப் பதவியும் ஏற்பீங்க. ஒவ்வாமை பிரச்னை தெரியுதுங்க; சிலருக்கு முதுகு எலும்பில் வலி உண்டாகும்.

இந்தத் தேதிப் பெண்கள் பலராலும் பாராட்டப்படுவீங்க. புதன்கிழமை பெருமாள்-தாயாருக்கு சாமந்தி மாலை சாத்தி வழிபடுங்க; இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத இடங்கள்லேர்ந்து நல்ல செய்திகள் வருமுங்க. இதை நல்லபடியாகப் பயன்படுத்திக்கோங்க. உங்க வளர்ச்சியில பொறாமை கொள்றவங்ககிட்ட இந்த விஷயங்களைச் சொல்லிடாதீங்க. உங்க பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடுமுங்க. அதனால எந்த காரணத்துக்காகவும் யார்மேலேயும் கோபமோ, ஆக்ரோஷமோ கொள்ளாதீங்க. அந்த கால துரோக சம்பவம் எதையாவது நினைச்சு அதற்கு இப்பப் பழிவாங்க நினைக்காதீங்க. உத்யோகம், வியாபாரம், தொழில் இனங்கள்ல மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகிடுமுங்க. அதனால எல்லோரும் உங்ககிட்ட சுமுகமாகவே பழகுவாங்க. சிலருக்குப் பாதத்தில் சரும நிறமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மூட்டுத் தேய்மான உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கோங்க. புதன்கிழமை  லட்சுமி நரசிம்மருக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்க; வாழ்க்கை இனிக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்