குன்றத்து முருகன் கேட்ட வரம் தருவார்
2018-01-31@ 08:46:51

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்து மகிழ்ச்சிகரமாக சாந்தமாக அமர்ந்த நிலையில் காட்சி தரக்கூடிய முருகப்பெருமானை மனதார ஒருமித்தமாக வணங்கினால் குழந்தை பாக்கியம், திருமண வரம், கல்வி, செல்வம், விவசாயத்தில் அமோக விளைச்சல், சொத்துக்கள் கைகூடுதல், வீட்டு மனை வாங்கி கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பக்தர்களின் அனைத்து வேண்டுதலையும் அள்ளித் தருவார். அதன்மூலம் பக்தர்கள் ஆனந்தப்படுவதை கண்டு தானும் சந்தோஷப்படுவார். மகிழ்ச்சிகரமாக வாழ குன்றத்து முருகனை வழிபட வேண்டும்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழாவில் ஆறுநாள் சூரபத்மனை சம்ஹாரம் செய்த லீலை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் திருப்பரங்குன்றத்தை தவிர மற்ற ஐந்து படை வீடுகளில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆனால் திருமண கோலம் பூண்ட திருப்பரங்குன்றத்தில் அன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவதில்லை. அதேசமயம் மாலை மாற்றுதல் என்ற வைபவம் நடக்கிறது. பங்குனி பெருவிழாவில் தான் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது. மன்னர் காலத்தில் திருவிழா முறை மாற்றப்பட்டு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
தைப்பூசமும் தமிழ் கடவுளும்!
தைப்பூசத்தன்று (8-2-2020)
வல்வினைகள் போக்கும் வயலூர் முருகன்
கரும்புடன் கந்தன்
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா
ஔவைக்கு அருளிய அழகன்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்