SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

2018-01-18@ 14:27:48

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் கோயில் சார்பில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களாலான மாலைகளாலும், எலுமிச்சம் பழம் மாலைகளாலும், வலக்கரங்களில் கத்தி, உடுக்கை, சக்கரம், இடக்கரங்களில் சூலம், காபலம், சங்கு மற்றும் அபாயகரத்துடன் எட்டு கரங்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இரவு 11.30 மணியளவில் அங்கு உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் அமர்த்தப்பட்டது. அதன் பிறகு பூசாரிகள் அம்மனுக்கு பக்தி பாடல்களை பாடினர். இதை கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். இரவு 12.30 மணியளவில் தாலாட்டு பாடல்கள் பாடி தீபாராதனை காட்டியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, வேலூர், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் வளத்தி போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்