SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாகர சங்கமம்

2018-01-12@ 16:57:36

தைப்பொங்கலான மகர சங்கராந்தி நாளன்று மேற்கு வங்காளத்தில் உள்ள சாகர்தீவு ஸ்நான கட்டத்தில் புனித நீராடி பிதுர்கடன்கள் செய்தால் புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கை புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த சமயத்தில் மிகவும் பிரமாண்டமான மேளா ஒன்றும் அங்கு நடைபெறுகிறது. அந்த சாகரசங்கம மேளாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடுவது அதன் சிறப்பு. ஒரு காலத்தில் அங்கு பிராயச்சித்த புனித நீராடலுக்கு வருகின்ற பக்தர்கள் முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகிய பஞ்ச ரத்தினங்களை தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் பூணூல் ஆகியவற்றுடன் சங்கமத்தில் இடும் வழக்கம் இருந்தது. தற்போது பூ, பழங்கள் மட்டுமே இடப்படுகின்றன.

பாகீரதி என்ற பெயரில் கங்கை பூமியில் இறங்கி, கடைசியாக மேற்கு வங்கத்தில், வங்கக்கடலில் கலக்கிறாள். அங்கு கங்கை கடலுடன் கலக்கும் இடத்தில் சாகர் என்ற ஒரு தீவு உள்ளது. அந்த சாகர சங்கமம் கொல்கத்தாவிலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற டயமண்ட் ஹார்பரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதாப ஆதித்த மன்னனின் தலைநகரமாகவும் இந்த சாகர் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது.

சங்கராந்தி எனப்படும் தை மாதப் பிறப்பன்று அந்த சாகர் தீவு ஸ்நான கட்டத்தில் புனித நீராடி பித்ரு கடன்கள் செய்வது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை புராணகாலம் தொட்டே மேற்குவங்கத்தில் நிலவுகிறது. அந்த இடத்தில் கபில முனிவருக்கும் ஒரு ஆலயம் உள்ளது. புனித நீராடியபின் மக்கள் கபில முனிவரையும் தரிசிக்கின்றனர். ஒரு பெரிய பாறையையே கபில முனிவராக பாவித்து அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அங்கு கடல், கங்காதேவி, பகீரதன் ஆகியோரைக் குறிக்கும் அடையாளச் சின்னங்களும் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்