SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைக்கிளில் தேடிப் போய் மாடுகளுக்கு லாடம்!

2018-01-12@ 16:57:07

நம்மவர்கள் சேர்க்கிற செல்வத்தில் கால்நடைகள் முன்னிலை வகித்தன. பயணம் செய்ய, பாரம் சுமக்க வண்டிகளுக்கு,   உழவுக்கு என வண்டிகளுக்கு மாடுகள் அவசியப்பட்ட காலமது. மாடுகள்  தவிர்க்க முடியாத அன்றாட வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. சதா உழைக்கிற இந்த மாடுகளின் கால் குளம்பு தேயாதிருக்க நாம் செருப்பு அணிவது போலவே, மாடுகளின் பாதங்களுக்கு ‘லாடம்’ அணிவிக்கப்படும். ஒரு காலத்தில் தெருக்களுக்கு ஒருவர் என இத்தொழில் நடத்தியவர்கள் போய், இன்றைக்கு நான்கைந்து ஊர்களுக்கு ஓரிருவர் மட்டுமே ‘லாடம் கட்டுதலில்’ உள்ளனர். கடும் பாரம் சுமந்து உழைக்கிற ஒவ்வொரு மாட்டின் கால்குளம்பு தேயாதிருக்க, 3 மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் ‘லாடம்’ அடிக்க வேண்டும்.

வெட்டினால் வளரும் திறன்மிக்க கால் குளம்பின் மீது அதன் வடிவொத்த தகட்டினை வைத்து, அதிலுள்ள ஓட்டைகளில் கூர்மையான 2 இஞ்ச் அளவில் இதற்கான ஆணிகள் கொண்டு குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்காமல் லாவகமாக இது அடிக்கப்படுகிறது. இந்த லாடம் 35 முதல் 40 நாட்களுக்குள் தேய்ந்து விட, மீண்டும் இதனை பிடுங்கியெடுத்து, குளம்பை லேசாக சீவிச் சரிப்படுத்தி அதன் மீது மீண்டும் லாடம் அடிக்கின்றனர். ஓய்வின்றி கூடுதல் உழைப்பு கொள்கிற மாடுகள் லாடம் கட்டிய 35ஆம் நாளுக்குள் நொண்ட ஆரம்பித்து, நடை தளர்ந்து படுக்கின்றன. இம்மாட்டினை எந்த கடின வேலைக்கும் பயன்படுத்தாது, தீவனம் அளித்து முழுமையாய் ஓய்வு தந்த பின்னரே அதன் பாதங்களில் புதிய லாடம் அடிக்கப்படுகிறது.

ஒரு மாட்டின் ஒவ்வொரு காலிலும் 2 குளம்புகள்.  குளம்புக்கு தலா ஒன்று  என, 4 கால்களிலும் 8 லாடங்கள் அடிக்கப்படுகிறது. ஒரு மாட்டுக்கு லாடம் அடிப்பதற்கென கிடைக்கும் வருவாயில் பாதி, லாடத்தகடுகள், ஆணிகளுக்கு செலவாகும். ஒருவர் ஒருநாளைக்கு 5 மாடுகளுக்கு மேல் லாடம் அடிப்பது சிரமமாம். லாடம் அடிக்கும் முன் மாட்டின் வயிற்றுப் பகுதியில் கயிறு கட்டி மரநிழலில் கீழே சாய்த்து குறைந்தது 2 முதல் நான்கு பேர் சேர்ந்து கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொள்கின்றனர். ஒரு சில மணி நேர உழைப்பில்  மாட்டுக்கான லாடங்கள்  அடிக்கப்படுகின்றன.

லாடத் தொழிலாளிகள் கூறும்போது,  ‘‘இன்று நவீன வாகனங்கள், பண்ணைக் கருவிகள் பயன்படுத்துவதால்  மாடுகள்  தேவை குறைந்து விட்டன. முன்பெல்லாம் மாதம் முழுக்க வேலை இருக்கும். இப்போதோ பத்து நாட்களுக்கு வேலை வருவதே கஷ்டம். சைக்கிளில் ஊர் ஊராக சுற்றி மாடுகள் வைத்திருப்போரை தேடிப்போய் லாடம் கட்டித் தருகிறோம். இந்த தொழில் தெரிந்தவர்கள் இப்போது மிகக்குறைந்து விட்டனர். எங்களுடனேயே இந்த தொழில் முடிந்து விடுமோ என்றொரு கவலையும் இருக்கிறது’’ என்றனர்.

செ.அபுதாகிர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்