பிறந்த தேதி பலன்கள் : ஜனவரி 19 முதல் 25 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு ரொம்பவும் மேன்மையான வாரமுங்க. தைரியமும் தன்னம்பிக்கையும் கூடறதால, புதுப்புது உத்திகளால சாதனைகள் படைப் பீங்க. உங்களோட உற்சாகம் சக ஊழியர்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் தொற்றிக்கொள்ள, பணிபுரியும் இடமே கலகலப்பாக விளங்குமுங்க. தொழிலில் உங்களோட புது முயற்சிகள், போட்டியாளர்களைத் திகைக்க வைக்குமுங்க. புது துறையில் கால் பதிப்பீங்க; நிலையாக நிற்கவும் செய்வீங்க. வியாபாரிகள் கொள்முதல் செய்யறதிலே புது கொள்கையை வகுத்துகிட்டு, பிறருக்கு எடுத்துக்காட்டாகவே திகழ்வீங்க. குடும்பத்லேயும் புத்துணர்ச்சி மேலோங்கும். சுப விசேஷங்கள் குடும்ப பலத்தை உறுதியாக்குமுங்க. உணவுப் பழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இல்லாததால அஜீர்ணம், கழிவுப் பாதை உபாதைன்னு வரலாமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெருமை அடைவீங்க. தினமும் இஷ்டப்பட்ட மகானை மனதார வணங்குங்க; கஷ்டமே நெருங்காது.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வாழ்க்கைத் துணையோடு அனுசரிச்சுகிட்டுப் போகவேண்டியது ரொம்பவும் அவசியமுங்க. முக்கியமா அவங்களோட உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. எந்த கட்டத்திலும் எரிச்சல்படாம இருங்க. அவங்களோட ஏற்படற சின்ன வாக்குவாதமும் பெரிய சங்கடத்ல கொண்டு விடுமுங்க. உலகத்ல, வாழ்க்கையில அவங்களோட வேதனையைத் தீர்க்கறது தவிர வேற வேலை எதுவும் இல்லேங்கறா மாதிரி முக்கியத்துவம் கொடுக்க வேண் டியது அவசியமுங்க. குடும்பத்ல மட்டுமல்லாம, உத்யோக இடம், தொழில், வியாபாரம் எல்லா இனங்கள்லேயும் பொறுமையை கையாளணுமுங்க. உங்க நிதானம்தான் உங்க நன்மைகளைப் பெருக்குமுங்க. ரத்தத்தில் ஏற்கெனவே பாதிப்பு இருக்கறவங்க முறைப்படி சிகிச்சை எடுத்துக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப ரகசியங்களை வெளியில சொல்லிகிட்டிருக்காதீங்க. தினமும் மகா கணபதியை உளமார வணங்குங்க; கவலைகள் காணாமல் போகும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதிரிகள் பலம் அதிகரிச்சிருக்குங்க. மறைமுகமாக உங்களை எதிர்த்தவங்கள்லாம் இப்ப நேரடியாகவே எதிர்க்கப் புறப்படுவாங்க. அதனால யார் மேலேயும் சுடுசொல் வீசாதீங்க. யாரையும் மனசாலகூட பகைக்காதீங்க. உத்யோகத்ல உங்க நெருக்குதலால வெளியேறினவங்க இப்ப நல்ல நிலை யில இருக்கறதைப் பார்த்துப் பொறாமைப்படாம அவங்களோட நட்பைப் புதுப்பிச்சுக்கப் பாருங்க. இது மனப் புண்ணுக்கு மருந்தாகவும் அமையுமுங்க. மேலதிகாரிங்க உங்க மேல நம்பிக்கை இழக்கறாங்கன்னு கற்பனை பண்ணிக்காதீங்க. அவங்க நடவடிக்கைகள் அப்படித்தான் மேலோட்டமாகத் தெரி யும்; ஆனா உண்மை அதுவல்ல. ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு இருக்கறவங்க எதுக்கும் ஆக்ரோஷப்படாம இருங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பிறரு டன் நட்பாக இருக்க முடியாவிட்டாலும், பகைமை பாராட்டாமலாவது இருங்க. தினமும் பெருமாளை உள்ளம் உருக வணங்குங்க; மனத்துக்கண் மாசி லன் ஆவீங்க.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
என்னன்னே புரியாத சஞ்சலம் மனசில் தோணுமுங்க. அடுத்தடுத்த விஷயங்கள் நீங்க எதிர்பார்க்கற முடிவுகளைத் தரலேங்கறதுக்காக இனி வாழ்நாள் பூராவும் அப்படித்தான்னு தப்பு கணக்குப் போட்டுக் குழம்பாதீங்க. இந்தக் குழப்பத்ல, இடையிடையே உங்களுக்கு கிடைக்கற நல்ல சங்கதிகளை நீங்க கவனிக்க முடியாம போயிடுமுங்க. உத்யோகம், தொழில், வியாபார இனங்கள்ல நீங்க ஒண்ணுமே செய்யாம அமைதியா இருந்திட்டாலே, நடக்க றது அதுபாட்டுக்கு நல்லதாகவே நடக்குமுங்க. இருட்டுப் பகுதிகள்ல நடமாடாதீங்க; விஷ ஜந்துவால கடிபடலாம். இரவுப் பயணமும் மேற்கொள்ள வேண்டாங்க. தினமும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்ற வழக்கம் இருந்தா அதை விடாம கடைப்பிடிங்க; மன உறுதி கூடும்.
இந்தத் தேதிப் பெண்கள் மனம்விட்டுப் பேசுங்க; யாரையும் புறஞ்சொல்லாதீங்க. தினமும் மகான் ராகவேந்திரரை மனமுருக வணங்குங்க; மனம் தெளிவாகும்; நல்லன நடக்கும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
நேரம் தவறாமை ரொம்பவும் முக்கியமுங்க. சாலைப் போக்குவரத்து நெரிசல், மற்றும் இதர தாமதம் உண்டாக்கும் விஷயங்களை அனுசரிச்சு குறிப் பிட்ட நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுடறது நல்லதுங்க. வழியிலே எதிர்பாராம வாகனம் மக்கர் பண்ணவும் வாய்ப்பு இருக்கறதால, வாகனத்தை முறையாகப் பழுது பார்த்துக்கோங்க. பிறர் விஷயத்ல ஆர்வம் காட்டாதீங்க. நீங்க நல்ல மனசோட யோசனையைச் சொன்னாலும் கேட்கறவங்க சரியான கோணத்ல புரிஞ்சுக்கமாட்டாங்க; அதனால ‘சும்மா இருக்கும்’ மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க. நீங்க சம்பந்தமே படாத விஷயங்கள்லாம் உங்களுக்கு எதிரா திரும்பற வகையில கிரக அமைப்புகளும் இருக்கறதால எச்சரிக்கையா இருங்க. அடிவயிற்று உபாதையை மருத்துவர் கவனத்துக் குக் கொண்டுபோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் அக்கம்பக்கத்தாருடன் அளவாகப் பேசுங்க. தினமும் லட்சுமி நரசிம்மரை மனம் கசிய வணங்குங்க; லட்சியங்கள் ஈடேறும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குடும்பத்ல பெரியவங்களுக்கு, குறிப்பா பெற்றோருக்கு உரிய முக்கியத்துவம் கொடுங்க. அவங்க ஒண்ணுமே பேசாட்டாலும் அவங்க மனசு எப்பவும் உங்களை ஆசிர்வதிச்சுகிட்டிருக்குங்கற உண்மையை நீங்க சில அனுபவங்களால தெரிஞ்சுப்பீங்க. உங்க வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் செய்வதானாலும் ஏதேனும் முதலீடு செய்வதானாலும், பெற்றோர் மற்றும் குடும்பத்தார் யோசனைகளைத் தட்டாம கேட்டுக்கோங்க. இதேபோல உத் யோக இடம், தொழில், வியாபார இனங்கள்ல எந்த விஷயத்துக்கும் சக பணியாளர்கள், பாகஸ்தர்கள்கிட்ட யோசனை கேட்டுக்கறது நல்லதுங்க. குறிப் பிட்ட சில ரகசியங்களை மட்டும் வெளியிடாம பிற விஷயங்கள்ல அவங்ககிட்ட யோசனை கேட்கறது உங்க எதிர்கால நன்மைக்கு உத்தரவாதம் தரு முங்க. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் தேவையில்லாத பொருட்களை வாங்கி கடனாளியாகாதீங்க. தினமும் சிவனை மன மார வணங்குங்க; சிறப்புகள் பெறுவீங்க.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தொட்டது துலங்கக் கூடிய காலகட்டமுங்க. உங்களோட சின்ன அளவு முயற்சியும் பெரிய நன்மைகளை உண்டாக்குமுங்க. இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகி, நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்யுமுங்க. தொழில், வியாபாரத் துறையினருக்கு இருந்துவந்த சட்ட சிக்கல் கள் தீருமுங்க. இதனால அரசு சலுகைகள் கிடைக்கும். கூடுதல் கொள்முதல், தொழிலகம் அமைப்பதற்குத் தேவையான, தோதான இடம் எல்லாம் கிடைக்குமுங்க. மனசில் உருவாகும் புதுமை எண்ணங்களை செயல்படுத்தறதால உங்களுக்கு மட்டுமல்லாம உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை கள் அதிகரிக்குமுங்க. ஏற்கெனவே கண்கள்ல உபாதை இருக்கறவங்க மருத்துவத்தை நிறுத்தாம தொடரணுமுங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அள வையும் பரிசோதிச்சுக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பலருக்கும் உபயோகமா யோசனை சொல்வீங்க. தினமும் பெருமாளை மனசில் இருத்தி வணங்குங்க; புதுப் பொலிவு பெறுவீங்க.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உடல் உபாதைகள் அனாவசிய பயத்தைத் தருமுங்க. ஒவ்வாமையால சரும நிறமாற்றம் ஏற்படும். இது குறித்து நீங்களாக எதையாவது கற்பனை பண் ணிக்காம உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. பிறர் கிட்ட யோசனை கேட்டு அவங்க சொல்ற மருந்தை நீங்களாக எடுத்துகிட்டு உபாதையை அதிக மாக்கிக்காதீங்க. சிலருக்கு தொண்டையில் அரிப்பு அல்லது அடைப்பு ஏற்படலாமுங்க. எதுக்கும் மருத்துவர் யோசனையை மட்டும் கேட்டு நடங்க. சிலர் புது வாகனம் வாங்குவீங்க; இது உங்க பணிச் சுமையைக் குறைக்க உதவுமுங்க; அதனால ஆதாயமும் அடைவீங்க. உத்யோகஸ்தர் சிலர் புதுப் பெருமை அடைவீங்க. சிலருக்கு அவங்க சார்ந்த நிறுவனத்திலிருந்தோ, பொது அமைப்பிலிருந்தோ விருதும் கிடைக்கலாமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையா இருங்க. தினமும் இஷ்டப்பட்ட அம்மனை உளமாற வணங்குங்க; உங்க இஷ்டமெல்லாம் ஈடேறும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த ஒரு விஷயத்லேயும் மனசுக்கு சரின்னு பட்ட முதல் யோசனையை மட்டுமே செயல்படுத்துங்க. அது சரியா இருக்குமா, இருக்காதான்னு நீங்க தடுமாறி, அடுத்தடுத்து யோசிக்கும்போது தீர்மானமான ஒரு முடிவுக்கு வரமுடியாமப் போயிடுமுங்க. அதேபோல பெருந்தன்மை காரணமாகவோ அல் லது ஏதேனும் நிர்ப்பந்தத்தாலோ பிறர் யோசனையைக் கேட்டீங்கன்னா அனாவசிய குழப்பம்தாங்க மிஞ்சும். மன வலு கூடி, தன்னம்பிக்கையும் து ளிர்க்கறதால எதிலும் தைரியமா இறங்கலாமுங்க. பெரிய முதலீடுகளுக்கு வாய்ப்பு இருக்குங்க; ஆனா உங்களுக்குத் தெரியாத துறையில் முதலீடு செய்ய வேண்டாங்க; யாருடைய வற்புறுத்தலுக்கும் ஆசை காட்டலுக்கும் இணங்கிடாதீங்க. இடது பக்க தேக உபாதைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் தங்களோட யோசனையால பெருமை அடைவீங்க. தினமும் நெஞ்சம் நெகிழ முருகனை வணங்குங்க; நல்லதே நடக்கும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!