SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகன் தலங்கள் : தை கிருத்திகை (21.1.2013)

2013-12-11@ 16:00:48

விருதுநகர்- திருத்தங்கல் கருநெல்லிநாதர் ஆலயத்தில் அருளும் முருகன், பழநி முருகனைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறார்.

வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளுக்கு அருளும் முருகனை ‘வழிவிடும் முருகனா’க ராமநாதபுரத்தில் தரிசிக்கலாம். அண்ணன் கணபதியுடன் ஒரே கருவறையில் கந்தன் அருளும் தலம் இது.

கடலூரில் ‘வெற்றிவேல் முருகனை’ தரிசிக்கலாம். மூன்று எலுமிச்சம் பழங்களைப் படைத்து வேண்டுவோருக்கு மழலை வரம் கிட்டுகிறது. முருக னுக்கு அபிஷேகம் செய்த நீரை வெற்றிலையில் தெளித்து, அதனால் முகத்தைத் துடைக்கும் (வெற்றிலைத் துடைப்பு) பரிகாரம் மேற்கொள்வோர், திரு மணத்தடை நீங்கப்பெறுகின்றனர்.

கன்யாகுமரி, வேலிமலையில் மூலவர் குமார சுவாமியாகவும் உற்சவர் மணவாள குமரனாகவும் திகழ்கின்றனர். வள்ளியை முருகன் மணம் புரிந்த தலம். இங்கு வழங்கப்படும் கஞ்சி தர்ம பிரசாதம்  சகலநோய்களையும் தீர்க்கிறது.

கேரளம்- கோட்டயம், கிடங்கூரில் பிரம்மச்சாரியாக சுப்ரமண்யரை தரிசிக்கலாம். இந்த முருகனை ஆண்கள் உள்ளே சென்றும், பெண்கள் கொடி மரத்தருகே நின்றும்தான் தரிசிக்க முடியும்.

கோவை- சரவணம்பட்டி, ரத்னகிரி முருகன் திருக்கோயிலில், இந்திரனை அசுரர்களிடமிருந்து காக்க, அவனை தன் வாகனமாக முருகப்பெருமான் ஏற் றருளிய தலம் இது. இங்கு முருகனுக்கு வன்னி இலையால் அர்ச்சனை நடைபெறுகிறது.

சிவகங்கை- கோவனூரில் உள்ள பில்லூரில் அருள்கிறார், முருகன். சித்த வைத்தியர்கள் சிறப்பாகக் கருதும் பூநீர் இங்கு உற்பத்தியாகிறது. சித்த  மருத்துவர்களும் சித்த மருத்துவம் பெறுவோரும் தரிசிக்க வேண்டிய தலம் இது.

சென்னை- குரோம்பேட்டை, குமரன் குன்றத்தில் சுவாமிநாத சுவாமியாக முருகனை தரிசிக்கலாம்.  இங்கு நடராஜர் வலது பதம் தூக்கி ஆடுவது  குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம், குண்டுக்கரையிலும் முருகன் சுவாமிநாத சுவாமியாகத் திகழ்கிறார். மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து தரிசித்து, தீர்த்த பிரசாதம்  சாப்பிட, மனநலம் சீராகிறதாம்.

கரூர்-வெண்ணெய் மலையில் பாலசுப்ரமண்யரை தரிசிக்கலாம். நான்முகனின் கர்வத்தை அடக்க படைப்புத் தொழிலை மேற்கொண்ட முருகனுக்கு உதவ, தெய்வப் பசுவான காமதேனு இந்த வெண்ணெய் மலையை உருவாக்கித் தந்ததாம். அதில் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். இங்கு  தேனு தீர்த்தத்தில் 5 நாட்கள் நீராடி முருகனை வழிபட பிள்ளைப்பேறு கிட்டும்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அன்னைக்கும் ஏகாம்பரநாதருக்கும் இடையே சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளது, குமரக்கோட்டம். நான் முகனை சிறையிலடைத்த முருகன், பிரம்ம சாஸ்தா வடிவில் படைப்புத் தொழிலை ஆரம்பித்த தலம். நாகம் குடைபிடிக்கும் இத்தல உற்சவர் பெயர்,  குமரக்கோட்ட கல்யாணசுந்தரர்.

சிவகங்கை, குன்றக்குடி, மயில் சாபவிமோசனம் பெற்ற தலம். இங்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் நினைத்தவை நடந்தே தீருமாம்.

சேலம்- ஊத்துமலை, சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்ரமண்யர் கோயில் கொண்டிருக்கிறார். அகத்திய முனிவரால் பூஜிக்கப்பட்டவர். வணங்குவோரின்  தொழில்வளம் சிறக்க அருள்கிறார்.

கும்பகோணம்- திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில் குடுமி வைத்த, தியான கோலம்கொண்ட முருகனை தரிசிக்கலாம். நான்முகனை  இகழ்ந்ததால் பேசும் சக்தி இழந்த முருகன், இங்கு வந்து ஈசனை பூஜித்து அக்குறை நீங்கப்பெற்றார். திக்குவாய் குறை நீங்க இவர் அருள்கிறார்.

தர்மபுரி- குமாரசாமிபேட்டை, சிவசுப்ரமண்ய சுவாமி கோயிலில், தைப்பூசமன்று  தேர்த்திருவிழாவில் பெண்களுக்கே முன்னுரிமை. தேங்காய் மூடி களில் தீபமேற்றி, நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள், பக்தர்கள்.

திண்டுக்கல்- திருவாவினன்குடியில் (பழநிமலை அடிவாரம்) குழந்தை வேலாயுதரை தரிசிக்கலாம். சிவாம்சமாக முருகன் அருள்வதால் பைரவர், தட்சி ணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்கின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பராக அருளும் முருகன் கோயிலில், தம் வழக்கு பிரச்னை தீர்க்க பிராது கட்டும் வழக்கம் இருக்கிறது. அதன் மீது முருகன் உடனே ‘நடவடிக்கை’ எடுத்து பக்தர்களைக் காக்கிறார்.

திருநெல்வேலி, பண்பொழியில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் சப்தகன்னியர் எழுந்தருளியுள்ளனர். .

நாமக்கல், மோகனூர் அருகே காந்தமலையில் பாலசுப்ரமண்யர் திருக்கோயிலில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் சேர்ந்து 39 படிகளாக அமைந்துள்ளன.

வேலூர், ரத்னகிரியில் பாலமுருகன் கோயிலில் மலர்கள், தீபம், நைவேத்தியம் அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையிலேயே செய்யப்படுகிறது.

-ந.பரணிகுமார்

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்