பிறந்த தேதி பலன்கள் : ஜனவரி 12 முதல் 18 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பெற்றோர் உடல்நலத்திலே அக்கறை எடுத்துக்கோங்க. பொதுவாகவே பெரியவங்க, மிச்சவங்களுக்கு என்னத்துக்கு வீண் சிரமம்னு நினைச்சு தங்களோட உபாதைகளை சொல்ல மாட்டாங்க. நீங்களாகத்தான் அதைப் புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு உதவணுமுங்க. அந்த மகிழ்ச்சியே, அவங்க கோளாறுகளைப் போக்கிடும். இதனால, மனம் நிறைந்து அவங்க செய்யற ஆசிதான் உங்க வாழ்க்கையின் பலம். பிள்ளைகளால ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்னைகள் நிம்மதி தரும்படி முடிவாகுமுங்க. தொழில், வியாபாரம், உத்யோக இனங்கள்ல புது அணுகுமுறையை மேற்கொள்வீங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பங்குதாரர்களோட நிதானமாகப் பழகுங்க. சிலருக்கு ஒவ்வாமையால உபாதை வரலாம்; குறிப்பா சரும அரிப்பு உண்டாகும்.
இந்தத் தேதிப் பெண்கள் குடும்பத்துப் புது வரவால ஆனந்தம் அடைவீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க. துன்பம் தொலைந்து போகும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சிலருக்கு வெளிநாட்ல இருக்கற உறவுக்காரங்க அல்லது நண்பர்களால ஏற்கெனவே நீங்க கேட்டிருந்த சில உதவிகள் நிறைவேறுமுங்க. வெளிநாடுகளில் வியாபாரம் அல்லது வேலை அல்லது இங்கு பணியாற்றும் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஒர்க் அல்லது தொழிலில் பங்காளியாகப் பொறுப்புன்னு ஏதோ ஒரு தொடர்பால உங்க வாழ்க்கை வளம் பெறுமுங்க. படைப்பாளிகளுக்கு, நல்லதொரு காலகட்டமுங்க. பொதுவாகவே கலைஞர்களுக்கு பெயரும் புகழும் கூடுதல் வருமானமும் கிடைக்குமுங்க. தனியார் அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகள்லேர்ந்து விருதுகளும் கிடைக்கலாம். சிலருக்கு செரிமானப் பிரச்னை ஏற்படுமுங்க. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கோங்க. மசாலாப் பொருட்களைத் தவிர்க்கப் பாருங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு வெளிப் பழக்கத்ல மதிப்பு கூடுமுங்க. வியாழக்கிழமை இஷ்டப்பட்ட மகானை வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க; கஷ்டங்கள் காணாமல் போகும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குல தெய்வத்தை வேண்டி, எல்லா தெய்வங்களையும் வேண்டி, நல்லபடியா நடக்கணுமேங்கற பதட்டத்தோட காத்திருந்தீங்களே, அந்த சுபவிசேஷங்கள் நிறைவாக நடந்தேறுமுங்க. அதனால உற்றமும் சுற்றமும் பாராட்டும் வகையில சிறப்பு பெறுவீங்க. இதன் மூலம் பரஸ்பர புரிதல் சரியாக இல்லாததால ரொம்ப நாளா தொடர்பு விட்டுப் போயிருந்த உறவுகளும் நட்பும் புதுப்பிக்கப்படுமுங்க. பழைய கசப்பான சம்பவங்களை மறந்துட்டு சுமுகமாகப் பழகி அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்திக்கோங்க. இதனால உங்க பெண்ணுக்கோ, பையனுக்கோ எதிர்கால நன்மைகள் விளையலாமுங்க. சிலருக்கு ரத்தத் தொற்று உண்டாகுமுங்க. அது விஷப் பூச்சிக் கடியால ஏற்பட்டதாகவும் இருக்கலாம்.
இந்தத் தேதிப் பெண்களுக்குக் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகுமுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க; அச்சமின்றி வாழ்வீங்க.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
இந்த வாரம் உங்களுக்குக் கொஞ்சம் சஞ்சலத்தைக் கொடுக்கக்கூடியது உங்க பிள்ளைகளோட உடல்நலமும் அவங்க நடவடிக்கையும்தாங்க. அவங்களோட சகவாசம் காரணமாகவே அவங்க உடல்நல பாதிப்பும் ஏற்படலாமுங்க. பள்ளி, கல்லூரியில, வேலை பார்க்கற இடத்திலே அந்தப் பிள்ளைகள் எந்த வம்புக்கும் போகாதபடி மென்மையாக அறிவுறுத்துங்க. அதேசமயம், யாரையும் உதாரணமா குறிப்பிட்டுச் சொல்லி அவங்களோட ஈகோவைத் தட்டிப் பார்க்காதீங்க. வேலை தேடிகிட்டிருக்கறவங்களுக்கு உத்யோக பிராப்தம் உண்டுங்க. சிலருக்கு எதிர்பாராத வகையில் உயர் பதவியும் கிட்டுமுங்க. கழுத்து சுளுக்கு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புன்னு தெரியுதுங்க; கை வைத்தியம் வேண்டாம்; உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறுமுங்க. வெள்ளிக்கிழமை, பள்ளிகொண்ட பெருமாளை வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க. ஆனந்தம் நிலைக்கும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எளிதான, சின்ன முயற்சியிலேயே பல விஷயங்கள் அடுத்தடுத்து வெற்றிகரமாக முடியுமுங்க; அதனால நீங்களும் உங்களைச் சார்ந்தவங்களும் மகிழ்ச்சி அடைவீங்க. ‘மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது’ங்கற அளவுக்கு உங்களைப் பற்றி பிறர் விமரிசிப்பாங்க. எல்லா தடைகளும் நீங்கி, சுபவிசேஷங்களும் சுலபமாக நடந்தேறுமுங்க. உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு வந்தா, மறுக்காம ஏற்றுக்கோங்க. இதனால குடும்பத்திலிருந்து ஏற்படக்கூடிய தற்காலிகப் பிரிவைப் பொருட்படுத்தாதீங்க. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வேலைகள்ல சுணக்கம் காட்டாம முடிச்சிடுங்க. வியாபார அபிவிருத்தி, தொழில் விரிவாக்கத்துக்குத் தேவையான கடன், ஆலோசனைகள் கிடைக்குமுங்க. அடிவயிறு முதல் பாதம்வரை தெரியற சின்ன உபாதையையும் உதாசீனப்படுத்திடாதீங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆபரண சேர்க்கை கிட்டுமுங்க. சனிக்கிழமை சிவனை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க. சிறப்புகள் சீர் கொண்டு வரும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வீட்டு மனை, விவசாய நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. அது சம்பந்தமான ஆவணங்களை அந்தத் துறையில் திறமைசாலியான நிபுணர்களிடம் கேட்டு சரிபார்த்துக்கோங்க. இதனால எந்தப் பிரச்னையும் இல்லாம, முக்கியமா யாரும் நீதிமன்றத்தில் ‘ஸ்டே’ வாங்காம சொத்து உங்களுக்கு பாத்தியதையாகுமுங்க. அதேபோல பூர்வீக சொத்து விஷயத்திலேயும் உங்களோட விட்டுக்கொடுத்துப் போகிற குணத்தால, நீங்களும், சம்பந்தப்பட்ட பிற உறவுக்காரங்களும் மகிழ்ச்சியடைவீங்க. தொழிலை விரிவுபடுத்துவீங்க. சிலர் உபதொழிலையும் மேற்கொள்வீங்க. வியாபாரத்ல நல்ல முன்னேற்றம் தெரியுதுங்க; கிளைக் கடைகளை அமைப்பீங்க. அஜீர்ணம், கழிவுப் பாதையில் பிரச்னைன்னு ஏற்படலாம்.
திருமணத்துக்காகக் காத்திருக்கும் இந்தத் தேதிப் பெண்களுக்கு, நல்ல வாழ்க்கைத் துணை அமைவாருங்க. புதன்கிழமை பெருமாளை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க; பெருமைகள் கூடும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கூடவே இருந்து குழி பறிக்கற ஆட்களை எங்கே காணோம்னு நீங்க தேட வேண்டியிருக்கும். உங்களோட விழிப்புணர்ச்சி புரிஞ்சு அவங்கள்லாம் தாமாகவே விலகிடுவாங்க. வியாபாரம், தொழில்ல உங்களோட நேர்மையான போக்கு, காலத்துக்கு மதிப்பு கொடுக்கற பண்பு, சொன்ன சொல்லக் காப்பாத்தற துடிப்பு எல்லாம், எதிர்ப்புகளைத் தகர்த்தெறிஞ்சுடுமுங்க. உத்யோகத்ல, மேலதிகாரி உங்களை மற்றவங்களுக்கு உதாரணமா காட்டற அளவுக்கு உங்க மதிப்பு கூடுமுங்க. ஏற்கெனவே அஜீர்ணக் கோளாறு இருக்கறவங்க உணவில் கட்டுப்பாடு வெச்சுக்கணுமுங்க. பார்ட்டி, பண்டிகை, பிற விசேஷங்கள்ல உணவு ஐட்டங்களை மூக்கும் கண்களும் நாக்கும் விரும்பினாலும், கைகளைக் கட்டுப்படுத்தி வையுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்குப் புதுப் பொலிவு கூடுமுங்க. செவ்வாய்கிழமை பார்வதிதேவியை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க. சென்றவிடமெலாம் சிறப்பு பெறுவீங்க.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்தப் பிரச்னையையும் முன்கூட்டியே யோசிச்சு, வியூகங்களை வகுத்துக்கற சாமர்த்தியம் உங்களுக்கு உண்டுங்க. ஆனா, சிலசமயம் அதீத சுயநம்பிக்கையால முரண்பாடான செயல்கள்ல ஈடுபட்டு அவமானப்படவும் வேண்டியிருக்குமுங்க. ‘எல்லாம் தெரியும்’ங்கற மனோபாவத்திலேர்ந்து கொஞ்சம் விலகி வாங்க. அனாவசிய சந்தேகங்களை வளர்த்துக்காதீங்க. கற்பனை சம்பவங்களை உருவாக்கிகிட்டு கூட இருக்கறவங்களை அவஸ்தைபடுத்தாதீங்க. ஜால்ரா தட்டும் பேர்வழிகளோட புகழ்ச்சியில மயங்கும்போது, அதை அவங்க சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்திகிட்டு உங்களை தர்மசங்கடத்திலே விட்டிடுவாங்க, எச்சரிக்கையா இருங்க. ஒற்றைத் தலைவலி பிரச்னை வருமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் சிலருக்கு சமுதாயத்ல புது அங்கீகாரம் கிடைக்குமுங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க; நிம்மதி நிலவும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குடும்பத்ல சந்தோஷமான சுபவிசேஷங்கள் அடுத்தடுத்து வரும்போது மகிழ்ச்சியா இருந்தாலும், செலவை எப்படி சமாளிக்கப்போகிறோம்ங்கற கவலை தொற்றிக்கொள்வதும் நியாயம்தாங்க. ஆனா, இந்த செலவுகளுக்குத் தேவையான பணம், கடனாகவோ, கைமாற்றாகவோ, ஏன் அன்பளிப்பாகவோகூட கிடைக்குமுங்க. ஆன்மிக ஆர்வம் அதிகரிக்குமுங்க. இஷ்டப்பட்ட புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போய் வருவீங்க. சொந்த ஊரில் ஏதேனும் கோயில் புனரமைப்பு வேலைகள் இருக்குமானால், உடனே அங்கே போய் முடிந்த உதவிகளைச் செய்வீங்க; பிறரையும் அந்த சேவையில் ஈடுபடுத்துவீங்க. இதனால சமூகத்ல உங்களுக்குப் புது அங்கீகாரம் கிடைக்குமுங்க. சிறு விபத்து, அடிபடல்னு ஏற்படலாம்; கவனமா இருங்க.
இந்தத் தேதிப் பெண்கள் கோபத்தைக் குறைச்சுக்கணுமுங்க. திங்கட்கிழமை கணபதியை வழிபட்டு முடிந்த அளவு அன்னதானம் செய்ங்க; முயற்சிகளெல்லாம் திருவினையாகும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!