SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜனவரி 5 முதல் 11 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புது வீடு கிரகபிரவேசம், திருமணம் போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகளுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்க. இன்னும் பத்து, பதினைந்து நாட்கள்ல நிறைவேறப் போகிற அந்த சந்தோஷத்துக்கு இப்பவே உறவுக்காரங்களும் நண்பர்களும் வாழ்த்தும், நல் யோசனைகளும் தருவாங்க. இது ஒரு வாழ்நாள் சாதனைங்கறதால நெருங்கியவங்களோட பாராட்டுகளும் உங்களைக் குளிர்விக்குமுங்க. உறவு வட்டாரத்ல உங்க மதிப்பும் மரியாதையும் கூடுமுங்க. அதேசமயம் பிள்ளைகளோட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. வருட ஆரம்பத்திலேயே விடுபட்டிருக்கும் குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றிடுங்க. உத்யோகஸ்தர்கள் புதுப் பொறுப்பும் கூடுதல் ஆதாயமும் பெறுவீங்க. தொழில், வியாபாரத்ல இருந்த போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்குமுங்க.  வயிறு, கழிவுப் பகுதிகள்ல பிரச்னை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புதுத் தெம்போடும் சிக்கலில்லாத உடல்நலத்தோடும் வளைய வருவீங்க. பள்ளிகொண்ட பெருமாளை வணங்குங்க; புதிய உயரத்தை அடைவீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமுங்க. மனதை அலைபாய விடாம ஒருமுகப்படுத்தி திறமையை நிரூபிப்பீங்க. மேலதிகாரிக்கும் உங்களுக்கும் இருந்த மனப்போர் நீங்கிடுமுங்க. ஈகோ காரணமா உங்களைப் புறக்கணிச்சிருந்த அவர், உங்க ஆற்றல் பலராலும் பாராட்டப்படறதைப் பார்த்து, உங்களுக்கு சாதகமா செயல்பட ஆரம்பிப்பாருங்க. வரவுக்கு மீறிய செலவுகள் கொஞ்சம் கவலையைக் கொடுக்குமுங்க; ஆனா, இதெல்லாம் பறக்கும் மேகங்களைப் போலத்தான், சீக்கிரமே நிலைமை சீராகிடும். வாகனப் பழுதை அலட்சியப்படுத்தாதீங்க; உடனே சரி பண்ணிக்கோங்க. குடும்பத்ல தடைகள் விலகி சுபவிசேஷங்கள் மனநிறைவாக நடந்தேறுமுங்க. எந்த முதலீட்டையும் குடும்பப் பெரியவங்க ஆலோசனை கேட்டே செய்ங்க. சைனஸ் பிரச்னை ஏற்படுமுங்க; சிலர் மூட்டு வலியால அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது உத்தியால புகழ் பெறுவீங்க. அனுமனை வழிபடுங்க; ஆற்றல் பெருகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாம்; சிலருக்கு ஒவ்வாமை உபாதை ஏற்படுமுங்க. குடும்பத்ல புதிய வரவு சந்தோஷம் தருமுங்க. பிள்ளைப்பேறுக்காக ஏங்கிகிட்டிருக்கறவங்களுக்கு அந்த பாக்கிய அறிகுறி தெரியுமுங்க. ஏதாவது காரணத்துக்காகப் பிரிஞ்சிருக்கறவங்க மீண்டும் வந்து சேருவாங்க. இது உறவுக்கு மட்டுமல்லாம, நட்புக்கும் பொருந்துமுங்க. ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டிருக்கற வேலை வாய்ப்பும் கிட்டுமுங்க. எந்த சந்தர்ப்பத்திலேயும் பேச்சில் கடுமையைக் காட்டாதீங்க. உங்க தைரிய முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. சிலர் வாழ்க்கைத் துணை உதவியால சிறப்புகள் பெறுவீங்க; அதனால அவங்களுக்கு அனுசரணையா நடந்துகிட்டு அவங்களை மனம் மகிழச் செய்யுங்க. தொலைதூரப் பயணத்ல வேற்று மத மனிதரால் நன்மைகள் விளையுமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆபரணங்கள் சேருமுங்க. பெருமாளை வழிபடுங்க; பெருமை நிலைக்கும்.

4 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


மனசில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. உங்க நியாயமான உரிமைக்காகப் போராடுவீங்க; அதில் வெற்றியும் பெறுவீங்க. உத்யோகத்ல உங்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சில சலுகைகள், ஆதாயங்கள் எல்லாம் மறுபடி கிடைக்குமுங்க. தொழில்ல இருக்கறவங்க, புதிதாக அறிமுகமாகும் கூட்டாளியால நன்மைகள் அடைவீங்க. தொழிலை விஸ்தரிக்கவும் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் புது யோசனைகள் வந்து சேரும்; தைரியமா இறங்குங்க. குலதெய்வ வழிபாடு பாக்கியிருந்தா அதை முடிச்சு, அந்த தெய்வத்தோட அருளையும் பெறுங்க; வளம் சேரும். சில சந்தர்ப்பங்கள்ல விட்டுக்கொடுத்துப் போய் சுமுகமான சூழலை உருவாக்கிப்பீங்க. மகான் தரிசன வாய்ப்பு சிலருக்குக் கிடைக்குமுங்க; மனம் அமைதியாகும். உணவுக் குழாயில் சிறு பிரச்னைகள் வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் தைரியமாகப் பேசி, சில விஷயங்களை சாதிப்பீங்க. புற்றுள்ள கோயில் அம்மனை வழிபடுங்க; புது வாழ்வு மலரும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொலைதூரச் செய்திகள் நன்மை சுமந்து வருமுங்க. சிலர் வெளிநாட்டிப் பயணம் மேற்கொள்வீங்க. திடீர், திடீர்னு மனக் குழப்பம் ஏற்படுமுங்க. இது தேவையில்லாத கற்பனையால உருவாகிறதுதான். தினமும் பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி செய்து மனசை ஒருநிலைப்படுத்திக்கோங்க. எந்த விஷயத்துக்கும் உங்கமேல உண்மையான அக்கறை இருக்கறவங்ககிட்ட மட்டுமே ஆலோசனை கேளுங்க. சிலருக்குப் பொது அமைப்பு, அல்லது அரசாங்கத்திலேர்ந்து பாராட்டு, சேவைப் பதவின்னு கிடைக்கலாமுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில்ல பாராட்டும்படியான முன்னேற்றம் உண்டுங்க. புது அறிமுகங்களால ஆனந்தமும் அனுகூலமும் அடைவீங்க. இதை முறையாகப் பயன்படுத்திக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யார் பேச்சையும் கேட்டு குழப்பமடையாம, தனியா, தீர்மானமா முடிவெடுங்க; வெல்வீங்க. மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மேலும் மேன்மை அடைவீங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

டென்ஷன் குறையுமுங்க. முடியுமோ, முடியாதோன்னு கலங்கிகிட்டிருந்த விஷயங்கள்லாம், நீங்க எதிர்பார்த்ததற்கும் மேலாக, சிறப்பாக முடியுமுங்க. நீண்ட நாட்களாக திருமணத்துக்காகக் காத்திருந்தவங்க இனிமையான செய்தி கேட்பீங்க; மனம்போல மாங்கல்யம் அமையும். சரியான வேலை அமையாதவங்க, தெரியாத தொழில்லகூட, சரியான கூட்டணி அமைச்சு வெற்றி பெறுவீங்க; இதை முறையாகப் பயன்படுத்திக்கோங்க. சிலருக்கு அசையும், அசையாப் பொருள் சேர்க்கை ஏற்படுமுங்க. வேற்று மொழி, மதத்தாரால் ஆதாயம் அடைவீங்க. சிலர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. அடி வயிறு முதல் பாதம்வரை ஏதேனும் குறைபாடு தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. ரத்தக் கொழுப்பையும் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சந்தோஷமான செய்தி கேட்பீங்க. ஐயப்பனை வழிபட்டு, அனைத்து நலன்களையும் பெறுங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலபேர் வீட்டு மனை அல்லது புது ஃப்ளாட் வாங்குவீங்க. அந்த சொத்து சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் சரிபார்த்துக்கோங்க. கால்நடைகளை வாங்கவோ, விற்கவோ இது மிகச் சரியான காலகட்டமுங்க. பூர்வீக சொத்து சிக்கல்கள் விலகி, உங்க பங்கு எந்த பங்கமும் இல்லாம வந்து சேருமுங்க. நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர்களை இப்ப சந்திச்சு மகிழ்வீங்க. இந்த சந்திப்பு, சில கூட்டு முயற்சிகளுக்கு வழிவகுக்குமுங்க. குடும்ப விவகாரங்கள்ல அந்நியர் தலையீட்டை அனுமதிக்காதீங்க. அதேபோல நீங்களும் பிறர் குடும்ப விஷயங்கள்ல ஆர்வம் காட்டாதீங்க. இந்தத் தேதி இளைஞர்கள் பெருமைக்காக வாகனத்ல வித்தை காட்டாதீங்க; வேதனைதான் மிஞ்சும். சிலர் ஒற்றைத் தலைவலியாலும், சிலர் முதுகு எலும்பில் பிரச்னையாலும் பாதிக்கப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பால்ய தோழிகளை சந்திச்சு பரஸ்பரம் ஆதாயம் பெறுவீங்க. விநாயகரை வழிபட்டு, வெற்றிவாகை சூடுங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீணான கோபத்தைக் கட்டுப்படுத்தணுமுங்க. நெருங்கி வரும் நன்மைகளை உங்க முன்கோபம் விரட்டிடுமுங்க. எதுக்கும் ஆவேசப்படாதீங்க. பழிவாங்கும் எண்ணத்தையும் அறவே ஒழிச்சிடணுமுங்க. கடந்த காலத்ல நீங்க பழி வாங்கிட்டதா நினைச்சிருந்தவங்க இப்ப உங்களுக்கு மேலான இடத்ல இருக்கறதை மறக்காதீங்க. இப்போதைக்கு குரூர சந்தோஷம் கிடைக்கும்னாலும் எதிர்காலத்ல இந்த பழி வாங்கற நினைப்பு, உங்க குடும்பத்தையே பாதிக்குமுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில் இனங்கள்ல உங்க தகுதிக்கேற்ற ஆதாயத்தை எதிர்பார்க்கறதுதான் நல்லது. குடும்பத்ல சுபவிசேஷங்கள் கூடிவருதுங்க; செலவுக்குத் தயாரா இருங்க. நல்ல மனிதர் சந்திப்பு உங்க வாழ்க்கைப் பாதையை மாற்றுமுங்க; இதுக்கும் தயாரா இருங்க. சிலருக்கு சுவாசக் கோளாறு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசிய கோபத்தால நன்மைகளை இழக்காதீங்க. தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, தகாத செயல்கள்லேர்ந்து விடுபடுங்க.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பணவரவில் இருந்த சுணக்கம் விலகுமுங்க. வராதோன்னு நினைச்சுகிட்டிருந்த தொகை எதிர்பாராத வகையில வந்து சேருமுங்க. திடீர்னு ஏற்படக்கூடிய செலவை நினைச்சு மனசு கலங்கும்; ஆனா எங்கிருந்தாவது பணம் வந்து மனசைத் தேற்றுமுங்க. சிலருக்கு சொந்த வீட்டை வாடகைக்கு விடறதிலே சிக்கல் ஏற்பட்டிருந்திருக்கலாம்; அந்த பிரச்னை தீர்ந்திடுமுங்க. உண்மையான, உறுதியான முயற்சிகள் நன்மைகளைத் தருமுங்க. பூர்வீக சொத்து கைக்குக் கிடைக்குமுங்க. அரசுக்கு எதிரான விஷயங்கள்ல யார் தூண்டுதலாலேயும் ஈடுபடாதீங்க; வீணான உபத்திரவத்தை விலை கொடுத்து வாங்காதீங்க. யாரையும் புறஞ்சொல்லாதீங்க; அது ‘பூமராங்’காக மாறி உங்களையே தாக்குமுங்க. சிலருக்கு நரம்பு உபத்திரவம் வரும். சிலருக்குக் கண்ணோடு சேர்ந்து தலைவலி ஏற்படும்.

இந்தத் தேதிப் பெண்கள் எதிர்பாராத இடத்திலேர்ந்து மதிப்பு வாய்ந்த அன்பளிப்பு பெறுவீங்க. ஆஞ்சநேயரை வழிபட்டு நெஞ்சுரம் பெறுங்க.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்