SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலுமிச்சம்பழ சாதம்

2017-08-04@ 08:53:32

தேவையானவை

அரிசி - 2 கப்
எலுமிச்சம்பழம் - 2
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

பொடி செய்ய...

வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவையானது.

தாளிக்க...


கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு - 5
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை:

அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்) ஊறவைக்கவும். அப்படியே குக்கரில் வைத்தால் உதிரியாக வரும். சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள் தூள், நல்லெண்ணெய் கலந்து ஆற வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுக்க வேண்டும். சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்க வேண்டும். உப்பை வறுக்க வேண்டாம். மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவ வேண்டும். கடைசியாக தாளிக்க வேண்டிய வற்றை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்