தேங்காய் சாதம்
2017-08-04@ 08:51:56

தேவையானவை
பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
மிளகாய் வற்றல் - 2
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையானது
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை
அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும். சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல், தாளித்த கடுகு,உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். கலந்த சாதங்களை அப்பளம், வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். தவிர்த்து சிறிது மோர்க் குழம்புடனும் சாப்பிடலாம்.
மேலும் செய்திகள்
அதிர்ஷ்டம் தருவாள் அஷ்டலட்சுமி
குறைவில்லா செல்வம் அருளும் கோல்ஹாபூர் மகாலாட்சுமி
செல்வம் பெருக்கும் வரலட்சுமி விரதம்
பண பலம் தருவாள் பத்மாவதி
மகத்தான வாழ்வளிப்பாள் மகாலட்சுமி
முத்தான வாழ்வு தரும் மும்பை மகாலட்சுமி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!