SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உறுதியாக யோசிக்கறதும் தைரியமா செயல் படறதும்தான் இந்த வாரம் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லுமுங்க. இந்த குணாதிசயத்தால, நீங்க தொட்டதெல்லாம் துலங்கற வாய்ப்புகள் அதிகரிக்குமுங்க. அதே சமயம், இந்த வெற்றிகள் ஆணவத்தைத் தரலாம்; எச்சரிக்கையா இருங்க. உயர்வு வரும்போது பணிவு வரவேண்டும்ங்கறதை மறக்காதீங்க. சட்டத்துக்குப் புறம்பாக செயல்படறவங்களோட நட்பு நெருங்காம பார்த்துக்கோங்க. குடும்ப உறுப்பினர்கள்கிட்ட இனிமையாகப் பேசுங்க. இது, உங்களோட பூர்வீக சொத்து விஷயத்ல உங்களுக்கு சாதகமான விளைவுகளை உருவாக்கித் தருமுங்க. உத்யோகஸ்தர்கள் மேன்மை பெறுவீங்க. ஏற்கெனவே கண்ல பிரச்னை இருக்கறவங்க மருத்துவத்தை விடாம தொடருங்க.

இந்தத் தேதி பெண்கள் உடன்பிறந்தாரிடம் பாரபட்சமில்லாம பழகுங்க; சின்ன வாக்குவாதமும் பெரிய சிக்கலை உண்டாக்கிடும். துர்க்கை வழிபாடு, தடுமாற்றங்களை விலக்குமுங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மேலும் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தெரியுதுங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு அவங்க மனம்போல நல்ல வேலை கிடைக்குமுங்க. அதேபோல புதுசா தொழில்ல ஈடுபட நினைக்கறவங்களுக்கும் இது தோதான காலகட்டமுங்க. எந்தப் பிரச்னைக்கும் முதல்ல தோணும் யோசனையையே செயல்படுத்துங்க. அடுத்தடுத்து யோசனை செய்தோ, யார்கிட்டேயாவது கேட்டோ குழப்பத்தை உருவாக்கிக்காதீங்க. மன உறுதியும் தன்னம்பிக்கையும் வளர, புகழும் பெருமையும் மேலோங்குமுங்க. படைப்பாளிகளுக்கு அவர்கள் எதிர்பாராத முகாம்களிலிருந்தெல்லாம் பாராட்டும் வாழ்த்துகளும் வருமுங்க. நட்பு வட்டாரத்லேர்ந்தும் உறவினர்கள் சிலரும் உங்ககிட்ட யோசனை அல்லது உதவி கேட்டு வருவாங்க. அவங்களுக்கு முடிந்ததை உடனே செய்ங்க. அஜீர்ணக் கோளாறு ஏற்படலாம்.

இந்தத் தேதி பெண்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறுமுங்க. அனுமன் வழிபாடு, ஆனந்தம் நிலைக்கச் செய்யுமுங்க.  

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம் மனசைக் கட்டுப்படுத்திக்கணுமுங்க. உங்களால ஆதாயம் பெறுகிறவங்ககிட்டேயிருந்து நீங்க எதிர் மரியாதை எதிர்பார்க்காதீங்க. எந்த நைச்சியமான பேச்சிலும் மயங்கிடாம, உங்களுக்குன்னு விதிக்கப்பட்டிருக்கற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்க வேலையைப் பாருங்க. இரக்கத்துக்கும் இடம் கொடுக்க வேண்டாங்க. தொழில், வியாபாரத்ல இருக்கறவங்க, எந்த ஒப்பந்த நிபந்தனைகளையும் சரியாகப் படித்துப் பார்த்துட்டு, அப்புறமா கையெழுத்திடுங்க. அதிக வேலை அல்லது ஏதேனும் மன உளைச்சல் காரணமா சிலசமயம் நேரம் தப்பி சாப்பிட வேண்டியிருக்கும். அந்த சமயத்ல எளிதாக ஜீரணமாகக்கூடிய சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க. குடும்பத்தாரோடு இன்பச் சுற்றுலா அல்லது உறவில் விசேஷங்களுக்கான பயணம் மேற்கொள்வீங்க. ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலின்னு பாதிப்புகள் வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களின் திருமணக் கனவு நிறைவேறுமுங்க. விநாயகர் வழிபாடு நல்வழி காட்டும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


எந்த விஷயத்துக்கும் குடும்பத்துப் பெரியவங்க யோசனையைக் கேட்டுக்கறது நல்லதுங்க. முக்கியமா பூர்வீக சொத்து விஷயத்ல அவங்க ஆலோசனை உங்களுக்கு ஆதாயங்களை ஈட்டித் தருமுங்க. ஆனா, யார் பேச்சையாவது கேட்டுகிட்டு அவங்க யோசனைக்கு முரணாக நடந்துகிட்டீங்கன்னா நஷ்டம் உங்களுக்குதான். தொழில், வியாபாரத்ல புது அணுகுமுறையால சிறப்புகள் பெறுவீங்க. உத்யோகத்ல உங்க திறமையை நிரூபிச்சு, சாதனையும் படைப்பீங்க. அதுக்கு சரியான வெகுமதியையும் அடைவீங்க. அதேசமயம் சக ஊழியர்களோடு அனுசரணையாகப் போகிறதும் கூடுதல் நன்மை தருமுங்க. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க; அதிலே ஏற்றத் தாழ்வு இருந்தா உரிய மருத்துவத்தை அலட்சியப்படுத்தாம எடுத்துக்கோங்க.  

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால பிறரைக் கவருவீங்க. பெருமாள் வழிபாடு பேரின்பம் தரும்.   

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


என்னன்னே புரியாம மனசை சஞ்சலப்படுத்திகிட்டிருந்த பய உணர்வு நீங்கிடுமுங்க. அதனால புதுத் தெம்பும் உற்சாகமும் பெருகுமுங்க; ஈடுபடற செயல்களும் நிறைவாகி, நன்மைகளைப் பெருக்குமுங்க. புது அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையாகப் பழகுங்க. குறிப்பாக முதன் முதலாக வெளிநாட்டுக்குப் போகக் கூடியவங்க, அந்த நாட்டிலே முன் அறிமுகமில்லாதவங்களை நம்பி எந்த விஷயத்தையும் சொல்ல வேண்டாங்க. ஏற்கெனவே அங்கே இருக்கக்கூடிய உங்க நண்பர்கள் அல்லது உறவினர்கிட்ட மட்டும் உங்க தேவைகளைச் சொல்லி, சந்தேகங்களைக் கேட்டுக்கோங்க. குடும்பத்ல ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துகிட்டா, அந்த ஒற்றுமையால வரக்கூடிய ஆதாயங்கள் எதிர்காலத்துக்கும் பேருதவியாக இருக்குமுங்க.

காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதை வருமுங்க; ஒவ்வாமை உபத்திரவமும் தெரியுதுங்க. பெருமாள் வழிபாடு, பெருமைகளை வளர்க்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மாற்றங்களை ஏற்றுக்கோங்க. வீடு, உத்யோகம், தொழில்னு எந்த மாற்றம் வந்தாலும் அதை இன்முகத்தோடு ஏற்றுக்கறது, இப்போதைக்குக் கொஞ்சம் மனக்கசப்பாக இருந்தாலும் எதிர்காலத்ல ஏராளமான நன்மைக்கு வழிவகுக்குமுங்க. பிள்ளைகளோட நடவடிக்கைகளை, அவங்க சந்தேகப்படாதபடி கவனிங்க. அவங்க படிப்பில் கவனம் செலுத்தாம, கேளிக்கை, கூடா நட்பின் சகவாசம்னு திசை விலகிப் போக வாய்ப்பு இருக்குங்க. எச்சரிக்கையா அவங்களை நல்வழிக்குத் திருப்புங்க. வேலைக்காக முயற்சி செய்யற பிள்ளைகளுக்கு, ஈகோ பார்க்காம, சிபாரிசு பிடித்துக் கொடுங்க. அதேபோல திருமணத்துக்காகக் காத்திருக்கற பிள்ளைங்க, காதலால மனசை அலைபாய விடலாமுங்க. எப்படியிருந்தாலும், நீங்க எதுக்கும் கோபப்படாம, நிதானமா அறிவுறுத்துங்க. கழிவுப்பாதை, முதுகு எலும்பில் உபாதை உண்டாகுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் கோபத்தைக் கிட்டவே சேர்க்காதீங்க. சூரிய வழிபாடு, எல்லா இருளையும் விலக்குமுங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொறுமை எத்தனை நன்மை தந்ததுன்னு ஏற்கெனவே சில அனுபவங்களால நீங்க உணர்ந்திருப்பீங்க. திடீர் செலவுகளால ஏற்படக்கூடிய பொருளாதார பிரச்னையாக இருக்கட்டும், சாதாரணமாகப் பேசினாலேயே அதில் உள்ளர்த்தம் கண்டுபிடிச்சு உங்க மேல பகைமை பாராட்டக்கூடிய சந்தர்ப்பங்களாக இருக்கட்டும், எதிர்பாராத வகையில பிள்ளைகளால உருவாகக்கூடிய பிரச்னைகளாக இருக்கட்டும், இந்த நிலைமைகளையெல்லாம் நீங்க உங்களுக்கு ஏற்பட்டிருக்கற அனுபவ அறிவால சமாளிச்சுடுவீங்க. உங்களோட இந்த நடவடிக்கைகளுக்குப் பெரியவங்க ஆதரவா இருப்பாங்க. குலதெய்வ வழிபாடு பாக்கியிருந்தா  உடனே நிறைவேற்றிடுங்க; பிரச்னைகளின் வீரியம் தணியும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள், புதிய அறிமுகங்கள்கிட்ட கவனமா இருங்க. புற்றுள்ள அம்மன் கோயில் வழிபாடு, பிரச்னைகளைப் பொடிப் பொடியாக்கிடுமுங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் ஏதேனும் சின்ன சந்தேகம்னு ஏற்பட்டா, உடனே, தயங்காம அதை நிவர்த்தி பண்ணிடுங்க. இல்லாட்டி, அனாவசிய பிளவுகளுக்கும் பிரிவுகளுக்கும்கூட வழிவகுக்கறா மாதிரி ஆகிடுமுங்க. அதேசமயம், குடும்பத்திலேயும் வெளிவட்டாரப் பழக்கத்திலேயும் உங்க மதிப்பு கூடுமுங்க. நீங்க சோர்ந்திருந்தபோது ஆறுதல் சொன்னவங்களை, கீழே விழுந்திருந்தபோது கைதூக்கி விட்டவங்களை அலட்சியப்படுத்தாதீங்க. அவங்களோட மனசு அதனால வாடினா, அது உங்க வாழ்க்கையிலும் பிரதிபலிக்குமுங்க. எப்பவும், உங்க தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்காதீங்க. பெருந்தன்மையா அதை ஒப்புகிட்டீங்கன்னா உங்கமேல இருக்கற மரியாதை இன்னும் உயருமுங்க. சிலர் புதுவீடு வாங்குவீங்க; அல்லது வசதிமிக்க வேறு வீட்டுக்குக் குடி போவீங்க. கால்கள்ல வீக்கம் அல்லது அடிபடுதல்னு உண்டாகுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எதுக்கும் கோபப்படாதீங்க. பார்வதி தேவி வழிபாடு, பாதகமெல்லாம் விலக்கும்.
 
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சேமிப்புதான் நிறைய இருக்கேன்னு, அதிகமா செலவு செய்யறதை, இப்ப வேணா பிறர் மெச்சுவாங்களே தவிர, பின்னால உங்களுக்கு ஏதேனும் பணப் பிரச்னைன்னா அவங்க யாரும் உதவிக்கு வரமாட்டாங்க; புரிஞ்சுக்கோங்க. இந்த அனாவசியச் செலவுகளை குடும்பத்தார் நிர்ப்பந்தத்தால செய்யறதானா, அவங்களுக்கு விளக்கிச் சொல்லி, உபரி செலவுகளைக் கட்டுப்படுத்தப் பாருங்க. ஏற்கெனவே வாங்கி வெச்சிருக்கற பொருட்கள்ல எத்தனை உபயோகமா இருக்கு; எத்தனை பரண்மேல தூங்குதுன்னு கணக்குப் போட்டுக் காட்டுங்க. இந்த உத்தியை தொழில், வியாபாரம், உத்யோக இடங்கள்லேயும் நீங்க பயன்படுத்தினா அங்கெல்லாம் பணமும் பொருளும் மிச்சப்படறதோட, உங்க இமேஜும் கூடுமுங்க. சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படலாம்; இது வழக்கமா பயன்படுத்தற வாசனை திரவியத்தை மாற்றுவதாலேயும் உண்டாகும்.

இந்தத் தேதிப் பெண்கள் பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து உங்க பர்ஸை மெலிய வைக்காதீங்க. சிவ வழிபாடு, வாழ்க்கையை சீர்படுத்தும்.            
                                              
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்