பிறந்த தேதி பலன்கள் : டிசம்பர் 22 முதல் 28 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சந்தோஷம் பொங்கும் வாரமுங்க. வீட்ல சுபவிசேஷங்கள் மனம்போல நிறைவேறி, தொடர்பு விட்டுப் போயிருந்த உறவுகளையும் நட்பையும் இணைத்து வைக்குமுங்க. இதனால எதிர்கால நன்மைகளுக்கு அச்சாரம் கிடைக்குமுங்க. மனசில் புது தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. வேலை தேடிகிட்டிருக்கற இளைஞர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப, விரும்பிய வேலை கிடைக்குமுங்க. சிலர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. வெளிநாட்டில் தொழில் அல்லது வியாபாரம் மேற்கொண்டிருக்கறவங்களுக்கு ஏற்பட்டிருக்ககூடிய சிக்கல்கள் தீர்ந்துவிடுமுங்க. ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேர்வதால் பிரச்னை வரலாமுங்க. சிலருக்கு அடிவயிற்றில் உபாதை ஏற்படும்.
இந்தத் தேதிப் பெண்களுக்கு தடைகள் விலகி, பல ஆதாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சேருமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; விருப்பங்கள் எல்லாம் ஈடேறும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், எதிர்பாராத வகையில் ஆதாயமாக மாறிவிடுமுங்க. அது சம்பந்தமான பிணக்குகள், சில அச்சுறுத்தல்கள் எல்லாம்
காணாமல் போயிடுமுங்க. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்னைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகி, அன்யோன்யம் மேலோங்குமுங்க. உங்க
வார்த்தைக்கு மதிப்பு கூடுமுங்க. தொடர் சங்கடங்கள் அறுபட்ட சங்கிலிபோல தனித்தனியே கழன்று விலகிவிடுமுங்க. பெற்றோரிடம் இனிமையாகப் பழகுங்க. அவங்களோட ‘தொணதொணப்பு’ சில சமயம் எரிச்சலாகத் தோன்றினாலும் அதெல்லாம் வயசானதன் ஆதங்கம்தான்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க - உங்களுக்கும் அதுபோன்ற நிலைமை வரலாம்! பிள்ளைகளை எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு மென்மையாக அறிவுறுத்துங்க. நரம்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உபாதைகள் தெரியுதுங்க - மருத்துவரைப் பார்த்திடுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் சுபசெய்திகளால சந்தோஷம் அடைவீங்க. வெள்ளிக்கிழமை சிவனை வழிபடுங்க; வெற்றிகள் தொடரும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உடல் உபாதைகள் மனசையும் பாதிக்கறதால, நீங்க இந்த வாரம், பேசறது, பழகறது, செயல்படறது எல்லாமே எரிச்சலின் வெளிப்பாடாகவே இருக்குமுங்க. ஆனா, வெளி விவகாரம் எதுவுமே உங்களுக்கு எதிராக இல்லேங்கறதுதாங்க உண்மை. நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கத்தைப் பழகிக்கோங்க; உடலும் உள்ளமும் லேசாகும். உத்யோகத்ல மேலதிகாரிகிட்ட யார் பற்றியும் புறஞ்சொல்லாதீங்க. ஊருக்கு நீங்க சொல்ற உபதேசங்கள்ல கொஞ்சமாவது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க. குடும்பத்தில் சில தவறுகளைத் திருத்த கடுமையாக நடந்துக்காதீங்க. குடும்பப் பெரியவங்க பேச்சைக் காதுகொடுத்துக் கேளுங்க. சிலருக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து கொஞ்சம் நிம்மதி கொடுக்குமுங்க. கண்கள்ல ஏற்கெனவே உபத்திரவம் இருக்கறவங்க முறைப்படி மருத்துவம்
பார்த்துக்கோங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டையில் பிரச்னை வரலாம்.
ஞாயிற்றுக்கிழமை அனுமனை வழிபடுங்க; அனுதினமும் ஆனந்தம்தான்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஆதாயம் கிடைக்குதுன்னா மட்டும் இனிமையாகப் பேசறது, லாபமில்லேன்னு தெரிஞ்சா கடுமையாகப் பேசறதுங்கற மனோபாவத்தை மாத்திக்கணுமுங்க. சிலசமயம் தகுதிக்கு மீறிய பெருமை தோணுமுங்க. ஆனா எந்த கட்டத்திலும் அடக்கமும் பணிவும்தான் உயர்வு தரும்ங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.
யாரிடமும் எதையும் பேசுமுன்னால் ரொம்பவும் யோசிச்சுப் பேசுங்க; அப்புறமா வருத்தப்பட்டுப் பயனில்லீங்க. யாருக்கும் ஜாமீன், உத்தரவாதம் கொடுக்காதீங்க. சிலருக்கு எலும்பு, மூட்டுகளில் பிரச்னை வரலாம்; சிலர் அஜீர்ணக் கோளாறால் பாதிக்கப்படலாம். முழு உடல் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க - இது எதிர்கால உடல் பிரச்னைகளை சமாளிக்க உதவுமுங்க. தொழில், வியாபாரம், உத்யோகத்ல புது முயற்சிகளை ரகசியமா செய்யறது நல்லதுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு சிலசமயம் பேச்சே பகையாகும். சனிக்கிழமை சிவனை வணங்குங்க; சங்கடங்கள் சட்டென மறையும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தொடர்ந்து நல்ல செய்திகளைக் கேட்பது மனசுக்கு உற்சாகமளிக்குமுங்க. வெளிநாட்டுக்குப் போகிறவங்க, தங்களோட உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக்கோங்க; அங்கே, அந்நாட்டு மக்களிடம் ரொம்பவும் எச்சரிக்கையாகப் பழகுங்க. யாரையும் பகைச்சுக்காதீங்க. யார்கிட்டேயிருந்து, எந்த உதவிக்காக போய் நிற்கவேண்டியிருக்கும்னு இப்ப உங்களுக்குத் தெரியாது. புதிய திட்டங்களுக்கு அஸ்திவாரம் போட்டுக்கலாமுங்க; இதனால உடனடி எதிர்காலத்ல ஆதாயங்களை அறுவடை செய்ய முடியுமுங்க. நல்ல நண்பர்களோட ஆலோசனை உங்க முயற்சிகளை வெற்றியாக்குமுங்க. உறவுக்காரங்களாலும் ஏற்றம் உண்டுங்க. உத்யோகத்தில் ஆதாயங்கள் கூடுமுங்க; இடமாற்ற உத்தரவு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக்கோங்க; இது நல்லதுக்கே. சிலருக்கு ஹார்மோன் குறைபாடு வரலாம்.
இந்தத் தேதிப் பெண்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துன்பங்கள் தொலைந்துபோகும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பெற்றோர் மற்றும் குடும்பத்துப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு புது முயற்சிகள்ல ஈடுபடுங்க. முக்கியமா ஏதேனும் பெரிய முதலீடு செய்யறீங்கன்னா அவங்களைக் கலந்தாலோசிக்கத் தயங்காதீங்க. உத்யோகத்ல உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க சொல்ற யோசனையைக் காது கொடுத்துக் கேளுங்க. அதேபோல மேலதிகாரி சொல்ற யோசனை அபத்தமா இருந்தாலும் அதை மிச்சவங்ககிட்ட சொல்லி கேலி செய்யாதீங்க; அவர்கிட்ட பக்குவமா விவரம் சொல்லி அவரோட யோசனை சரியில்லேங்கறதை விளக்குங்க. ‘குனிந்தால், நிமிரலாம்’ங்கற வாசகம், உங்க வாழ்க்கையில அற்புதமான பலன்களைத் தருமுங்க. புது வீடு, மனை அல்லது வாகனத்தைக் கடன் மூலம் வாங்குவீங்க. சிலருக்கு அஜீர்ண கோளாறு வருமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பெரியவங்க வழிகாட்டுதல்ல நன்மைகளை அடைவீங்க. வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க. லட்சியங்கள் நிறைவேறும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
யாரையாவது பார்த்தோ அல்லது யார் தூண்டுதலாலேயோ சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள்ல கொஞ்சம்கூட ஆர்வம் காட்டாதீங்க. நேர்மையான வழியில சில ஆதாயங்கள் காலம் கடந்து வரலாம்; ஆனா அதுதான் நிம்மதி, கௌரவம், சந்தோஷம். குறுக்கு வழியில கூடுதலான நன்மைகள் குறுகிய காலத்லேயே வரும்னாலும் அதை முழுமையா அனுபவிக்க முடியாதபடி மனசு குறுகுறுக்கறதைத் தவிர்க்கவே முடியாதுங்க. ஏற்கனவே கடுமையான உழைப்பால நல்ல ஆதாயங்களை சந்தோஷமா அனுபவிச்சவங்கதான் நீங்க; மறந்திடாதீங்க. அதேபோல உத்யோகத்ல யார்கிட்டேயும் எதுக்காகவும் பகைமை பாராட்டாதீங்க. குடும்பத்லேயும் அனாவசிய வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்க. சிலருக்குக் கழிவுப்பாதையில் பாதிப்பு வரலாம்.
இந்தத் தேதிப் பெண்கள் தேவைக்கு மட்டுமே ஆசைப்படறதுதான் நல்லதுங்க. செவ்வாய்க்கிழமை விநாயகரை வழிபடுங்க; நல்லெண்ணங்களால நன்மை அடைவீங்க.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எல்லாமே அனுகூலமாக அமைஞ்சிருக்குங்க. தொலைதூரச் செய்திகள் சந்தோஷம் தருமுங்க. உங்க உழைப்புக்கேற்ற பலன்கள் அதிகரிக்கும்னாலும் அந்தப்
பலன்களை முறையாகப் பயன்படுத்திக்கோங்க. ஆரம்ப காலத்ல உங்களுக்கு உதவினவங்க, இறக்கத்தின் போதும் கூடவே இருந்தவங்களை மறக்காம, அவங்களுக்கு இப்ப ஏதாவது உதவி தேவைப்பட்டா மறுக்காம செய்ங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, அதிலிருந்து சுமுகமாகப் பிரிஞ்சு தனியே தொழில் ஆரம்பிக்கலாமுங்க. படைப்பாளிகளுக்கு பொது அமைப்புகள்லேர்ந்து அங்கீகாரம் கிடைக்குமுங்க; சிலருக்கு அரசாங்க விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்குங்க. தொற்று நோய் உண்டாகலாம். சிலருக்கு தலை சுற்றல் ஏற்படலாம், இது காது கோளாறு காரணமாகவும் இருக்கலாம்.
இந்தத் தேதிப் பெண்களுக்கு மதிப்பு கூடும். அவரவர் பிறந்த கிழமையில் புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; ஆதாயங்கள் அதிகரிக்கும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மன தைரியத்துடன் ஆக்கபூர்வமா செயல் படறவங்களுக்கு எல்லாமே வசப்படுமுங்க. ஆனா அசட்டு தைரியத்ல, தான்தோன்றித்தனமா, யார் அறிவுரையையும் கேட்காம சில விஷயங்கள்ல இறங்கி நஷ்டப்படலாம்; எச்சரிக்கையா இருங்க. குறிப்பா அரசாங்க விவகாரங்கள்ல தவறான வழிகாட்டல்ல மயங்காம, நீங்களா முயற்சி செய்தீங்கன்னா, உரிய ஆதாயம் கிட்டுமுங்க. குடும்பத்ல விட்டுக்கொடுத்துப் போய் சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கோங்க. வெளிநாட்டிலேர்ந்து நல்ல செய்தி வருமுங்க; சிலர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சிறப்பு பெறுவீங்க. பொதுவாகவே பயணங்களால ஆதாயம் உண்டுங்க. சிலருக்கு முதுகெலும்பில் கீழ்ப்பகுதியில் பாதிப்பு ஏற்படலாமுங்க. ஏற்கெனவே நரம்பு பிரச்னை இருக்கறவங்க முறையான மருத்துவம் பார்த்துக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்களுடைய முயற்சிகள்லாம் வெற்றி தருமுங்க. சனிக்கிழமை பெருமாளை வழிபடுங்க; சங்கடம் எதுவும் நெருங்காது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!