SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : டிசம்பர் 15 முதல் 21 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆக்கபூர்வமான செயல்கள்ல உற்சாகமாக ஈடுபடுவீங்க. எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியாகிடறதால மனசில் தன்னம்பிக்கை வளருமுங்க. சிலர் வெளிநாடு போவீங்க. இது மேற்படிப்பு, தொழில், வியாபாரம் அல்லது உத்யோகம் காரணமாக அமையலாம். சிலருக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் இருக்குமுங்க. அசையும் அசையா பொருள் சேர்க்கை ஏற்படுமுங்க; எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியாகுமுங்க. மனதில் தன்னம்பிக்கை வளருமுங்க. புது வீட்டுக்கோ அல்லது வசதி மிக்க வேறு வாடகை வீட்டுக்கோ போவீங்க. உத்யோகத்ல மாற்றம் வந்தா தயங்காம ஏற்றுக்கோங்க; நல்லதுதான். காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை ஏற்படுமுங்க. சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொந்தரவு கொடுக்கும்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, ஹார்மோன் குறைபாடுன்னு ஏற்படுமுங்க. புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்க; வாழ்க்கை மணக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொதுவாகவே உங்களுக்குக் கொஞ்சம் எதிர்கால சிந்தனை உண்டுங்க. நேரமாகட்டும் பணமாகட்டும் அலுவலகத்தில் லீவாகட்டும் உடனே செலவழிச்சுடாம பின்னாள் தேவைக்காக சேமிச்சு வைப்பீங்க. சிலர் அறிந்தும் செய்யலாம்; சிலர் அவரறியாமலேயே அப்படி சேமிக்க சந்தர்ப்பங்கள் வரலாம். எப்படியானாலும் அது வருங்காலப் பிரச்னைகள்லேர்ந்து உங்களைக் காக்குமுங்க. குடும்பத்ல பெற்றோர் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. படைப்பாளிகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை, முயற்சிகளும் திறமைகளும் உருவாக்கிக் கொடுக்குமுங்க. வெளிநாட்டிலிருந்து நற்செய்திகள் வருமுங்க. தொழில், வியாபாரம், உத்யோக இடங்கள்ல எந்த பிரச்னையும் தெரியலீங்க. பாரம்பரிய நோய் விஷயத்தில் அலட்சியமா இருக்காதீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு பிறர் மத்தியில் நற்பெயர் விளையுமுங்க. செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாத்தி வணங்குங்க; வாழ்க்கை செம்மையாகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்க மேல, உங்கக் குடும்பத்து மேல பொறாமை கொண்டவங்க பேச்சைக் கேட்டு குடும்பத்ல இருக்கறவங்களை அனாவசியமா சந்தேகப்படாதீங்க. எப்பவுமே எல்லா விவரங்களையும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதற்குப் பிறகு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப் பாருங்க. ஒரே கோணத்ல பிரச்னைகளை அலசாம, மற்றவங்க நோக்கிலும் பார்க்கணுமுங்க. நியாயமில்லாத கோபத்தை ஆரம்பத்லேயே விரட்டிடுங்க. மற்றபடி செய்தொழில்ல, உத்யோகத்ல அனுகூலம் அதிகரிக்குமுங்க. மேலதிகாரிங்க உங்களுக்கு விசேஷ சலுகை காட்டுவாங்க. வேலை தேடறவங்களுக்குப் புது வேலை, ஏற்கெனவே வேலையில இருக்கறவங்களுக்கு கூடுதல் ஆதாயத்தோடு வேற வேலைன்னு கிடைக்குமுங்க. தொழில், வியாபார முன்னேற்றத்துக்கு கடன் கிடைக்குமுங்க. ஒவ்வாமையால சரும உபாதை ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் புது ஆபரணம் சேருமுங்க. சனிக்கிழமை சனிபகவானுக்கு நீலவண்ணப் பூமாலை சாத்தி வணங்குங்க; சங்கடம் தீரும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


புதுத் தொழில் தொடங்கலாமுங்க. ஏற்கெனவே பார்த்துக்கிட்டிருக்கற தொழிலை விஸ்தரிக்கவும் முடியும். இதுக்கான முயற்சிகள்ல வெற்றி கிட்டுமுங்க. புது வாய்ப்புகள், புது ஒப்பந்தங்கள், அரசாங்க சலுகைகள், தேவையான வங்கிக் கடன் எல்லாம் எதிர்பார்த்தார்போலக் கிடைக்கறதால புது உற்சாகம் பிறக்குமுங்க.  உத்யோகத்ல, தங்களோட திறமையை முதலீடாக்கி புது சாதனை படைப்பீங்க; உரிய அங்கீகாரமும் பெறுவீங்க. குடும்பத்ல சுபவிசேஷங்கள் எந்தத் தடையுமில்லாம நிறைவேறுமுங்க. குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருந்தவங்க மறுபடி வந்து ஒண்ணு சேருவாங்க. அக்கம் பக்கத்தார் விவகாரங்கள்ல ஆர்வம் காட்டாதீங்க; அப்புறம் நீங்க கேலிக்குரியவரா ஆகிடுவீங்க. கழிவுப்பாதை, வயிற்றில் உபத்திரவம்னு வரலாமுங்க. உணவுக் கட்டுப்பாடு ரொம்பவும் அவசியம்.

இந்தத் தேதிப் பெண்கள் புது உத்தியால பெருமையடைவாங்க. வியாக்கிழமை மகான் ராகவேந்திரரை மஞ்சள் பூமாலை சாத்தி வழிபடுங்க; மங்கலம் சேரும்.  

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசு, நாக்கு, கைகளை கட்டிப் போட்டு வைக்கணுமுங்க. நீங்க எந்தத் துறையில பணிபுரிபவராக இருந்தாலும் ஒவ்வொரு சிந்தனையிலும் பேச்சிலும் நடவடிக்கையிலும் நிதானத்தைக் கையாளணுமுங்க. நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு இருந்திடறது ரொம்பவும் உத்தமம். யாருக்கும் எந்த யோசனையும் சொல்லாதீங்க; அவங்களா வந்து கேட்டாலும் சரி! அது உங்களுக்குதான் மோசமான பின்விளைவுகளைத் தரும். பிறர் மெச்சணுங்கறதுக்காக மேலதிகாரி அல்லது பிரபலங்களைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச ரகசியங்களைச் சொல்லிகிட்டிருக்காதீங்க. ரொம்பவும் அவசியமா இருந்தாலொழிய இரவுப் பயணத்தைத் தவிர்த்திடுங்க. அடிவயிறு முதல் பாதம்வரை ஏற்படக்கூடிய சிறிய உபாதையையும் அலட்சியப்படுத்தாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பேச்சில் கவனமா இருங்க. ஞாயிற்றுக்கிழமை, நவகிரக சந்நதியில் சூரியபகவானை சம்பங்கிப் பூமாலை சாத்தி வழிபடுங்க; வாழ்வில் புது ஒளி பிறக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்களுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாதபோதும், அனாவசியமா உங்க பேர் இழுக்கப்பட்டு, உங்களுக்கு இழுக்கு நேர்ந்திருக்கலாம். அந்த அவமானம் இந்த வாரத்ல நேர் செய்யப்படுமுங்க. உங்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தினவங்க தங்களோட தவறை உணர்ந்து உங்ககிட்டேயே வந்து வருத்தம் தெரிவிப்பாங்க. சிலருக்கு அரசாங்க விருது, கௌரவம்னு கிடைக்கலாமுங்க. வீடு, மனை மாதிரியான அசையா சொத்தை விற்கறதானாலும் சரி, வாங்கறதானாலும் சரி, உரிய ஆவணங்களை, உரிய நிபுணரை வைத்து சரிபார்த்துக்கோங்க. முக்கியமா சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள்ல ஆர்வம் காட்டாதீங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கு வாய்ப்பு இருக்குங்க. சிலருக்கு பாதம், மூட்டு பகுதிகள்ல உபாதை வரலாம். சிலருக்கு முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் பெருமை அடைவீங்க. பெருமாளுக்கு சாமந்தி மாலை சாத்தி வழிபடுங்க; சாதனை படைப்பீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பெரியவங்க பேச்சை தொணதொணப்புன்னு அலட்சியப்படுத்தி ஒதுக்கிடாதீங்க; அவங்க அனுபவத்தால நல்ல யோசனைகளையும் சொல்வாங்க; அது உங்களுக்கு பல நன்மைகளை உருவாக்கித் தருமுங்க. இந்த ஆதாயத்துக்காகவாவது அவங்களோட சலிப்பு, ஆதங்கப் பேச்சுகளைப் பொறுத்துக்கோங்க. பிள்ளைகளோட கல்வி, விளையாட்டு, அலுவலக, தொழில், வியாபார சாதனைகளால நீங்க நெஞ்சை நிமிர்த்தி நடப்பீங்க. உத்யோகத்ல உயர்வுகளை எதிர்பார்த்து ஏமாற்றமடைஞ்சவங்க, ஆற்றாமை சொற்களால பிறரை காயப்படுத்தாதீங்க; அது எதிர்மறையாகிப் போய்விடும். இனிய சொற்கள், அனுசரித்து நடத்தல் எல்லாம் உங்களை முன்னிலைப்படுத்துமுங்க. ஏற்கெனவே நரம்பு உபத்திரவம் இருக்கறவங்க உரிய மருத்துவம் பார்த்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள், நெருப்பை எச்சரிக்கையுடன் கையாளுங்க. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வணங்குங்க; விருப்பங்கள் ஈடேறும்.
 
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அலுவலகத்ல கோப்புகளை ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா சரியா படிச்சுட்டு அப்புறமா கையெழுத்து போடுங்க. தாமதமானாலும் பரவாயில்லை, தப்பு ஏற்பட்டு அதனால உங்களுக்கும் உங்க நிறுவனத்துக்கும் பாதகம் உண்டாயிடக்கூடாதுங்க. உங்களுக்காக அந்தக் கோப்பு விவரங்களைத் தயாரிச்சவங்க மேல இருக்கற நம்பிக்கையால அலட்சியமா இருந்திடாதீங்க. இந்த விழிப்புணர்ச்சி உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுமுங்க. சின்னச் சின்ன விஷயங்களுக்காக குடும்பத்தாரைக் குறை சொல்லி வருத்தப்பட வைக்காதீங்க. போதைப் பொருள் பயன்படுத்தறவங்க அதை முற்றிலும் தவிர்த்திடுங்க; உங்க உடல்நலம் பாதுகாக்கப்படறதோட,  குடும்பத்திலும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் நிம்மதிக்கும் வழிவகுக்குமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது நபர்கள்கிட்ட நெருங்கிப் பழகாதீங்க. வெள்ளிக்கிழமை, இஷ்டப்பட்ட மகானுக்கு ரோஜாப்பூ மாலை சாத்தி வழிபடுங்க; கஷ்டங்கள் காணாமல் போகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

‘தமாஷா பேசறவர்’னு உங்களைப் பிறர் சொல்றதால நீங்க பேசறதையெல்லாம் எல்லோரும் சிரிச்சுப் பாராட்டுவாங்கன்னு எதிர்பார்க்காதீங்க. சிலசமயம் உங்க தமாஷ் பேச்சு பலரை வருத்தப்பட வைக்குமுங்க. இதனால அவங்களோட உங்களுக்கு இருக்கற உறவோ, நட்போ விரிசல் விட வாய்ப்பு இருக்குங்க. உத்யோகஸ்தர்களுக்கு விடுபட்டுப் போயிருந்த சலுகைகள், பதவி, வருமான உயர்வுகள் விரைவில் கிட்டுமுங்க. சிலருக்கு பொது அமைப்புகள்ல உயர் பதவி வகிக்கும் வாய்ப்பும் வரலாம். வெளிநாட்டிலே வர்த்தகத்ல ஈடுபட்டிருக்கறவங்களுக்கு ஆதாயம் அதிகரிக்குமுங்க. பொதுவாகவே ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கறது நல்லதுங்க; சிலருக்குக் கால் விரலில் அடிபடலாம், எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்களுடைய முயற்சிகள் அவங்களுக்குப் புது அங்கீகாரத்தைத் தருமுங்க. செவ்வாய்க்கிழமை, அம்மனுக்கு முல்லைப்பூ மாலை சாத்தி வணங்குங்க; அம்மன் அருள் துணையிருக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்