SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : டிசம்பர் 8 முதல் 14 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பேச்சில் ரொம்பவும் கவனம் வைக்கணுமுங்க. நிதானமாகப் பேசினால், எதிர்பாராத இழப்புகளுடன் கூடிய பின்விளைவுகளைத் தவிர்க்கலாமுங்க. பொறுமையாக நடந்துக்கறதால பல நன்மைகளை நீங்க அடைய முடியுமுங்க. உடம்பிலே இடது பக்கத்ல ஏற்படக்கூடிய அசௌகரியக் குறைவை மருத்துவர் கவனத்துக்குக் கட்டாயம் கொண்டு போங்க. சிலருக்கு ரத்தக் கொதிப்பும் கொஞ்சம் கவலையைத் தரும். இந்தத் தேதி அரசு ஊழியர்கள் கவனமா இருங்க; யாரையும் எந்த விஷயத்துக்காகவும் நம்பிடாதீங்க; ஏமாற்றத்துக்கு ஆளாவீங்க. அதனால பிறரோட கவர்ச்சி வார்த்தைகளுக்கு அடிமையாயிடாதீங்க. குடும்பத்ல இதுவரைக்கும் நிலவிவந்த குழப்பம் மறைஞ்சுடுமுங்க; சந்தோஷம் துளிர்க்கும். தேவையில்லாம பிடிவாதம் பிடிக்கற குணத்தைக் கைவிடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேருமுங்க. திருப்பதி பெருமாளை வழிபடுங்க; திருப்பங்கள் நேரும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசில் உருவாகும் தைரியம், புது முயற்சிகள்ல தன்னம்பிக்கையோடு இறங்க வைக்குமுங்க. இந்த முயற்சிகள் வெற்றிகளையே தருமுங்க. இதுவரை மனசைக் குழப்பிக்கிட்டிருந்த தயக்கம், சிலசமயம் வெளிப்பட்ட அசட்டு தைரியம் எல்லாம் இனி விலகிடுமுங்க. தீர்மானமா யோசிப்பீங்க; உறுதியா செயல்படுவீங்க; வெற்றிக் கனியைப் பறிப்பீங்க. சிலருக்குக் கண்கள்ல பிரச்னை வரலாமுங்க; அது பார்வைக் கோளாறாகவும் இருக்கலாம். சிலருக்கு உணவுக் குழாய் பகுதிகள்ல சிக்கல் ஏற்படலாம். மருத்துவரை அணுகி உரிய மருத்துவம் எடுத்துக்கோங்க; சுய மருத்துவம் வேண்டாம். பொதுவாகவே ஊழியர்கள் சிலர், யார் தூண்டுதலாலேயோ ஆதார மில்லாத குற்றச்சாட்டுக்கு ஆளாகக்கூடும். உங்களோட புறஞ்சொல்லற சுபாவத்தை மாத்திக்கோங்க; எல்லாம் சரியாகிடும்.

இந்தத் தேதிப் பெண்களின் நல்ல முயற்சிகள் தெய்வ அருளால வெற்றி பெறுமுங்க. அனுமன் வழிபாடு நன்மை உண்டாக்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்க குடும்பத்ல உருவாகிற பிரச்னைகளைத் தீர்க்கறதிலே முதல் முக்கியத்துவம் காட்டுங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல, நீங்க வேலை செய்யற இடத்திலே, பிரச்னைகளைத் தீர்க்கறதுக்கு ஆர்வம் காட்டற நீங்க, குடும்ப அமைதிக்காகவும் முயற்சிக்கலாமுங்க. ‘எனக்கென்னாச்சு’ன்னு இருந்திடறது குடும்ப உறுப்பினர்களோட மன சங்கடத்துக்குதாங்க வழிவகுக்கும். உங்களைச் சார்ந்திருக்கறவங்களுக்கு, உங்க நலன்ல பெரிய அக்கறை இருக்கறதைப் புரிஞ்சுக்கோங்க. நியாயமான விஷயங்களுக்கு மட்டும் துணையா நில்லுங்க; சொந்த லாபத்துக்காக கூடாத சமாசாரங்களை ஆதரிக்காதீங்க. அதேபோல எந்த சந்தர்ப்பத்திலேயும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதிருக்கப் பழகிக்கோங்க. மனம் அமைதியாக, தினமும் பிராணாயாமம், தியானம், யோகா பழகி, மனசை லேசாக்கிக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம்பக்கத்ல புதிதாக குடி வர்றவங்ககிட்ட எச்சரிக்கையாகப் பழகுங்க. சிவனை வழிபடுங்க; குடும்பத்ல தென்றல் தவழும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தந்தையார் சொல்ற ஆலோசனை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அதை சும்மா கேட்டுகிட்டாவது இருங்க. அந்த யோசனையிலேர்ந்து உங்களுக்கு வேற புதுவழி தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்குங்க. அதேபோல தந்தைவழி உறவுக்காரங்க கிட்ட அதிகமா உரிமை எடுத்துகிட்டு பேசவேண்டாங்க; அதேபோல  முற்றிலும் அவங்களைப் புறக்கணிக்கவும் வேண்டாங்க. குடும்பத்ல பெரியவங்க நோய்வாய்ப்பட்டா, உண்மையான அக்கறையோட கவனிங்க. வெளியில எப்படி தெரிஞ்சாலும் அவங்க மனசிலே உங்களை ஆசிர்வதிச்சுகிட்டுதான் இருப்பாங்க. முழுமையாகத் திட்டமிட்டு எடுக்கும் காரியம் எல்லாம் பூரண வெற்றி தருமுங்க. புது யோசனை, புது அணுகுமுறையால பல நன்மைகளை நீங்க அடைவீங்க. ஒற்றைத் தலைவலி, வயிற்று உபாதைன்னு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள், பெரியவங்களை அனுசரிச்சுப் போனா நிச்சயம் ஆதாயம் அடைவீங்க. துர்க்கை அம்மன் வழிபாடு உங்க துக்கங்களை தூர விரட்டும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விட்டுக் கொடுத்துப் போகிற நல்ல வழக்கம் எவ்வளவு பெரிய ஆறுதல் தரும், நன்மைகள் தரும்ங்கறதை உங்க அனுபவத்ல நீங்க உணர்ந்திருப்பீங்க. ஆனாலும் அப்பப்ப கொஞ்சம் ஈகோ தலையெடுத்து உங்களைக் குழப்பிடும். ஆனா, அதுக்கு இடம் கொடுத்திடாதீங்க. உங்கக் குடும்பப் பிரச்னையை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கறதுதாங்க நல்லது; மூணாம் மனுஷரை மத்தியஸ்தம் செய்ய கூப்பிடாதீங்க; இது அனாவசிய சந்தேகத்துக்கு வழிவகுக்கும். சிலருக்கு உஷ்ண பாதிப்புகள் வரலாம். உணவில் கட்டுப்பாடு வெச்சுக்கோங்க. அதிக காரம், மசாலா வகைகளை அறவே ஒதுக்கிடுங்க. போதைப் பொருட்களின் ருசிக்கும் சபலத்துக்கும் ஆளாகிடாதீங்க. வியாபாரம், தொழில், அலுவலக வட்டாரத்ல உங்க பழகுமுறையை மாற்றிகிட்டீங்கன்னா, எதிரிகளே இல்லாத சூழலை உருவாக்க முடியுமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையாகப் பேசி, நல்ல பெயர் எடுப்பீங்க. நரசிம்மரை வழிபடுங்க; நல்லதே நடக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எவ்வளவுக்கெவ்வளவு நிதானமாக நடந்துக்கறீங்களோ அந்த அளவுக்கு, இந்த வாரம் நீங்க உயரே போவீங்க. பிறரோட பழகும்போதும் பேசும்போதும் பொறுமையை கடைப்பிடிக்கறதால, உங்க தரப்பை நீங்க உறுதியாக வலியுறுத்த முடியுமுங்க. ஒரு வேலை சரியா முடியலியா, தாமதமாகுதா, அதுக்காக வருத்தப்பட்டு, ஆவலாதிப்பட்டு பரபரப்பாக இயங்கினீங்கன்னா, அது குழப்பத்திலேதாங்க முடியும். ‘பெட்டர் லேட் தென் நெவெர்’னு சொல்றா மாதிரி, நிதானம் நல்ல முடிவைத் தருமுங்க. குறிப்பாக வாகனத்ல போகிறபோது, கவனம் பிசகாம இருக்கணுமுங்க. சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. சிலர் முதுகெலும்பு பாதிப்பால அவதிப்படலாம். பிள்ளைகள் வெளிப்பழக்கத்ல சில பிரச்னைகளை உருவாக்கலாம். அவங்ககிட்ட பக்குவமாகப் பேசி, நல்வழிப்படுத்துங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறருக்கு சொல்லும் ஆலோசனை எடுபடுமுங்க. சனிபகவானை வழிபடுங்க; சங்கடங்கள் தீரும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


சொந்தக்காரங்க ஆனாலும், நெருங்கின நண்பர்தான்னாலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா அவங்கள்ல சிலர் உங்களுக்கு எதிரான கருத்து கொண்டவங்களா இருப்பாங்க. அந்த சமயத்ல அவங்களோட பேச்சும் நடவடிக்கையும் கொஞ்சம் வித்தியாசமாத் தெரியும். இதை நீங்க கவனிக்கணும். இதனால நீங்க உங்க மனநிலையை மாத்திக்காதீங்க. அவங்களோட மாறுபட்ட நடவடிக்கைகளைப் பெரிதுபடுத்தாதீங்க. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்; அவங்களே தங்களோட செயலுக்கு மனசுக்குள்ளேயாவது வருத்தம் தெரிவிச்சுப்பாங்க. பூர்வீக சொத்து விஷயங்கள்ல அனாவசிய பரபரப்பைக் காட்டாதீங்க. அதேசமயம் உங்க உரிமையையும் விட்டுக்கொடுக்காம நிதானமா உறுதியாகப் பேசுங்க. கழுத்ல சுளுக்கு அல்லது முக உறுப்புகள்ல சிறு பாதிப்புன்னு ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பளிச்னு பேசி காரியத்தை சாதிச்சுப்பீங்க. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளை வணங்குங்க; ஆனந்தம் அரவணைக்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


ஏதோ ஒரு இடத்ல ஆதாயம் கிடைக்குதுங்கறதுக்காக, அதுவரைக்கும் உங்களுக்கு சாதகமா, ஆதரவா, உறுதுணையா இருக்கற விஷயங்களை உதாசீனப்படுத்தாதீங்க. நீங்க எடுக்கற எந்த முயற்சியிலும் அலட்சியம் காட்டாதீங்க. இதுவரைக்கும் உங்களுக்கு சாதகமா நடந்திருக்கற விஷயங்கள் இறையருளாலதான்ங்கறதை நீங்கப் புரிஞ்சுக்கணுமுங்க. அதனால் மனசார, உண்மையான உழைப்பை செலுத்தி நேர்மையான வெற்றியைப் பெறுங்க. எந்தக் கையெழுத்தையும் போடுமுன்னால ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சு செய்ங்க. கடன் சம்பந்தமான எழுத்து மூல பத்திரங்களைப் பாதுகாப்பா வெச்சுக்கோங்க; பின்விளைவு பிரச்னையை சமாளிக்கலாம். ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமுங்க - வாசனைப்பூச்சு, பூஜை மலர்கள், ஊதுவத்தின்னு மூக்குக்குப் பிடிக்காத வாசனையாலும் வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் நிதானமா எடுக்கற முடிவுகள் நன்மை தருமுங்க. ஆஞ்சநேயரை வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.
 
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

‘அப்பாடா’ன்னு நிம்மதி பெருமூச்சு விடுவீங்க; ஏன்னா ஏற்கெனவே இழுபறியாகிகிட்டிருந்த ஒரு பிரச்னை சுத்தமா ஸால்வ் ஆகிடுமுங்க. பிரிந்துபோன உறவுகளும் நட்பும் மறுபடியும் ஏதேனும் குடும்ப, பொது நிகழ்ச்சிகளால மறுபடியும் துளிர்க்குமுங்க. மனசிலே பயம் விலகி, புதுத் தெம்பும் தைரியமும் உருவாகுமுங்க. சிலர் மேல் படிப்பு, புது உத்யோகம், தொழில் அல்லது வியாபார நிமித்தமா வெளிநாடு போவீங்க. அது முதல் பயணமாக இருக்குமானால், போற நாட்டு சட்டதிட்டங்களைச் சரியாகத் தெரிஞ்சுகிட்டு நடந்துக்கோங்க. உத்யோகத்ல தடைபட்டிருந்த சலுகைகள், பதவி-ஊதிய உயர்வு எல்லாம் எதிர்பார்த்தபடியே கிடைக்குமுங்க. வீட்ல சுபவிசேஷ செலவு கூடும்; வருத்தப்படாதீங்க, நல்லதுக்குதான். முழங்கால் வலி, மூட்டுப் பிடிப்புன்னு உபாதை வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்பப் பெரியவங்களோட ஆசியைப் பெறுவீங்க. இஷ்டப்பட்ட மகானை வணங்குங்க; கஷ்டமெல்லாம் கரையும்.                         

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

watching my girlfriend cheat open my girlfriend cheated

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்