SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : டிசம்பர் 1 முதல் 7 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புத்துணர்வு மனசைப் பற்றிக்கொள்ள பரபரவென்று இந்த வாரம் இயங்குவீங்க. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கறதால உற்சாகமாக எல்லா வேலைகள்லேயும் ஈடுபடுவீங்க. இழுபறியாகிக் கிடந்த சமாசாரங்கள்லாம் மளமளன்னு நடக்கறதால வெறுமே மகிழ்ச்சி அடையறதோட நின்னுடாம, அதனால கிடைக்கற ஆதாயங்களை சேமிக்கப் பாருங்க. இது எதிர்காலத் திட்டங்களுக்குப் பெரிதும் உதவும். வீடோ, உத்யோகமோ, நீங்க விரும்பிய மாற்றங்கள் கிடைக்குமுங்க. எந்த காரணத்துக்காகவாவது பிரிந்திருந்த குடும்பத்தினரும் நண்பர்களும் மீண்டும் ஒண்ணு சேருவீங்க. தொழில்ல ஸ்திரத் தன்மை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கடனுதவியும் கிடைக்குமுங்க. அஜீர்ணம் மாதிரி, சொற்பமான வயிற்று உபாதை ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களின் நீண்டநாள் கனவு நனவாகுமுங்க. துர்க்கை அம்மனை வழிபடுங்க; துயர் துடைத்து அருள்வாள் அன்னை.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிக்கன உணர்வு வேண்டியதுதான்; அதுக்காக வாங்கிட்டோமேன்னு கெட்டுப்போன உணவை எடுத்துகிட்டு வயிற்றையும் குடலையும் கெடுத்துக்காதீங்க. இந்த வாரம் உங்களுக்கு இதுதாங்க பிரச்னை. மற்றபடி பிற எல்லா விஷயங்களும் சந்தோஷம் தர்றதுதாங்க. பூமியால் பெரிய ஆதாயம் உண்டுங்க. விற்பதிலோ, வாங்குவதிலோ கொஞ்சம் உஷாரா இருந்துட்டீங்கன்னா போதும், நஷ்டம் ஏற்படாம பார்த்துக்கலாமுங்க. பயணங்கள் எல்லாம் ஆதாயம் தருமுங்க. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள் பல நன்மைகளைத் தருமுங்க. அங்கே இருக்கற உறவுக்காரங்க, நண்பர்களால புது முயற்சிகள்ல ஈடுபட்டு பெயரும் புகழும் வருமானமும் பெறுவீங்க. உத்யோகம், தொழில், வியாபாரம் எல்லாம் உங்க முயற்சிக்கேற்ற நற்பலன்களை அளிக்குமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் புது தங்க நகை அல்லது வேறு அணிகலன் கிடைக்குமுங்க. சிவனை சிரத்தையுடன் வழிபட்டு, சீரும் சிறப்பும் கூடப் பெறுங்க.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விளையாட்டாகவோ அல்லது சாமர்த்தியமாகப் பேசறதாகவோ நினைச்சுகிட்டு அடுத்தவங்க மனசை நோகடிக்காதீங்க. உங்க பேச்சுக்குப் பெருமை கிடைக்கறதைவிட, உறவிலும் நட்பிலும் விலகல்தான் விடையாகும், எச்சரிக்கையாகப் பேசுங்க. இப்படி பொதுவாக எல்லோரையும் அரவணைச்சுகிட்டுப் போனா, உங்களுக்குதான் அதிக நன்மை, நினைவிலே வெச்சுக்கோங்க. கூட வேலை செய்யறவங்களோட ஒத்துழைப்பால உங்க இமேஜ் உயருமுங்க; அதனால அவங்களை ஏளனம் செய்யாம, நட்பு பாராட்டுங்க. உங்க சோம்பலுக்கும் இயலாமைக்கும் யாரையும் கை காட்டி, தப்பிச்சுக்கப் பார்க்காதீங்க. பூர்வீக சொத்து விஷயத்ல பேசித் தீர்க்கப் பாருங்க; எந்த தந்திரமும் உங்களுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்தும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையாகப் பேசி நன்மைகளைப் பெறுங்க. பெருமாளை வழிபட்டு மன அமைதி அடையுங்க.


4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க எச்சரிக்கையா இருக்கணுமுங்க. அது சம்பந்தமா சிகிச்சை எடுத்துக்கறவங்க அந்த மருத்துவத்தை விடாம தொடர்ந்து மேற்கொள்ளணுமுங்க. எல்லா விஷயங்கள்லேயும் பொறுமையாக நடந்துக்கறது இந்த வாரத்தின் முக்கிய தேவைங்க. சில அரசாங்க சமாசாரங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கணுங்கறதுக்காக சட்டத்துக்குப் புறம்பான வழிகளைத் தேர்ந்தெடுத்திடாதீங்க. சிலசமயம் விட்டேற்றியான உங்க பேச்சால நல்ல உறவுகளையும் நட்புகளையும் பகைச்சுக்கற சூழ்நிலை உருவாகுமுங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீங்க. வெளியே பெருமை கிடைக்கறதுக்காக, குடும்பத்து உறுப்பினர்களை நோகடிக்காதீங்க. இரவுப் பயணங்களைத் தவிர்த்திடறது நல்லதுங்க. புது அறிமுக நபர்கள்கிட்ட எச்சரிக்கையாகப் பேசுங்க; பழகுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் மௌன விரதம் இருக்கறது நல்லதுங்க. ஆஞ்சநேயரை வழிபடுங்க; அவர் நல்வழி நடத்துவார்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ரொம்பவும் சலிச்சுகிட்டு, ‘போனால் போகட்டும் போ’ங்கற விரக்தி நிலைமைக்குத் தள்ளின விஷயங்கள் எதிர்பாராதவகையில் பளிச்னு ஆதாயமா முடிஞ்சு சந்தோஷம் கொடுக்குமுங்க. சில குடும்பத்ல பிள்ளைகளால பிரச்னைகள் வரலாம்; இவங்களைப் பாதுகாப்பதற்காக வெளியிடத்தில் பகைமையை வளர்த்துக்காதீங்க. நியாயத்தை சரியாக உணர்ந்து பிள்ளைகளைப் பக்குவமாகக் கண்டிச்சு வையுங்க. கொடுக்கல்-வாங்கல் சமாசாரங்களை நீங்களே நேரடியாக கவனிச்சு பைசல் பண்ணிக்கோங்க. மூன்றாம் நபரை அனுப்பி, சிக்கலை உருவாக்கிக்காதீங்க. உத்யோகத்ல, மேலதிகாரிங்க ஆதரவா இருந்தாலும் சக ஊழியர்களையும் அனுசரிச்சுகிட்டுப் போகணுமுங்க. ஒவ்வாமை பாதிப்பு வரலாம்; சிலருக்கு முடி கொட்டும், சிலருக்கு சரும உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் எதிர்பாராத தன லாபம் அடைவீங்க. பள்ளிகொண்ட பெருமாளை வணங்குங்க; பாதிப்பெல்லாம் ஆதாயமாக மாறும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தடைபட்டிருந்த விஷயங்கள்லாம் இந்த வாரம் சாதகமாக நிறைவேறுமுங்க. குடும்பத்து சுப தடை மட்டுமல்லாம, அரசாங்க சலுகைகள், பூர்வீக சொத்துன்னு எல்லாமே மனம் குளிர முடிவாகுமுங்க. பிள்ளைகளுக்கு நோய் அல்லது வேறு காரணமாக தடைபட்டிருந்த படிப்பும் அவரவர் விருப்பப்படி தொடருமுங்க. மேல்படிப்புக்காக பிற மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கும் போகக்கூடிய வாய்ப்பு அமையும். சிலருக்கு வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது மனை, வீடுன்னு பொருள் சேர்க்கை உண்டுங்க. இதுக்காகக் கடன்பட நேர்ந்தாலும் அதுக்காக வருத்தப்படாதீங்க. அந்தக் கடனை வட்டியும் முதலுமாக விரைவிலேயே அடைச்சுட முடியுமுங்க. சிலருக்கு கழுத்து சுளுக்கு ஏற்படும்; சிலர் காது-மூக்கு-தொண்டை பிரச்னையால அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உறவினர் மத்தியில் மதிப்பு கூடுமுங்க. சனிக்கிழமை சிவனை வழிபடுங்க; சகலமும் சாதகமாகும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மலைபோலத் தெரிஞ்ச பிரச்னைகள்லாம் பனிபோல நீங்கறதைப் பார்த்து உங்களுக்கு புது தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. குடும்பத்ல சுபவிசேஷங்கள்ல ஏதேனும் தடை இருந்தா, பாக்கியிருக்கற குலதெய்வ பிரார்த்தனையை முடிச்சீங்கன்னா அந்தத் தடையும் விலகிடுமுங்க. மறைமுக எதிரிகள் பலம் குறையுமுங்க. சிலர் தங்களோட தவறை உங்ககிட்ட பகிரங்கமாக ஒப்புகிட்டு உங்களோட மறுபடி நட்பு தொடர கை நீட்டுவாங்க; பழைய விரோதத்தை மனசிலே வெச்சுகிட்டு அந்தக் கையைத் தட்டிவிடாதீங்க; பற்றிக்கொள்ளுங்க; இது எதிர்கால நன்மைகளுக்கு வழிவகுக்குமுங்க. வார்த்தையில இனிமையை கூட்டிக்கோங்க. இதனால புது நட்புகளும் புது உயர்வுகளும் கிடைக்குமுங்க. சிலருக்கு வாய்ப்புண் தொந்தரவு தரும்; சிலருக்கு அஜீர்ண உபாதை இருக்கும். கழிவுப்பாதை பாதிப்பால் சிலர் வருந்துவீங்க.

இந்தத் தேதிப் பெண்களோட முயற்சிகள் வெற்றி தருமுங்க. புற்றுள்ள அம்மனை வணங்குங்க; மேன்மை பெறுவீங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் இந்த வாரம் ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணுமுங்க. யார் மேலேயோ இருக்கற கோபத்தை மேலதிகாரியிடம் காட்டாதீங்க; வேலையிலும் சுணங்கிடாதீங்க. இதனால் பாதிக்கப்படுவது நீங்கதான், புரிஞ்சுக்கோங்க. நட்பில் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்கப் பாருங்க. இல்லாவிட்டால் உங்க பலவீனங்கள் வெளிப்பட்டு அவமானப்பட வேண்டியிருக்கும். இந்தத் தேதி இளைஞர்களின் காதல் வெற்றி பெறுமுங்க; இரு தரப்பிலேயும் பெரியவங்க ஆதரவா இருப்பாங்க. வாகனப் பழுதை அலட்சியப்படுத்தாதீங்க. நேரமில்லேன்னோ, பணமில்லேன்னோ தள்ளிப்போட்டீங்கன்னா, அது சரியான சமயத்ல காலை வாரி விட்டுடுமுங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை அதிகரிச்சுக்காம பார்த்துக்கோங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாருக்கு உதவியா இருங்க. மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; அவர் ஆசி உங்களை அரவணைத்துக் காக்கும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ரொம்பவும் ஸ்டிராங்கான பாயின்ட்டை வெச்சுகிட்டுதான் வாக்குவாதம் பண்ணுவீங்க; ஆனா எதிர்பாராத ஓரிரு பலவீனங்கள் உங்களைத் தோல்வியடைய வைத்திடலாம்; அதனால எதிராளியை எப்படியெல்லாம் சமாளிக்கணுங்கறதை ஒத்திகை பார்த்துக்கறது நல்லதுங்க. குறிப்பா கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, பொது அமைப்புகள்ல தலைமை பதவியில இருக்கறவங்க இப்படி ‘ஹோம்-ஒர்க்’ பண்ணிக்கறது நல்லதுங்க. குடும்பத்ல பெற்றோர் மற்றும் பெரியவங்ககிட்ட வீணாக வம்பு வளர்க்காதீங்க; விட்டுக் கொடுத்துப் போய், விட்டுப் போனதையெல்லாம் பிடிங்க. வளர்ப்பு பிராணி வெச்சிருக்கறவங்க அதுங்களோடு எச்சரிக்கையாகப் பழகுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பிரச்னை வரலாம்; சிலர் ஒவ்வாமையால சரும பிரச்னை ஏற்பட்டு பாதிக்கப்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் யாரைப் பற்றியும் புறஞ்சொல்லாதீங்க. லட்சுமி நரசிம்மரை வணங்குங்க; லட்சியங்கள் ஈடேறும்.  

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ      

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்