பிறந்த தேதி பலன்கள் : நவம்பர் 17 முதல் 23 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
என்ன, ரொம்ப உற்சாகமா ஃபீல் பண்றீங்களா? இருக்காதா பின்னே! எல்லா விஷயமும் அனுகூலமாகவே அமைஞ்சிருக்கே! குடும்பத்ல சுபவிசேஷங்கள் எதிர்பார்த்தபடி ரொம்பவும் இனிமையாக நடந்தேறுமுங்க. குடும்பத்ல புதிய வரவும் சந்தோஷம் தரும். உங்களோட மதிப்பு உயர, பிறர் உங்ககிட்ட வந்து தங்களோட பிரச்னைகளுக்கான தீர்வை எதிர்பார்ப்பாங்க. இதனால உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் கூடுமுங்க. உத்யோகத்ல இருந்த மனசங்கடங்கள்லாம் விலகிடுமுங்க; உங்க திறமை பாராட்டப்படும்; உரிய அங்கீகாரமும் உயர்வுகளும் கிடைக்குமுங்க; நிலுவையிலிருந்த சலுகைகளையும் அடைவீங்க. வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்க புது ஒப்பந்தங்களால இன்னும் சிறப்பு பெறுவீங்க. பாரம்பரிய நோய் அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.
இந்தத் தேதிப் பெண்களோட யோசனைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமுங்க. துர்க்கையம்மனை வழிபடுங்க; வாழ்க்கை துலங்கும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மனசுக்குள் உற்சாகம் பொங்குமுங்க. தடைபட்டிருந்த சுபநிகழ்ச்சிகள்லாம் அடுத்தடுத்து நிறைவேறினா மகிழ்ச்சிதானே! ‘அப்பாடா,’ என்ற நிம்மதியோடு, அந்த சுப நிகழ்ச்சிகளால ஏற்பட்டிருக்கற, ஏற்படப்போகிற நன்மைகளை எண்ணியும் ஆனந்தம் அடைவீங்க. பல வருடங்களாக அலைக்கழித்த சொத்து விவகாரம் நல்ல ஆதாயத்தோடு செட்டில் ஆகுமுங்க. உத்யோகம், தொழில், வியாபாரம் எல்லாம் எதிர்பார்த்ததைப்போல இரட்டிப்பு லாபம் ஈட்டித் தருமுங்க. அதேசமயம் பிள்ளைகளோட பழக்க வழக்கங்கள்ல ஒரு கண் வெச்சுக்கோங்க. அவங்க தடுமாறுவதுபோலத் தெரிஞ்சா உடனே பரிவுடன் தாங்கி, பக்குவமாக அவங்க போக்கை மாற்றுங்க; அதிலே நீங்க வெற்றியும் பெறுவீங்க. சிலருக்கு அஜீர்ண கோளாறு, சிலருக்கு சரும நிறமாற்றம்னு ஏற்படலாம்.
இந்தத் தேதிப் பெண்களை சந்தோஷச் செய்திகள் வந்தடையுமுங்க. புற்றுள்ள அம்மன் கோயிலில் வழிபடுங்க; பரிபூரண மகிழ்ச்சி நிலவும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
‘என்னடா இது, எதையெடுத்தாலும் ஒர்க் அவுட் ஆகமாட்டேங்குதே’ன்னு சலிச்சுக்கறீங்களா, பொறுமையா இருங்க. உங்க முயற்சிகள்ல அவசரம் வேண்டாங்க. இந்த காலகட்டத்ல சில தடைகள், விரக்திகள் ஏற்படலாம். அதனால நிதானமா நடந்துக்கோங்க. செலவுகள், சுப விரயமாக இருக்கறதனால யோசிக்க வேண்டாங்க. சிலர் இதனால கடன்பட்டாலும் வருந்தாதீங்க; கொஞ்சநாள்ல சரியாகிடும். வீட்டைவிட்டு வெளியே இறங்கினா, கூட கொண்டுபோகிற உடைமைகளை ரொம்பவும் பாதுகாப்பாக வெச்சுக்கோங்க. உத்யோகத்ல உங்களை சீண்டறதுக்குன்னே சிலபேர் காத்துகிட்டிருப்பாங்க. அவங்களை சுத்தமா இக்னோர் பண்ணிடுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னை வருமுங்க; சிலருக்கு சர்க்கரை நோய் கொஞ்சம் பயமுறுத்தும்.
இந்தத் தேதிப் பெண்கள் யார்கிட்டேயும் இரவல் வாங்காதீங்க; நீங்களும் கொடுக்காதீங்க. சபரிமலை சாஸ்தாவை வழிபடுங்க; சகலமும் சித்தியாகும்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கேளிக்கை, கொண்டாட்டம்னு இந்த வாரம் ஜாலியாப் போகுமுங்க. பயணங்களால குதூகலமும் ஆதாயமும் உண்டுங்க. குடும்பத்தோடு மகிழ் சுற்றுலா, தல யாத்திரைன்னு போய் வருவீங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கும் வாய்ப்பு இருக்குங்க. ஆனா போற நாட்டிலே உங்க உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக்கோங்க; அதோட அங்கே புது அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையாகவும் இருங்க. சிலர் பளிச்னு வார்த்தைகளை விட்டுடுவீங்க. அது வேண்டாத விவகாரங்களை வளர்க்குமுங்க. அதனால சுற்றுச் சூழலை உத்தேசித்துப் பேசுங்க. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகிட்ட அனாவசியமா விவாதம் பண்ணாதீங்க; யாரைப் பற்றியும் புறஞ்சொல்லாதீங்க. கண்களில் ஏற்கெனவே கோளாறு இருக்கறவங்க முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்க. சிலருக்கு நரம்பு உபாதை வரும்.
இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டுங்க. பள்ளிகொண்ட பெருமாளை வழிபடுங்க; பாக்கியம் கிட்டும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் துளிர்விடும் வாரமுங்க. புது முயற்சிகள், உற்சாகம் தரும்வகையில் வெற்றியாக முடியுமுங்க. கூடுதல் சந்தோஷமா, பிரிந்த சில குடும்ப உறவுகள் மறுபடி ஒண்ணு சேருமுங்க. பெரிய முதலீடுகளை குடும்பத்தார் ஆலோசனையுடன் செய்ங்க. தொழில் திட்டங்களை உங்கமேல அக்கறை கொண்ட உறவுக்காரங்க, நண்பர்கள் யோசனையோடு செய்ங்க. சிலர் படிப்பு, உத்யோகம் அல்லது தொழில் காரணமாக வெளிநாடு போவீங்க. அந்த நாட்டு சூழ்நிலையை அனுசரிச்சு, உங்க திறமைகளையும் வருமானத்தையும் பெருக்கிக்கோங்க. சிலருக்கு தொலைதூரச் செய்திகள் நன்மை சுமந்து வருமுங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதல் கனியுமுங்க. சிலருக்குக் கழிவுப்பாதையில் பாதிப்பு வருமுங்க; சிலர் சிறுநீர்ப்பாதை அடைப்பால கொஞ்சம் அவதிப்படுவீங்க.
இந்தத் தேதிப் பெண்கள் புது உறவுகளால சந்தோஷம் அடைவீங்க. சிவனை வழிபடுங்க; சிறப்புகள் கூடி வரும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்தப் பயணத்தையும் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக யோசிச்சு மேற்கொள்ளுங்க. அவசியமில்லாத, குறிப்பாக இரவுநேரப் பயணத்தைத் தவிர்த்திடறது நல்லதுங்க. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், சுபவிசேஷங்களுக்குக் குடும்பத்தாரோடு ஒரே வாகனத்தில் போக வேண்டாங்க. பூர்வீக சொத்து விஷயத்ல விட்டுக் கொடுத்துப் போறதனால தப்பில்லீங்க; இதனால நீங்க நிச்சயம் நஷ்டப்படமாட்டீங்க; எதிர்கால நன்மையும் உண்டுங்க. அதேசமயம், யாருக்கும் இரக்கப்பட்டு ஜாமீன் கையெழுத்துப் போடறதோ, உத்தரவாதம் அளிக்கறதோ வேண்டாங்க. சிலருக்கு முதுகெலும்பில் கீழ்ப் பகுதியில் பாதிப்பு ஏற்படலாமுங்க. சிலருக்கு அடிவயிறு முதல் பாதம்வரை ஏதேனும் உபாதை தெரியலாம்.
இந்தத் தேதிப் பெண்கள் யாரையும் எடுத்தெறிஞ்சுப் பேசாதீங்க; குடும்பத்ல சிறு வாக்குவாதமும் பெரிய பிரச்னையை உருவாக்குமுங்க. விநாயகரை வழிபடுங்க; வேதனைகள் விலகிப்போகும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
‘உங்களை டிரான்ஸ்ஃபர் பண்றோம், இன்ன இடத்துக்குப் போங்க’ன்னு உத்யோகத்ல மேலதிகாரி சொல்றாரா, கொஞ்சமும் வருத்தப்படாதீங்க. அது அனேகமா பதவி உயர்வோடும் ஆதாயங்களும் கூடிய இடமாற்றமாகத்தான் இருக்கும். உங்களால எங்கேயும் திறமையை நிரூபிக்க முடியும் என்பதற்கான வாய்ப்பாகவே இதைக் கருதிக்கொள்ளுங்க. சிலர் பணிபுரியும் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைக்கும் இடமாற்றம் பெறலாம். பிள்ளைகளோட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. அவங்க அலட்சியமாகத்தான் இருப்பாங்க; ஆனா நீங்கதான் கவனிச்சு, உரிய சிகிச்சைக்கு வழி செய்யணுமுங்க. சுபநிகழ்ச்சிகளால வீடு கலகலப்பாகுமுங்க. வியாபாரம், தொழிலெல்லாம் எதிர்பார்த்தபடி வளர்ச்சி பெறுமுங்க. ரத்தத்ல சர்க்கரை, கொழுப்பு சங்கதிகளைப் பரிசோதிச்சுக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் வீட்டிலும், வெளியிலும் நல்ல பெயர் எடுப்பீங்க. அனுமனை வழிபடுங்க; ஆற்றல் பெருகும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பழைய கடனெல்லாம் பைசலாகிறதால மனசில் சந்தோஷம் நிறையுமுங்க. புதிதாகக் கடன் வாங்க வேண்டியிருந்தாலும் சுபவிசேஷங்களை நிறைவேற்றுவதற்காக என்றால் அதில் தப்பில்லீங்க. அடுத்தடுத்துத் தொடர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்குமுங்க. இதனால கொஞ்சம் உடல் உபாதை ஏற்பட்டாலும் உடனே சரியாகிடுமுங்க. அதேசமயம் பயணங்களின்போது புதிதாக அறிமுகமாகிறவங்க நட்பை அந்தப் பயணத்தோடு வெட்டிவிட்டுடுங்க; தொடர வேண்டாம். தொழில், வியாபாரம், உத்யோக இனங்கள்ல ஆதாயம் கூடும். புது வாகனம் வாங்க இது சரியான நேரமுங்க. குலதெய்வ வழிபாடு ஏதேனும் பாக்கியிருந்தா உடனே முடிச்சுடுங்க. சிலர் கண் அழுத்த உபாதையால பாதிக்கப்படலாம்; உரிய பரிசோதனை செய்துக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுக ஆண்-பெண்ணிடம் நெருங்கிப் பழக வேண்டாங்க. இஷ்டப்பட்ட மகானை வழிபடுங்க; இஷ்டமெல்லாம் ஈடேறும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதிர்பாராத இடங்கள்லேர்ந்தெல்லாம் தாக்குதல் வருதேன்னு கோபமா ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு நீங்க இதுக்கு முன்னால நடந்துகிட்ட விதம்தான் காரணமுங்க. யாரையும் பகைச்சுக்காம வாழப் பழகணுமுங்க. மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது சினம் தவிர்த்து, இதம் சேர்த்துத் தெரிவிக்கணுமுங்க. உங்கக் கருத்தைத் திணிக்க முயற்சிக்காம, உறுதியாகச் சொல்லி அதைப் பிறர் மனசில் பதிய வைக்கப் பாருங்க. எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்கணுமுங்க. சிலருக்கு விபத்துக்கான வாய்ப்பு இருக்கறதால வாகனம் ஓட்டும்போது எந்த கவனச் சிதறலுக்கும் இடம் தராதீங்க. நிலம் வாங்குவதானால், உரிய ஆவணங்களை தகுந்த நிபுணர்கிட்ட காட்டி சரிபார்த்துக்கோங்க. ரத்தக் கொதிப்பு, நரம்பு உபத்திரவத்தை பரிசோதனை பண்ணிக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்கள் குடும்பப் பிரச்னையில் நல்ல யோசனை சொல்வீங்க. முருகப் பெருமானை வழிபடுங்க; மங்களங்கள் நிறையும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!