SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : நவம்பர் 10 முதல் 16 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதையும் நிதானமாக அணுக வேண்டிய நேரமுங்க. சின்ன விஷயத்துக்கும் கோபப்படும் உணர்வைக் கட்டுப்படுத்திக்கதாங்க வேணும். கோபப்பட்டதால ஏற்பட்ட பின்விளைவுகளை நினைவு வெச்சுகிட்டா, மறுபடி கோபப்படமாட்டீங்க. நிதானம், விவேகத்தைப் பழக்கும். புதுத் தொழில் தொடங்க அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகுமுங்க. தொழில் மாறவும் உத்யோகம் மாறவும் இது சரியான காலகட்டமுங்க. புதிதாக வேலை தேடறவங்க, நேர்முகத் தேர்வில் எரிச்சலடையாம பதில் சொல்லுங்க. கனிமங்கள், கால்நடைகள் சம்பந்தமான தொழில் செய்யறவங்க பெரிய ஆதாயத்தை எதிர்பார்க்கலாமுங்க. குடும்பத்ல தடைகள் நீங்கி சுப விசேஷங்கள் மனநிறைவாக நடந்தேறுமுங்க. ஏற்கெனவே கண்கள், நரம்பு உபாதை இருக்கறவங்க, மருத்துவர் யோசனையைத் தட்டாதீங்க. இந்தத் தேதிப் பெண்கள் இனிமையாகப் பேசி நட்பையும் உறவையும் வளர்த்துக்கோங்க. ஆஞ்சநேயரை வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்பாராத இடத்திலிருந்து நற்செய்திகள் வருமுங்க. சிலருக்கு அவர்கள் முயற்சியே செய்யாத இடங்களிலிருந்து புது வேலை வாய்ப்பு அல்லது கூடுதல் வசதி, சலுகைகள், வருமானம் அளிக்கும் இன்னொரு வேலைன்னு கிடைக்குமுங்க. தொழில்ல புது கூட்டாளிகளால லாபம் அதிகரிக்குமுங்க. அவங்களால புது ஒப்பந்தங்கள்ல கையெழுத்திடுவீங்க. பெரிய முதலீடுகளை தைரியமாகச் செய்யலாமுங்க. தொடர்ந்து நன்மை தரும் விஷயங்களாகவே நடந்து வருமுங்க. அதேசமயம், எந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியாகவே வெளிப்படுத்துங்க; பெருமையாகச் செய்யாதீங்க; இது உங்களை அகம்பாவம் பிடிச்சவர்னு பிறரை நினைக்க வைத்திடும். குடும்பத்தில் பிள்ளைகளோட உடல்நலன், அவங்களோட சகவாசத்தை கவனிங்க. பக்குவமா திருத்துங்க. வயிறு, கழிவுப்பாதை உபத்திரவம் தெரியுதுங்க. இந்தத் தேதிப் பெண்களின் கனவுகள் நனவாகுமுங்க. சிவனை வழிபடுங்க; சிறப்புகள் கூடும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மன அழுத்தம் ஏற்படுமுங்க. வீண் கற்பனைகளை வளர்த்துக்கறதால அனாவசிய சந்தேகம், அதனால நெருங்கியிருக்கற நல்லவங்க மேல அனாவசியமா கோபப்படறதுன்னு நிலைமையை மோசமாக்கிக்காதீங்க. சில கசப்பான அனுபவங்களால சிலர் உண்மை நிலையை உணர்ந்து திருந்திக்கவும் செய்வீங்க. ஆனா, எதிலும் சுயநல நோக்கைத் தவிர்த்தீங்கன்னா பொதுவாகவே நன்மைதாங்க. மனதை ஒருநிலைப்படுத்த தினமும் பிராணாயாமம், தியானம், யோகான்னு பயில்வது நல்லதுங்க. சட்டத்துக்குப் புறம்பானவங்களோட தொடர்பு வெச்சுக்காதீங்க; அப்புறம் உங்களால அவங்க வலையிலிருந்து மீள முடியாமலேயே போயிடும்; எச்சரிக்கையா இருங்க. சிலருக்கு முதுகெலும்பின் கீழ்ப்பகுதி, சிலருக்கு பாதத்தில் உபாதை வரலாம். இந்தத் தேதிப் பெண்கள் அறிமுகமில்லாத ஆண், பெண் யாராக இருந்தாலும், கொஞ்சம் விலகியே பழகுங்க. மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மனது ஒருநிலைப்படும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிறருடைய பாராட்டை சம்பாதிச்சுக்கணுங்கறதுக்காக, சம்பந்தமில்லாத விஷயங்கள்ல தலையிடாதீங்க. அனாவசிய வம்பில் ஆர்வம் காட்டாதீங்க. பிறர் குடும்ப விவகாரங்கள்ல மூக்கை நுழைச்சு கெட்டப் பெயர் வாங்கிக்காதீங்க. ‘நட்புக்காக உயிரையும் கொடுப்பேன்’னு டயலாக் பேசி வம்பிலே மாட்டிக்காதீங்க. விளையாட்டாகவோ, கேலியாகவோ பேசுவதெல்லாம் விபரீதமாகப் போய்விடும் காலம் என்பதால், பேச்சில் அனர்த்தமாக வார்த்தைகளை விடாதீங்க. மொத்தத்ல தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருந்திடறதே உத்தமமுங்க. குறிப்பாக அரசியல்வாதிகள் அமைதி காக்கவேண்டியது ரொம்பவும் முக்கியமுங்க.  ஒற்றைத் தலைவலி பிரச்னை தரும். சிலருக்கு காது-மூக்கு- தொண்டை பகுதிகள்ல பாதிப்பு ஏற்படும். சிலர் சளித் தொந்தரவால அவதிப்படுவீங்க. இந்தத் தேதிப் பெண்கள் யாருக்கும் எதற்கும் வாக்குக் கொடுக்காதீங்க. பார்வதியை வழிபடுங்க; பத்திரமா பேசுவீங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புதிய அறிமுகங்களால பல நன்மைகளை அடைவீங்க. புது நண்பர் அல்லது அதற்கு முன் அறிமுகமில்லாத தூரத்து உறவுக்காரர் உங்களுக்கு நல்ல சில யோசனைகளைச் சொல்வாங்க. அதன் மூலம் உங்க மேல்படிப்பு, வேலை, உடல்நலம்னு பல விஷயங்கள்ல உங்க முன்னேற்றத்துக்கு அந்த யோசனைகள் உதவுமுங்க. இந்த பலத்தால உங்களோட தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க; முக்கியமான முடிவுகளை உறுதியாக எடுத்து வெற்றி பெறுவீங்க. பிரிந்திருந்த குடும்பங்கள் இப்ப ஒண்ணு சேருமுங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டுவாங்க. உத்யோகம், தொழில், வியாபார தலங்கள்ல பாராட்டும் உரிய அங்கீகாரமும் பெறுவீங்க. சிலருக்கு அரசாங்க விருதுகளும் கிடைக்கலாம். சிலருக்கு ஒவ்வாமையால லேசான பாதிப்பு வரும். இந்தத் தேதிப் பெண்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி பிறருக்கு நிம்மதி கொடுப்பீங்க. விநாயகரை வணங்குங்க; வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆசை வார்த்தை பேசி, நைச்சியமாகப் பழகும் நபர்கள்கிட்ட ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணுமுங்க. உங்க வளர்ச்சியில பொறாமை கொண்டவங்க, உங்க கூட இருந்தே கழுத்தறுப்பாங்க; அப்படிப்பட்டவங்களை அடையாளம் கண்டுகொண்டு, விலக்கி வெச்சுடுங்க. பிறர் பாராட்டுக்குப் பின்னால ஏதாவது பாதிப்பு இருக்குமோங்கற சந்தேகத்தோடவே அவங்க கிட்ட பழகவேண்டியது இந்த வாரம் மிகவும் அவசியமுங்க. முக்கியமான, பெரிய விஷயங்களைத் தள்ளிப்போடறதும் நல்லதுதாங்க. பொறுமையாக இருங்க. குலதெய்வ வழிபாடு ஏதேனும் பாக்கியிருந்தா அதை உடனே முடிச்சுடுங்க. குலதெய்வம் உங்களுக்கு சரியான வழிகாட்டுமுங்க. சிலருக்குக் கழுத்துப் பகுதியில் சுளுக்கு, நரம்பு உபாதை ஏற்படுமுங்க; சிலருக்கு கால்கள் மரத்துப் போகலாம். இந்தத் தேதிப் பெண்கள் புதியவங்க பேச்சை நம்பி எதையும் செய்ய வேண்டாங்க. பெருமாளை வழிபடுங்க; பெரிய இழப்பு எதுவும் நேராது.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கூடுதல் வசதிக்காகவோ அல்லது ஏதேனும் பிரச்னை காரணமாகவோ வசிப்பிடத்தை அல்லது உத்யோகத்தை மாற்ற வேண்டியிருந்தால், அதுக்காகத் தயங்காதீங்க. உடனே கிடைக்கக்கூடிய வேறு வீடு அல்லது உத்யோகத்துக்கு மாறிடுங்க; இது எதிர்காலத்துக்கு நன்மை தருமுங்க. சிலருக்கு இப்போதைய உத்யோகத்ல பிரச்னைகள் நிவர்த்தியாகிடும்; மேலதிகாரியும் அன்யோன்யமாக இருப்பார். சக ஊழியர்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் தொந்தரவு தரமாட்டாங்க. புதிய மனிதர் சந்திப்பு, அதைத் தொடர்ந்து விஐபிகள் சந்திப்பு என்று வாழ்க்கையில் நல்ல திருப்புமுனைக்கு வழி கிடைக்குமுங்க. பூர்வீக சொத்து சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்குங்க. சிலர் ரத்தத் தொற்று நோயால் பாதிக்கப்படலாம். சிலருக்கு நீர் தொற்று நோய் வரக்கூடும் என்பதால், காய்ச்சிய குடிநீரை மட்டுமே பயன்படுத்துங்க. இந்தத் தேதிப் பெண்கள் உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீங்க. துர்க்கையை வழிபடுங்க; துயரங்கள் தொலையும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல சுபவிசேஷங்கள் சந்தோஷமாக நடைபெறுமுங்க. இதனால ரொம்ப நாளா தொடர்பு விட்டுப் போயிருந்த நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீங்க; நட்பும் உறவும் பலப்படுமுங்க. இந்தத் தேதி படைப்பாளிகளுக்கு இது நல்ல காலமுங்க. தனியார் அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் பாராட்டுகளும், விருதுகளும் கிடைக்குமுங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. ஆவணங்களை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கறதிலே உங்க கூட்டாளிகள் அலட்சியமா இருக்கலாம்; ஆனா, நீங்க பொறுப்பெடுத்து அனுப்பி வையுங்க. சிலர் மன வேற்றுமை காரணமாகக் கூட்டுத் தொழில்லேர்ந்து பிரிந்து புதுத் தொழில் மேற்கொள்வீங்க. இதுவும் நல்லதுதாங்க. சிலருக்கு சரும நிற மாற்றம் ஏற்படுமுங்க; சிலர் அஜீர்ணக் கோளாறால அவதிப்படுவீங்க. இந்தத் தேதிப் பெண்களின் சில விருப்பங்கள் சந்தோஷமாக நிறைவேறுமுங்க. புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; வெற்றிகள் அணிவகுக்கும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்தார் சொல்லக்கூடிய யோசனைகளை ஒரு தரத்துக்கு ரெண்டு தரமாக யோசிச்சு எடுத்துக்கோங்க. ஏன்னா, உங்க மேல இருக்கற அக்கறையினால, உங்களோட இப்போதைய நிலையை மட்டும் உத்தேசிச்சு, உணர்ச்சிவசப்பட்டு அவங்க சில யோசனைகளைச் சொல்வாங்க. அதை அப்படியே எடுத்துகிட்டீங்கன்னா சில நல்ல நண்பர்களை நீங்க இழக்க வேண்டிவருமுங்க. பொறுமையாக இருங்க. யாரும், யாரைப் பற்றியும் சொல்ற விமரிசனங்கள்ல உண்மை என்னன்னு தெரிஞ்சுகிட்டு அப்புறமா உங்க அபிப்ராயத்தைச் சொல்லுங்க. இது வெளிவட்டாரப் பழக்கம், உத்யோக இடத்துக்கு ரொம்பவும் பொருந்துமுங்க. பழுதுபட்டிருக்கும் வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீங்க. பாரம்பரிய நோய் பாதிக்கப்பட்டவங்க முறையான மருத்துவத்தைக் கொஞ்சமும்
கைவிடாதீங்க. இந்தத் தேதிப் பெண்கள் யார் பேச்சையும் உடனே நம்பிடாதீங்க; நஷ்டப்படாதீங்க. பள்ளிகொண்ட பெருமாளை வணங்குங்க; துள்ளிவரும் நன்மையெல்லாம்.                          

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்