SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை

2016-08-03@ 14:15:13

நெல்லை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு நன்றி தெரிவிக்கும் ஆரத்தி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீபதட்டுகளை ஆற்றில்விட்டு வழிபட்டனர். நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக மக்களுக்கு பயணிக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆரத்தி பூஜை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறை மண்டபத்தில் நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி ராஜாராம் பட்டர் குழுவினர் மகா கணபதி பூஜை நடத்தினர். தொடர்ந்து மகா சங்கல்பம், புன்யாவஜனம், கும்ப பூஜைகள் நடந்தன, பின்னர் நதிநீர் அபிஷேகமும், மகா ஆரத்தி தீபாராதனையும் நடந்தது. தீபாராதனையை அடுத்து திரண்டிருந்த பக்தர்கள் அகல் விளக்கு, தட்டு, வெற்றிலை போன்றவற்றில் சூடன் ஏற்றி ஆரத்தி எடுத்து ஆற்றில் விட்டனர். மலர்களை ஆற்றில் தூவியும் வழிபட்டனர். தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வழிபாடு நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மாரிமுத்து தலைமைவகித்தார், மாவட்ட தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். செயலாளர் ஏகாம்பர ஸ்தபதி,  துணைத்தலைவர் சென்பகராஜ், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜன், முருகேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்