SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதி

2016-07-29@ 12:38:30

ஆக. 4 வரை மலையேறலாம்

வத்திராயிருப்பு : ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆக. 4ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை பிரசித்தி பெற்றதாகும். ஆக. 2ம் தேதி ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கு, குருப்பெயர்ச்சி ஒன்றாக வருகின்றன. எனவே, தமிழகம் மட்டுமின்றி  வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவர். ஆடி அமாவாசையையொட்டி, நேற்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணிக்கே தாணிப்பாறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்துவிட்டனர். வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்பு, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு காலை 6 மணிக்கு காலசாந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. சந்தனமகாலிங்கம், பிலாவடி கருப்பசாமி, சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கியுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையில் தாணிப்பாறை, வழுக்கல் அருவி, மாங்கேனி, சங்கிலிபாறை, கோரக்கர் குகை உள்ளிட்ட 9 இடங்களில் 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு  வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரையூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தாணிப்பாறையில் இருந்து மலை ஏறும் பாதை கண்காணிக்கப்படுகிறது.

அடிவாரத்தில் டிஎஸ்பி சங்கரேஸ்வரன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்ஐகள் ஆர்தர்ஜஸ்டின், கண்ணன், சங்கரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரக அலுவலர் பால்பாண்டியன், வனவர் மணிவண்ணன் தலைமையில் வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர், கழிப்பறைக்கான தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை ஆணையாளர் சுப்பிரமணியன், திட்ட ஆணையாளர் ராஜ்மோகன், மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் கருப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேல்முருகன் செய்துள்ளார். ஆக. 4 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்