SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : நவம்பர் 3 முதல் 9 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் உற்சாகமாக செயல்படும் வாரமுங்க. மனசில் தைரியமும் தன்னம்பிக்கையும் பீறிட, புது சாதனைகள் படைப்பீங்க.  மேலதிகாரிகளின் பாராட்டுகள், பல சலுகைகளையும் உயர்வுகளையும் சம்பாதித்துத் தருமுங்க. அதேசமயம் உணர்ச்சிவசப்பட்டு, பேசும் வார்த் தைகளை தடிக்க வைத்துவிடாதீங்க. நல்ல வாய்ப்புகள் வரும்போது நையாண்டி குணத்தால அவற்றை நீங்களே துரத்தி அடிக்காதீங்க. சூரிய உதய த்துக்கு முன்னால் எழுந்திருந்து, அன்றன்றைய பணிகளைப் பதட்டப்படாமல் செய்தீங்கன்னா, நன்மைகள் நிலைத்திருக்குமுங்க. கூட்டுத் தொழில்ல  பங்குதாரர்களுடன் எந்த கருத்து வேற்றுமையும் கொள்ள வேண்டாங்க. குடும்பத்ல பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் உடல்நலத்ல அக்கறை எ டுத்துக்கோங்க. பாரம்பரிய நோய் அறிகுறி இருக்கறவங்க முறையான பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது யோசனைகள் சொல்லி பலரையும் பிரமிக்க வைப்பீங்க. நவகிரக சந்நதியில சூரியனை வழிபடுங்க; நன்மைகள் ஒளி வீசும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்தார் உடல்நலத்ல எச்சரிக்கையா இருங்க. ஒருவர் மாற்றி ஒருவருக்குன்னு ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்படலாம். பொதுவாக வாய்க் க ட்டுப் பாடு இருக்கறது நல்லதுங்க. இது எடுத்துக்கற உணவுக்கும் பொருந்தும் பேசற பேச்சுக்கும் பொருந்தும். உணவுக் கட்டுப்பாட்டால் உடல்நலக்  கோளாறுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்; பேச்சுக் கட்டுப்பாடு உறவு, நட்பு முறைகளில் கோளாறுகளை சரிபண்ணும். வரவுக்கு மீறிய செலவு  தெரியுதுங்க. அதனால சிக்கனத்தைக் கட்டாயமா கடைபிடிக்கணுமுங்க. யாருக்கும் பரிதாபப்பட்டோ, யாரேனும் பாராட்டணுங்கறதுக்காகவோ  அனாவசியமா செலவு செய்யாதீங்க. உத்யோகத்ல புது முயற்சிகள் வெற்றி தருமுங்க. சொத்து வாங்குவது, விற்பதில் லாபம் கிட்டும். உணவுக்குழாய் பாதிப்பு, அஜீர்ணம்னு ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலாரிடத்தில் எச்சரிக்கையாகப் பேசுங்க. நவகிரக சந் நதியில சுக்கிரனை வழிபடுங்க; நலன்கள் பெருகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசில் இருந்த இனம் புரியாத பயங்கள் விலகிடுமுங்க. தன்னம்பிக்கை வளர்வதால புதுப்புது உத்திகள் தோன்றி, பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு  காண்பீங்க. எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகத்தான் முடியுமுங்க. அதேசமயம், அவசியமில்லாத பயணத்தைத் தவிர்த்திடுங்க. உறுதியாகத் தெரியாத  ஆதாயத்தை நம்பி அப்படி பயணம் மேற்கொள்வது நஷ்டத்தைத் தருமுங்க. உங்க பேச்சை, யோசனையைக் கேட்கறாங்கங்கறதுக்காகப் பிறர் குடும்ப  விவகாரங்கள்ல தலையிடாதீங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் நன்மை தருமுங்க. மறைமுக எதிரிகளின் பலம் அதிகரிச்சிருக்கறதால, எந்த  முயற்சியையும் விழிப்போடு செய்ங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை பரிசோதிச்சுக்கோங்க; சிலருக்கு சருமத்தில் சிறு கொப்பளமும் பெரிய  உபாதையாகலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் உறவினர் மத்தியில் பாராட்டப்படுவீங்க. நவகிரக சந்நதியில் செவ்வாயை வழிபடுங்க; சிறப்புகள் சேரும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பல வழிகளிலும் பணவரவுக்கு வாய்ப்பு இருக்குங்க. இதிலே அத்தியாவசிய செலவு போக, மிச்சம் பிடிச்சு சேமிக்கவும் பழகிக்கோங்க. கடவுள் அருளால் அதிர்ஷ்டம் துணை இருக்கறதால  நல்ல புது வாய்ப்புகள் வந்துசேருமுங்க. வெளிநாட்டிலிருந்து ஆதாயமான செய்திகள் வருமுங்க. நல்ல மனிதர்  சந்திப்பால எதிர்கால திட்டங்கள் சில நிறைவேற வாய்ப்பு கிடைக்குமுங்க. அதேபோல புது நட்புகளாலும், உங்க எண்ணங்களை நீங்க  நிறைவேற்றிக்கொள்ள முடியுமுங்க. உடம்பிலே எந்தப் பகுதியிலாவது திடீரென வித்தியாசமா அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.  சிலருக்கு வழுக்கி விழுவது, நெருப்பால் பாதிப்புன்னு ஏற்படலாமுங்க. நீங்க பிறந்த கிழமையில, பிரம்ம முகூர்த்த நேரத்ல வீட்டு பூஜையறையில 5 தீபம் ஏற்றி வழிபடுங்க. சின்னச்சின்ன சங்கடமும் சட்டென ஓடிவிடும்.

இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்களால ஆதாயம் பெறுவீங்க. நவகிரக  சந்நதியில சனிபகவானை வழிபடுங்க; சடுதியில் முன்னேறுவீங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாமுங்க. சிலருக்கு ஒவ்வாமையால் சரும அரிப்பு ஏற்படலாம். வெளிநாட்டுத் தொடர்பு இ ருக்கறவங்க நல்ல செய்தி கேட்பீங்க. அங்கிருக்கும் பிற மதத்தாரால் உங்களுக்கு ஆதாயம் தேடி வருமுங்க. தொழில்ல பெரிய திட்டங்களை செயல் படுத்த முடியுமுங்க. மதிப்பு வாய்ந்த திட்டம் எதையேனும் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வ வழிபாட்டை முடிச்சுடுங்க; பலமடங்கு நன்மை  பெறுவீங்க. உத்யோகத்ல இருக்கறவங்க முதலாளியின் நடவடிக்கைகளில் தவறு கண்டுபிடிக்காதீங்க; விமரிசனம் செய்யாதீங்க. அவங்க செயல்களுக்கு  எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆகவே ரோஷப்பட்டு வேலையை விட்டுடாதீங்க. முதியவர்களோடு விவாதம் செய்து அவங்க வெறுப்பை  சம்பாதிச்சுக்காதீங்க.

இந்தத் தேதிப் பெண்களில் சிலர் பத்திரிகைகளில் இடம் பெறும் அளவுக்கு சாதனை படைப்பீங்க. நவகிரக சந்நதியில் குரு  பகவானை வழிபடுங்க; குறையாத வளம் சேரும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்க சகவாசத்தை நீங்களே சுய பரிசோதனை பண்ணிக்கோங்க. உங்ககிட்ட உதட்டன்போடு பேசறவங்க யார், உள்ளன்போட பேசறவங்க யார்னு  கண்காணியுங்க. உங்க மேல உண்மையான அன்பு இருக்கறவங்களை நெருக்கமா வெச்சுக்கோங்க. இந்த வாரம் இந்த பரிசோதனைக்குத் தோதாக  ஓரிரு சம்பவங்கள் நிகழுமுங்க. உத்யோகத்ல ரொம்பவும் கவனமா இருக்கணுமுங்க. யாரோ செய்யற தவறுக்கு நீங்க பழி ஏற்க வேண்டி வரலாம்.  அலுவலக கோப்பு என்றில்லாமல், எங்கெங்கெல்லாம் கையெழுத்துப் போடுகிறீர்களோ, அப்போதெல்லாம் ஒரு நிமிடம் யோசித்து செய்ங்க. குடும்பத்ல  சுபவிசேஷங்கள் மனநிறைவாக நடந்தேறுமுங்க. கெட்டுப்போன உணவை, மீந்துபோகுதேன்னு எடுத்து சாப்பிட்டு வயிற்றில் வேதனையை வளர்த் துக்காதீங்க. சிலர் கண் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

இந்தத் தேதிப் பெண்கள் இனிக்கப் பேசறவங்ககிட்ட இதயத்தைப் பறிகொடுத் திடாதீங்க. நவகிரக சந்நதியில புதன் பகவானை வழிபடுங்க; புது வாழ்க்கை மலரும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல பல நன்மைகளை எதிர்பார்க்கலாமுங்க. புதிய பொறுப்புகளும் பதவியும் தேடி வருமுங்க. வியாபாரம், தொழில்ல ஈடுபட்டி ருக்கறவங்களுக்கு அரசு அதிகாரிகளின் நட்பும் ஆதரவும் கிடைக்குமுங்க.  சிலருக்கு நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த ஒப்பந்தங்கள் கைகூடும்.  சிலர் புதுத் தொழிலும் தொடங்க முடியுமுங்க. சிலர், மகான் தரிசனத்தால் மனம் தெளிவு பெறுவீங்க. விடுபட்ட தெய்வ வழிபாட்டை இனியும் காலந் தாழ்த்தாம நிறைவேற்றிடுங்க; அதன் பிறகு வரக்கூடிய நல்ல செய்தி அந்த தெய்வத்தின் ஆசியை உணர்த்துமுங்க. வாழ்க்கைத் துணையுடன்  அநாவசிய வாக்குவாதத்தில் ஈடுபடாதீங்க. வாகன மாற்றம் நன்மை தருமுங்க. நரம்பு உபாதைகளை மருத்துவர் கவனத்துக்குக் கொண்டு போங்க.  

இந்தத் தேதிப் பெண்கள் எதிர்பாராத நன்மைகளை அடைவீங்க; பொருள் சேர்க்கையும் உண்டாகும். நவகிரக சந்நதியில் செவ்வாய் பகவானை  வழிபடுங்க; செல்லுமிடமெல்லாம் சிறப்பு பெறுவீங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல புது வரவு மகிழ்ச்சியை அதிகரிக்குமுங்க. குடும்ப உறவுகளில் சரியான புரிதலும் நெருக்கமும் அதிகமாகுமுங்க. சில குடும்பங்கள்ல பிரிந் தவங்க ஒண்ணு சேருவதும் நடக்குமுங்க. வீட்டுப் பெரியவங்க ஆசியும் அவங்களோட நல்ல அறிவுரைகளும் மனசுக்குத் தெம்பு தருமுங்க.  அதேசமயம் பிள்ளைகளோட பழக்க வழக்கங்கள் கொஞ்சம் மன சங்கடம் தரலாம். இது, சிலரைப் பொறுத்தவரை, இது, பெரியவங்க தங்களோட இ ளமைக்கால விஷயங்களை கொஞ்சம் வெளிப்படையாகப் பேசறதோட விளைவாகவும் இருக்கலாம். அவங்ககிட்ட நட்பாகப் பேசி திசை திருப்பப் பாரு ங்க. மேல்படிப்பு, வேலை அல்லது தொழில் காரணமாக சிலர் வெளிநாட்டுக்குப் போவீங்க. மூட்டுகளில் வலி, நரம்புக் கோளாறு என்று வரலாமுங்க.  
இந்தத் தேதிப் பெண்கள் குடும்பத்தாரின் பாசத்தைப் பெற்று மகிழ்வீங்க. நவகிரக சந்ந்தியில் கேது பகவானை வழிபடுங்க; கேடுகள் எல்லாம்  காணாமல் போகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நல்ல விஷயங்கள் நெருங்கிவரும்போது, அனாவசியமான, மூர்க்க எண்ணத்தால அதையெல்லாம் நீங்களே விரட்டிடாதீங்க. முந்தைய கால  அவமானங்களை நினைச்சு வேதனைப்பட்டு அதுக்குக் காரணமானவங்களை இப்பப் பழிவாங்க நினைக்காதீங்க. கொஞ்சம் ஆற, அமர யோசிச்சீங்க ன்னா, அந்த அவமானங்களுக்கு அடிப்படையில் நீங்களே காரணமாக இருந்ததும் புரியவருமுங்க. உத்யோகத்ல உங்க வேலையை நீங்க பிழையில் லாம செய்யப் பாருங்க; மற்றவர் பிழையைச் சுட்டிக்காட்டாதீங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, தனியாகப் பிரிஞ்சு சொந்தமா தொழில் ஆரம்பிக்க  வாய்ப்பு வருமுங்க; தைரியமா செய்யலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை சம்பந்தமா ஒருதரம் ரத்தப் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பழைய சம்பவங்கள்லேயே ஆழ்ந்திடாம, புது விஷயங்கள்ல ஆர்வமா ஈடுபடுங்க. நவகிரக சந்நதியில் ராகு பகவானை வழிபடுங்க;  நல்லதே நடக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்