SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம் உங்களை அதிகமா டென்ஷனாக்கக்கூடியது உங்கக் குடும்பத்துப் பெரியவங்களோட உடல்நலக் குறைவுதாங்க. ஏற்கெனவே உடல்நலமில்லாம இருந்தாங்கன்னா, அதே மருத்துவத்தைத் தொடர்வதோ, மருத்துவரை மாத்தறதோ அல்லது சிகிச்சை முறையையே மாத்தறதோ செய்யலாமுங்க.  உடல்நிலையில் முன்னேற்றம் தெரியாவிட்டாலும் அவங்களோட மனசு, வேதனைகளையும் மருத்துவ முறைகளையும் தாங்கிக்குமுங்க. உத்யோகத்ல மேலதிகாரியும் சக ஊழியர்களும் அனுசரணையாக இருப்பாங்க. உத்யோகத்ல இடமாற்றம் கிடைச்சா, குடும்ப சூழ்நிலையை அனுசரிச்சு ஏற்றுக்கோங்க; எதிர்கால நன்மைகள் உண்டுங்க. சிலர் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு பாதிப்புக்கு ஆளாகலாம்; சிலருக்கு ஈரல் உபாதை ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலாரிடம் எச்சரிக்கையாகப் பேசுங்க.

ஞாயிற்றுக்கிழமை அனுமன் சாலீஸா பாடி, அனுமனை தரிசனம் பண்ணுங்க; ஆனந்தம் நிலைக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கூடப் பிறந்தவங்களோட வாக்குவாதம் ஏற்படலாமுங்க. உங்கத் தரப்பு வாதத்தைத் தெளிவாக, உறுதியாக, ஆனா கோபமில்லாம, உணர்ச்சிவசப்படாம சொல்லுங்க. குறிப்பாக பூர்வீக சொத்து விஷயங்கள்ல யாரையும் எரிச்சலடைய வைக்காதீங்க. ‘இறைவன் கொடுப்பதை யாராலும் மறுக்க முடியாது’ங்கற தத்துவத்தை இதில் கண்கூடாகப் பார்க்க முடியுமுங்க. உத்யோகத்ல இருந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் நீங்கி, உங்க மதிப்பும் மரியாதையும் கூடுமுங்க. புது பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்குமுங்க. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகி, எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகவே முடியுமுங்க. சிலருக்கு அஜீர்ண உபாதை ஏற்படலாம் - வெளிச் சாப்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை வரலாம்; சிலருக்கு மாதவிடாய்க் கோளாறு உண்டாகும்.

புதன்கிழமை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, பெருமாளை வழிபடுங்க; பெருமைகள் சேரும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொதுவாகவே வருமானமும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்குங்க. ஆனாலும் ஏதேனும், நிலம், வீடுன்னு வாங்கறீங்கன்னா, அதிலே ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க. வாங்கறதோ அல்லது விற்கறதோ எதிலும் ஏமாந்துடாம இருங்க. சம்பந்தப்பட்ட ஆவணங்களை இந்தத் துறை நிபுணர்கிட்ட காட்டி, அதில் எந்த வில்லங்கமும் இல்லேங்கறதை உறுதிப்படுத்திக்கோங்க. இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் இந்த வாரம் எளிதாக முடியுமுங்க. வீட்ல சுபவிசேஷங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகள் விலக, கட்டாயமா குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றிடணுமுங்க. வெளிநாட்டுச் செய்திகள் நன்மைகள் சுமந்து வருமுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பிரச்னைகள் வரலாம். சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புது ஆடை, ஆபரணம் சேருமுங்க.

செவ்வாய்கிழமை துர்க்கை கவசம் படித்து, துர்க்கையை வழிபடுங்க; துயரம் எதுவும் கிட்டே நெருங்காது.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


பூமியால் ஆதாயம் உண்டுங்க. குறிப்பாக விளை நிலங்கள் வைத்திருக்கறவங்களுக்கு வருண பகவானும் அரசாங்க சலுகைகளும் ஆதரவா அமையுமுங்க. விவசாயப் பொருட்களும் கனிமங்களும் எதிர்பார்த்ததைவிட லாபம் ஈட்டித் தருமுங்க. ரியல் எஸ்டேட் வர்த்தகர்களுக்கும் இந்த வாரம், பூமித்தாய் அதிக ஆதாயங்களைத் தருவாள். உத்யோகத்ல இருக்கறவங்க ரொம்பவும் கவனமா வார்த்தைகளை விடணுமுங்க. யாருக்கும் யோசனை சொல்லி, பெயரைக் கெடுத்துக்காதீங்க. மேலதிகாரிகளிடமும் அனாவசியமா வாக்குவாதம் பண்ணாதீங்க. இந்தத் தேதி இளைஞர்களின் காதல் கைகூடும்; பெற்றோரின் ஆசியும் கிட்டுமுங்க. விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாட்டை மேலும் ஒத்திப்போடாம உடனே நிறைவேற்றிடுங்க. அடிவயிற்றில் பாதிப்பு தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வலியப்போய் அறிமுகமில்லாதவங்களுக்கு உதவ வேண்டாங்க.


ஞாயிற்றுகிழமை அனுமன் காயத்ரி சொல்லி, அனுமனை வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.

5, 14, 23, தேதிகளில் பிறந்தவர்களுக்கு

காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதைகள் ஏற்படலாமுங்க. சிலருக்கு அடிமுதுகு எலும்பில் வலி தோன்றுமுங்க. மற்றபடி தன்னம்பிக்கை உறுதிப்படுமுங்க. பிள்ளைகளோட உடல்நலத்திலேயும் அவங்க சகவாசத்திலேயும் ஒரு கண் வையுங்க. வெளிநாட்டு வர்த்தகத்ல ஈடுபட்டிருக்கறவங்க நற்பலன்களைப் பெறுவாங்க. அந்த நாடுகள்ல தேவையான உதவிகளைச் செய்ய அங்கே இருக்கறவங்க முன்வருவாங்க. பிள்ளைங்க வெளிநாட்டுப் படிப்பை மேற்கொள்ளவும் இது ஏற்ற காலகட்டமுங்க. உத்யோகத்ல புது முயற்சிகள், வித்தியாசமான யோசனைகளால புது உயரத்துக்குப் போவீங்க. சக ஊழியர்கள், ஏன், மேலதிகாரிகள்கூட சில பிரச்னைகளுக்கு உங்களோட ஆலோசனையைக் கேட்பாங்க.

இந்தத் தேதிப் பெண்கள், குடும்பப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்லி பெருமை அடைவீங்க.

வியாழக்கிழமை மகான் ராகவேந்திரர் நாமாவளி சொல்லி, அவரை வழிபடுங்க; நன்மைகள் அணிவகுக்கும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதுடா சாக்குன்னு காத்திருக்கறதுபோல சில விஷயங்கள் குடும்பத்ல மனக்கசப்பை உருவாக்குமுங்க. உங்க குடும்ப விவகாரத்தை பிற உறவுக்காரங்ககிட்டேயோ, நண்பர்கள்கிட்டேயோ சொல்லி அவங்களோட பஞ்சாயத்தைக் கேட்காதீங்க. உங்க வலி, வேதனை உங்களுக்கு. ‘மாட்டின் புண்ணும் வலியும் காக்கைக்குத் தெரியுமா’ன்னு சொல்றதுபோல உங்க இழப்பிலும் வருத்தத்திலும் சுகம் காணறவங்களை அடையாளம் கண்டு விலக்கி வெச்சுடுங்க. சிலருக்குக் கழுத்து சுளுக்கு ஏற்படலாம். சிலர் நரம்பு உபாதையால பாதிக்கப்படுவீங்க. தொடர் பயணம் ஆதாயம் தருமுங்க. உத்யோகத்ல உங்க திறமையை நிரூபிப்பீங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு, எதிர்பார்த்தபடியே சம்பளம், சலுகைகளோட நல்ல வேலை கிடைக்குமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யாரிடமும் அனாவசியமா வம்பு பேசாதீங்க.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, மகாலட்சுமியை வழிபடுங்க; மகோன்னதம் பெறுவீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தடைகள் எல்லாம் நீங்கி, சுபவிசேஷங்கள் மனநிறைவாக நடைபெறுமுங்க. மேல் படிப்பு, பணி, பிரசவம், நீண்ட விடுமுறை, ஏதேனும் மனவருத்தம்னு எந்த காரணத்துக்காகவாவது குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருந்தவங்க இப்ப ஒண்ணு சேருவாங்க. அதேபோல கருத்து வேற்றுமையாலோ, யாருடைய தூண்டுதலாலோ பிரிஞ்சிருக்கும் நண்பர்களும் ஒண்ணாயிடுவாங்க. உத்யோகத்ல சிலருக்கு புது பொறுப்புகள் வந்து சேருமுங்க. உடனே அதை ஏற்றுகிட்டு சாமர்த்தியத்தைக் காட்டுங்க. அரசுத்துறை ஊழியர்கள் சிலர் குழப்பங்கள்லேர்ந்து விடுபடுவாங்க. சிலருக்கு வழக்குகள் சாதகமாகத் தீர்ப்பாகுமுங்க. சின்ன இருமலா தெரியற தொண்டை உபாதையை அலட்சியப்படுத்தாதீங்க, அது பெரிதாகிடும். சிலருக்கு அலர்ஜியால சரும நிறமாற்றம் ஏற்படும்.

இந்தத் தேதிப் பெண்கள் பிரிவுத் துயரிலிருந்து மீள்வீங்க.

புதன்கிழமை, வேங்கடேச சுப்ரபாதம் சொல்லி, ஏழுமலையானை வணங்குங்க; ஏற்றம் உறுதி.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அடுத்தடுத்து ஏமாற்றங்கள் சிலரை விரக்தி நிலைக்கே கொண்டு சென்றிருக்கும். அவங்க, இப்ப நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாமுங்க. அந்த ஏமாற்றங்கள் சில இழப்புகளைத் தந்திருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்ததால அந்த பாதிப்புகள் இனி தொடராதுங்க. எதிர்பாராத சந்தர்ப்பங்கள் அமைஞ்சு தொடர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுங்க. இதுக்கு குடும்பத்துப் பெரியவங்க ஆசியும் கடவுளோட அனுக்ரகமும்தான் முக்கிய காரணம்ங்கறதை மறக்காதீங்க. உத்யோகத்ல இருக்கறவங்க இதுவரையிலான தங்களோட மனோபாவத்தை மாத்திக்கோங்க; அது எதிர்கால நன்மைகளைத் தருமுங்க. எதிர்பாராத இடங்கள்லேர்ந்து நல்ல யோசனைகளும் அறிவுரைகளும் கிடைக்கும். சிலர் ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தால பாதிக்கப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தாங்களே உருவாக்கிகிட்ட சிக்கல்லேர்ந்து மீள்வீங்க.

செவ்வாய்கிழமை முருகன் நாமாவளி சொல்லி, வழிபடுங்க; முன்னேற்றம் தடை காணாது.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ரொம்பவும் நிதானமாக நடந்துக்க வேண்டிய வாரமுங்க. சிறிதளவு கோபமும் பெரிய பாதிப்புகளை உண்டாக்கிடுமுங்க. என்னன்னே புரியாத கவலை, மன இறுக்கம்னு சிலர் சஞ்சலப்படுவீங்க. பிராணாயாமம், யோகா, தியானம்னு தேர்ச்சி பெற்ற ஆசிரியரிடமிருந்து கற்று, அவற்றை தினமும் பழகுங்க; மனசில் தெளிவு பிறக்கும். எந்த விஷயத்திலும் எந்த முடிவை எடுக்கு முன்னாலும், வீட்டார் ஆலோசனையைக் கேட்டுக்கோங்க. குழப்பத்ல தவறான முடிவை எடுத்துடுவீங்கங்கறதால அவங்க யோசனை உங்களுக்குப் பெரிதும் உபயோகமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்யோக இடத்ல கொஞ்சமும் உணர்ச்சிவசப்பட்டுடாதீங்க. சிலருக்கு நரம்பு பாதிப்பு ஏற்படலாம். சிலர் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். வாகனம் ஓட்டும்போது சாலைக்கும் எச்சரிக்கை விளக்குகளுக்கும் உரிய மரியாதை கொடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அவசர முடிவு எடுக்காதீங்க.

வியாழக்கிழமை கோவிந்த நாமவளி சொல்லி பெருமாளை வழிபடுங்க; மனதில் சாந்தி நிலவும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்