SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்

2016-04-23@ 11:56:59

பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி : ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நேற்று (ஏப்.22) நடந்த கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மன்னன் ஒருவன் பெருமாளை பூஜிக்கும் போது ஆச்சார குறைவு ஏற்பட்டு சாபத்திற்கு உள்ளாகி காட்டில் யானையாக பிறந்தான். அவன் கஜேந்திரன் என்ற பெயரில் காட்டில் வாழ்ந்து வந்தான். பெருமாள் மீது இருந்த பக்தியால் சாப விமோசனம் கேட்டு பெருமாளை தினமும் வழிபட்டு வந்தான். அதுபோல தாமரைக்குளத்தில் தனது தோழிகளுடன் குளிக்க சென்ற கந்தர்வன் ஒருவன் துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகி முதலையாக மாறும் சாபம் பெற்றான். அன்று முதல் கந்தர்வன் தாமரைக்குளத்தில் முதலையாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் பெருமாளை பூஜிப்பதற்கு தாமரை மலரை பறிக்க வந்த கஜேந்திரனின் கால்களை கவ்விப்பிடித்த முதலை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. உயிர் பிழைக்க யானை கடுமையாக போராடியது. யானையால் முடியவில்லை. பெருமாளை மனதில் நினைத்து ஓம் நமோ நாராயணா என்று அலறியது. இதைக் கேட்ட பெருமாள் கருடவாகனத்தில் அந்த தாமரைக்குளம் அருகே எழுந்தருளி முதலையை சக்ராயுதத்தை கொண்டு தாக்கினார். சக்ராயுதம் முதலையின் மீது பட்டவுடன் கஜேந்திரன் மன்னனாகவும், முதலை கந்தர்வனாகவும் சாப விமோசனம் பெற்றனர் என்பது புராணம்.

இதை நினைவூட்டும் வகையில் கஜேந்திர மோட்ச வைபவம் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காவிரியாற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நடத்திக் காட்டப்படும். நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியளவில் நம்பெருமாள் காவிரி ஆற்றில் இறங்கினார். இந்தாண்டு காவிரியாற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் கஜேந்திரமோட்சம் நிகழ்ச்சி ஆற்றின் நடுவே நடைபெற்றது. காவிரியில் கிழக்கு நோக்கி நம்பெருமாளும், மேற்கு நோக்கி கோயில் யானை ஆண்டாளும் நின்றது. அப்போது கோயில் யானை ஆண்டாள் முதலை காலைப்பிடித்து கவ்வி இழுப்பது போல் நடித்துக் காட்டியது. அது சமயம் யானை ஆண்டாள் அபயக்குரல் எழுப்பி பிளிறியது. அதனைத் தொடர்ந்து, நம்பெருமாளின் சடாரியை எடுத்து வந்து யானை மீது அர்ச்சகர்கள் வைத்தனர். இதில் யானை ஆணடாள் சாப விமோசனம் பெற்றது. இந்த கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்