SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : அக்டோபர் 20 முதல் 26 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சாதாரணமாக ஆரம்பிக்கற பேச்சையே விவாதமாக மாத்தறது உங்களுக்குக் கைவந்த கலைங்க. நீங்க சொல்ல வந்ததை எதிராளி ஏற்றுக்கணும்னு  நிர்ப்பந்திக்கறதிலேயோ, எதிராளி சொல்றது எதுவுமே சரியில்லேங்கற அகம்பாவ போக்கிலேயோ, நல்ல நட்புகளையும் உறவுகளையும் இழக்க வேண் டியிருக்குமுங்க. முக்கியமா குடும்பத்ல பிடிவாதமா உங்க யோசனையைத் திணிக்காதீங்க. அங்கே சின்ன சிக்கலும் ஒற்றுமைக் குலைவு போன்ற  பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடலாமுங்க. தொழில், உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு வந்தா உடனே ஏற்றுக்கோங்க. மேலதிகாரி, சக ஊழியர்கள்  காட்டக்கூடிய அன்பால உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுடாதீங்க. பயணங்களால ஆதாயம் உண்டுங்க. ரத்தத்தில் கோளாறு வரலாமுங்க.  

இந்தத் தேதிப் பெண்கள் சுருக்கமாகப் பேசி, அக்கம்பக்கத்தார் மத்தியில மதிப்பை உயர்த்திக்கோங்க. இஷ்டபட்ட அம்மன் கோயிலுக்குப் போய் வாங்க; அற்புதங்கள் நிகழும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில், உத்யோக இனங்கள் ரொம்பவும் மேன்மையாகத் தெரியுதுங்க. அதேசமயம் உயர்வு கிடைக்கறபோது ஆடாமலும் சில தொய்வுகள் வ ரும்போது அப்படியே நொடிச்சுப் போறதும் கூடாதுங்க. உயர்வு உங்க முயற்சியால மட்டும் இல்லேங்கறதையும் தாழ்வு, பிறர் முயற்சியாலதான்னும்  நினைச்சுக்கற சுபாவத்தை விடுங்க. இப்படி உணர்வுகளை வெளிப்படுத்தினீங்கன்னா விரைவிலேயே தனிமைபடுத்தப்படற சூழ்நிலை ஏற்பட்டுடுமுங்க -  எச்சரிக்கையா இருங்க. கடந்த கால கசப்பான அனுபவங்களை இப்பமருந்தாகப் பயன்படுத்திக்கோங்க. உங்க பொறுமையின் பரிமாணத்தைப் பொறு த்தே உங்க சாதனைகளும் நன்மைகளும் அமையுமுங்க. குடும்பத்தார் உங்க யோசனையைக் கேட்டே எந்த செயல்லேயும் ஈடுபடுவாங்க. ஒவ்வாமை,  எலும்பு உபாதைன்னு கொஞ்சம் கஷ்டப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்களுடைய யோசனைகளும் முயற்சிகளும் நற்பலன்களைத் தருமுங்க. விஷ்ணுவை வழிபடுங்க; புகழ் நிலைக்கும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


என்னென்னே புரியாத குழப்பம் மனசில் கலக்கத்தை உண்டு பண்ணுமுங்க. ஒரு வேலை செய்யும்போது அதில் மட்டும் முழு ஈடுபாட்டைக் காட்டினீங் கன்னா அனாவசியக் குழப்பமெல்லாம் தீர்ந்துடுமுங்க. ஒரே சமயத்ல ரெண்டு, மூணு வேலைகள்ல இறங்கி, எதையுமே முழுமையா முடிக்க முடியாம  தவிக்கறதை விட, ஒரு வேலையை பூரணமாக செய்து முடிக்கறது நல்லதுங்க. உங்க குடும்ப விவகாரத்ல மூணாம் மனுஷரோட யோசனையைக் கேட் காதீங்க. உங்களாலேயே சுமுகமாக சமாளிக்க முடியும்; நம்பிக்கையோட செயல்படுங்க. அப்பப்ப தலையெடுக்கற சோம்பலை விலக்கி, நேரம் தவறா மையைக் கண்டிப்பாகக் கடைபிடிச்சீங்கன்னா முன்னேற்ற உத்திரவாதம் உண்டுங்க. ஏற்கெனவே நரம்பு பிரச்னை இருக்கறவங்க, இப்ப எடுத்துகிட்டி ருக்கற மருந்தைத் தவறாம உட்கொள்ளுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசிய கற்பனைகளால வருத்தத்தை வளர்த்துக்காதீங்க. சிவாலயம் போய் வாங்க; சிறப்புகள் கூடிவரும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


கொடுக்கல்-வாங்கல்ல எந்த சிக்கலும் தெரியலீங்க. வாய்வழி உத்தரவாதம்கூட நாணயமா, நேர்மையா கடைபிடிக்கப்படுங்கறதால, பண விவகாரம்னா லும் சுமுகமாகவே பரிவர்த்தனை நடக்குமுங்க. பெரிய தொகை முதலீடுகளுக்கும் வாய்ப்பு இருக்குங்க. தொழில் விரிவாக்கம், வியாபார அபிவிருத்தி,  உத்யோகம் சம்பந்தமான நம்பக முன்பணம்னு முதலீடு செய்வீங்க. இதனால ஆதாயம்தான் அதிகமுங்க. குடும்பத்ல மகப் பேறுக்காக ஏங்கிகிட்டி ருந்த தம்பதியருக்கு நற்செய்தி வருமுங்க. புதிய வரவாலேயும் சந்தோஷம் அதிகரிக்குமுங்க. இந்தத் தேதி அரசியல்வாதிகளுக்கும் படைப்பாளிகளுக் கும் புகழ் கூடுமுங்க. புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் கிடைக்குமுங்க. உணவுக் குழாய், கழிவுப் பாதையில் தொந்தரவு வருமுங்க; சாத்வீகமான  உணவையே எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களின் நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுமுங்க. இஷ்டபட்ட மகானை வழிபடுங்க; மங்கலம்  பொங்க வாழ்வீங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிறிய அளவில் ஏதாவது உடல் உபாதைன்னாலும் அலட்சியப்படுத்தாதீங்க; உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. சுய மருத்துவம் வேண்டாம். குறிப் பாக அடிவயிறு முதல் பாதம் வரை ஏற்படக்கூடிய எந்த தொந்தரவையும் உடனே கவனிங்க. உத்யோக இடம், வெளிவட்டாரப் பழக்கத்ல யார்கூடவும்  எந்தச் சின்ன வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. இது இப்போதைக்கு மட்டுமல்ல, எப்போதும் நன்மை தருமுங்க. தொழில் எதிரிகளும் கூட வேலை  பார்க்கறவங்களும் எதுக்காகவேனும் பொறாமையை வளர்த்துகிட்டு உங்க மேல பழி சுமத்த முயற்சிப்பாங்க; அதனால யாரையும் குறை சொல்லா தீங்க. நீங்க கடைபிடிக்கற நிதானம், உங்களை எல்லா விஷயங்கள்லேயும் சிறப்படைய வைக்குமுங்க. குடும்பத்லேயும் விளையாட்டுப் பேச்சும் வினை யாகும்; கவனமா இருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பொறுமைக்கு இலக்கணமா இருக்கணுமுங்க. புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; புடம்போட்ட தங்க மாவீங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில், வியாபாரம், உத்யோகத்ல ஏதேனும் மாற்றம் வந்தா உடனே ஏற்றுக்கோங்க. அது  உங்களை மேன்மேலும் மேம்படுத்திக்க உதவும். உத் யோகத்ல மேலதிகாரிக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளி குறையுமுங்க. உழைப்புக்கேற்ற மரியாதை கிடைக்குமுங்க. புது உத்யோகம் அல்லது  கூடுதல் சம்பளம், வசதிகள், சலுகைகளோடு கூடிய வேலை கிடைக்குமுங்க. தைரியமா எடுத்துக்கோங்க. முயற்சி செய்தால் வெளிநாட்டு வாய்ப்புகளை யும் பயன்படுத்திக்கலாம். குடும்பத்ல எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமா நடந்துப்பீங்க. ஒருவர் கருத்தை அடுத்தவர் மதிச்சுக் கேட்பீங்க.  பிள்ளைகளோட உடல்நலத்ல மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. அவங்களை அரவணைச்சுக்கோங்க. கண்கள்ல பிரச்னை தெரியுதுங்க. ஒற் றைத் தலைவலி, சைனஸ், சளி தொந்தரவுன்னும் வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் பலரும் பாராட்ட வலம் வருவீங்க. ஆனைமுகனை வழிபடுங்க;  அகிலம் போற்ற வாழ்வீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பெரியவங்க யோசனைக்கு செவி கொடுங்க. அவங்க அன்பாக சொன்னாலும் அதிகாரமா சொன்னாலும் அது உங்க நன்மைக்குதாங்க.  யார் மேலேயும் அநாவசியமா வெறுப்பு கொள்ளாதீங்க. உங்களுக்குப் பிடிக்காததை அவங்க பேசினாலோ, நடந்துகிட்டாலோ அது அப்போதைய  சூழ்நிலையாலதான்னு புரிஞ்சுகிட்டு அதைப் பெரிது படுத்தாம இருங்க. இது பல நல்ல விஷயங்களை உங்களுக்கு சம்பாதிச்சுத் தருமுங்க. உத்யோ கத்லேயும் முகம் திருப்பிக்கற மேலதிகாரிகிட்ட எந்த விரோதமும் பாராட்டாதீங்க. அவர் பற்றி யார்கிட்டேயும் விமரிசிக்காதீங்க. உடம்பிலே இடது பக் கத்ல ஏதாவது பிரச்னைன்னா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. அது இருதயம் சம்பந்தப்பட்டதாக இல்லாவிட்டாலும் மருத்துவர் கவனத்துக்குக்  கொண்டு போயிடறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வீட்டு மனுஷாளை நம்புங்க; மூன்றாம் நபரை சந்தேகப்படுங்க. முருகனை வழிபடுங்க;  மேன்மைகள் தொடரும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குடும்பத்ல மருத்துவ செலவு அதிகரிக்குமுங்க. அதுக்காக அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திடாதீங்க. வந்த கஷ்டத்தைப் போக்க எதையாவது  செய்யத்தானே வேணும்! செலவுக்கு யோசிச்சுகிட்டு, அலைச்சலுக்கு சோம்பல்பட்டுகிட்டு, உபாதைகளை வளர விட்டுடாதீங்க. குடும்பத்ல மிச்சவங் களுக்கு உற்சாகமூட்டி, அவங்க தன்னம்பிக்கை வளரும்படி பேசி, நல்ல துணையாக நீங்க விளங்கணுமுங்க. அதேசமயம் உங்களுக்கு யோசனை  சொல்ல வர்ற வெளியாட்கள் மேல அனாவசியமா எரிச்சல் படாதீங்க. அவங்க பாட்டுக்கு சொல்லிகிட்டுப் போகட்டும்; நீங்க சும்மா கேட்டுகிட்டு  காதோட அதையெல்லாம் விட்டுடுங்க. குலதெய்வ வழிபாடு ஏதேனும் விடுபட்டிருந்தா அதை நிறைவேற்றிடுங்க; குடும்பத்து ஆரோக்கிய குறைவுக்கு  அந்த தோஷமும் ஒரு காரணமா இருக்கலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் உணவில் கட்டுப்பாடு வெச்சுக்கோங்க. பார்வதி தேவியை தியானம் பண் ணுங்க; பாவ வினைகள் போகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றி பெறுமுங்க. ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அனுபவங்களைப் பாடங்களாக ஏற்றுகிட்டீங்கன்னா, அதெல்லாம் இப்போ தைய  வெற்றிக்கு உதவுமுங்க. தொழில், உத்யோகத்ல வரக்கூடிய மாற்றங்களை மனதார ஏற்றுக்கோங்க. அது பல எதிர்கால நன்மைகளைத் தரு முங்க. படைப்பாளிகளுக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்குமுங்க. அரசு, இலக்கிய, கலை அமைப்புகள்லேர்ந்து விருதுகளும் கிடைக்க வாய்ப்பு  இருக்குங்க. புது வீடு பிராப்தம் சிலருக்கு ஏற்படுமுங்க. சொந்த வீட்டிற்கோ அல்லது அதிக வசதி கொண்ட வாடகை வீட்டுக்கோ குடிபோவீங்க. சளி தொந்தரவு, காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதைன்னு வருமுங்க. குடும்பத்ல சுப விசேஷங்கள்ல நீண்டநாள் பார்க்காதிருந்த உறவுக்கா ரங்க, நண்பர்களை சந்திப்பீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் தரும் சில பணிகளை மேற்கொள்வீங்க. பெருமாளை தரிச னம் பண்ணுங்க; பெருமை பொங்க வாழ்வீங்க.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • well-collapes-31

  ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

 • parliammmm_moddi

  இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

 • boat-fire-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

 • us-desert-train-acci-30

  அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

 • mexico-123

  மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்