வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் இன்று (30ம் தேதி) தீர்த்தவாரி
2015-12-29@ 14:14:28

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. சொர்க்கவாசல் 21ம் தேதி திறக்கப்பட்டது. ராப்பத்து உற்சவ 8ம் நாளான நேற்று மாலை திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மணல் வெளிக்கு வந்தார். அங்கு நம்பெருமாள் மாலை 5.30 முதல் 6.30 வரை வையாளி கண்டருளிய பின்னர் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமங்கைமன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் அளிக்கப்பட்டன. நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சேர்ந்தார்.
அங்கு அரையர் சேவைக்கு பின் இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல் வெளிக்கு வந்துவிடுவதால் நேற்று பரமபதவாசல் திறக்கப்படவில்லை. வேடுபறி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராப்பத்து உற்சவ 10ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது. காலை 10மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுகிறார். நாளை (31ம் தேதி) நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெறுகிறது.
மேலும் செய்திகள்
ஆனைமுகனின் அறுபடை வீடுகள்
அழகிய சிங்கனின் இனிய தலங்கள்
வராஹம் எனும் வேத ஞானம்
சூரியன் வணங்கிய தலங்கள்
திதி தீர்த்தங்கள்
குரு தலங்கள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!