பீட்: மகாராஷ்டிராவில் நேற்றிரவு நடந்த 2 சாலை விபத்துகளில் 9 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். அகமதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் நோயாளி உட்பட 4 பேர் பயணம் செய்தனர். அப்போது அதே சாலையில் பயணம் செய்த ஒரு லாரி, ஆம்புலன்ஸ் மீது வேகமாக மோதியது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஒரு பஸ், மும்பையில் இருந்து பீட் நோக்கி பயணிகளுடன் சென்றது. பீட் விரைவு சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். தவலறிந்து போலீசார் விரைந்தனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.