ஐதராபாத்: மலையாளம் மற்றும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர், மீரா ஜாஸ்மின். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், 2014ல் அனில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்து, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு துபாய்க்கு சென்று குடியேறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்ேடாக்களை வெளியிட்டு, புதுப்பட வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மகள்’ என்ற படத்தில் டீன்ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்த அவர், 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் ‘விமானம்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். தற்போது அவருக்கு 41 வயது ஆகிறது. இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘விமானம்’ படத்தில் நடிக்கிறார். தமிழில் கடைசி யாக அவர் ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது கடந்த 2014ல் திரைக்கு வந்தது. 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் மீரா ஜாஸ்மின், இங்குள்ள சில இயக்குனர்களிடம், நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்….