திருவண்ணாமலை, ஜூன் 11: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்(25). கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த படித்து வந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமி கூச்சலிட்டு அழுததால் அங்கிருந்து அந்த வாலிபர் ஓட்டம் பிடித்துள்ளார். இது தொடர்பாக, செங்கம் மகளிர் போலீசில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் அரவிந்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்ப நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் அரவிந்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை செங்கம் அருகே
0
previous post