ஜெயங்கொண்டம், ஜூலை 28: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 8 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி (பொ) தலைமையாசிரியர் லெனின் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்துல் கலாமின் சாதனைகள், மனிதநேயம், மாணவர்கள் மேல் கொண்ட அன்பு, நாட்டின் வளர்ச்சிக்கு அவர் செய்த தொழில்நுட்பங்கள் பற்றி மாணவிகளிடம் நினைவு கூர்ந்தார். பள்ளி மாணவி தேவதர்ஷினி அப்துல் கலாம் பற்றி பேசினார். மேலும் நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வராஜ், ரகுபதி, வனிதா, சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, தமிழாசிரியர் ராமலிங்கம், சத்யா, காமராஜ்,சங்கீதா, சுரும்பார்குழலி, அகிலா, மரகதம், லூர்துமேரி உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா, அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .