தேஸ்பூர்: நாட்டின் வயதான யானையான பிஜூலி பிரசாத் அசாமின் சோனிட்பூர் மாவட்டத்தில் நேற்று தனது 89வயது வயதில் உயிரிழந்தது. இந்த யானை, வில்லியம் மகோர் தேயிலை நிறுவனத்தால் குட்டியாக இருந்தபோது வாங்கப்பட்டது. இந்த யானை முதலில் பர்காங் தேயிலை தோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதனை விற்பனை செய்த பிறகு யானை பிகாலி தேயிலை தோட்டத்துக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.