கோவை, ஜூலை 2: கோவை தெற்கு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 95 கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வு நடந்தது. இதில், 7 கிராமங்களில் பணியாற்றும் 7 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒரு ஆண்டு கால பணி காலத்தை முடிக்கவில்லை. அவர்களை தவிர 87 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் மூலமாக நடத்தப்பட்டது. இதில், 87 பேர் கவுன்சிலிங் முறையில் பணியிட மாறுதல் உத்தரவு பெற்றனர்.
செம்மேடு, சீரபாளையம், குரும்பபாளையம், தீத்திபாளையம், வடவள்ளி, மாவுத்தம்பதி, பீடம்பள்ளி, அரிசிபாளையம், பாப்பம்பட்டி, மயிலம்பட்டி, பேரூர் செட்டிபாளையம், வழுக்குபாறை, குறிச்சி, எம் பாம்பம்பட்டி, பிச்சனூர், மலுமிச்சம்பட்டி, வேடப்பட்டி, திருமலையம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், கிருஷ்ணாபுரம், வதம்பச்சேரி, கணியூர், அரசூர், பட்டணம், மோப்பிரிபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் மாற்றம் செய்து தெற்கு ஆர்டீஓ ராம்குமார் உத்தரவிட்டார்.