Friday, February 23, 2024
Home » சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

by Neethimaan

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,43,885 பயணிகள் (Online QR 2,21,716; Static QR 2,09,136; Paper QR 25,36,178; Paytm 3,75,357; Whatsapp – 3,04,232; PhonePe – 97,266), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 37,92,912 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 15,456 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi