நாமக்கல், மே 19: நாமக்கல் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 84 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு எருமப்பட்டி, சீராப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர், இரா.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பிஎல்ஏ 2 வைச் சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி 84 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், பாலசுப்பிரமணியம், பேரூர் செயலாளர்கள் செல்வராஜு, அன்பழகன், பொன்.நல்லதம்பி, ராஜேஷ், சுப்ரமணியம், முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் விமலாசிவகுமார், சார்பு அணி நிர்வாகிகள் கிருபாகரன், பொன்.சித்தார்த், இளம்பரிதி, கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
84 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
0
previous post