பெரணமல்லூர், ஜூலை 24: பெரணமல்லூர் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள வீட்டில் உணவு வாங்க சென்றார். அப்போது, வீட்டில் இருந்த துரைசாமி(61) என்பவர் சிறுமியை உள்ளே அழைத்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்த சிறுமியின் சத்தம் கேட்ட அவரது தாயார் உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது, துரைசாமி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அவரை கண்டித்து விட்டு, இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த துரைசாமியை நேற்று கைது செய்தார். பின்னர், அவரை திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
8 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் முதியவர் போக்சோவில் கைது பெரணமல்லூர் அருகே
63
previous post