ஆர்.கே.பேட்டை, செப். 2: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் ஜனகராஜ் குப்பம் கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. இதனால் அச்சமடைந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறை எனக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தீயணைப்புத் துறையினர் வராததால் கிராம மக்களே மலைப்பாம்பை பிடித்து இரும்பு கூண்டுக்குள் அடைத்தனர். இதனை அந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதனையடுத்து நான்கு மணி நேரம் கழித்து வந்த தீயணைப்பு துறையினரிடம் 8 அடி நீள மலைப்பாம்பை கிராம மக்கள் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.