பெங்களூரு: நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா ஆகியோர் கடந்த ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டனர். ரசிகரை அடித்துக் கொன்ற வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சிறையில் நண்பர்களுடன் அமர்ந்து நடிகர் தர்ஷன் பேசிய வீடியோ நேற்று வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது.
யார் எடுத்து வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியாத நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த ஐஜி தலைமையிலான விசாரணை குழுவை சிறைத்துறை டிஐஜி அறிவித்துள்ளார். இந்த குழுவினர் சிறையில் சிசிடிவிகள் மற்றும் இந்த புகைப்படங்களில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.