அரூர், நவ.7: அரூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அரூர், கோட்டப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் போலீசார் கடந்த மாதம் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில், சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பெண்கள் உள்பட 78 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 டூவீலர், 2 நான்கு சக்கர வாகனங்கள், 3107 மதுபாட்டில்கள் மற்றும் 300 லிட்டர் ஊறல், 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.