மேட்டுப்பாளையம்,ஆக.12:நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக நேற்று மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுலப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மேரி பாக்கியம் வளர்மதி வரவேற்றார்.
அரிமா.ஜெயராமன் சுதந்திர தினம் குறித்தும்,சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவு பெற்றது. கல்லாறு ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுல பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.