Monday, September 25, 2023
Home » 75 ஆண்டு பழமையான ஓட்டல் சுவர் இடிந்து 2 பேர் நசுங்கி பலி: கலெக்டர் உத்தரவால் சீல் வைப்பு

75 ஆண்டு பழமையான ஓட்டல் சுவர் இடிந்து 2 பேர் நசுங்கி பலி: கலெக்டர் உத்தரவால் சீல் வைப்பு

by Karthik Yash

வேலூர்: வேலூரில் சீரமைப்பு பணியின்போது 75 ஆண்டு பழமையான ஓட்டல் சுவர் இடிந்து 2 பேர் நசுங்கி பலியாகினர். இதையடுத்து கலெக்டர் உத்தரவால் ஓட்டலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் 75 ஆண்டு பழமையான தனியார் ஓட்டலின் பின்பக்கம் சமையல் அறையாக உள்ள கட்டிடத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காலை 10 மணியளவில் திடீரென பக்கவாட்டு சுவர், மேல்தளம் மற்றும் அதன் மீது இருந்த சிமென்ட் ஷுட் கூரையுடன் மொத்தமாக இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, இளம்பெண் மற்றும் ஒரு ஆண் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி கதறி துடித்தனர்.

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 60 வயது மதிக்கதக்க பெண், வழியிலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் அனுமதிக்கப்பட்டனர். இதில் வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி(55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பை தொடர்ந்து, ஓட்டல் கட்டிடத்திற்கு சீல் வைக்க வருவாய் துறையினருக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?