புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டின் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து இன்று காலை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கட்சி தொண்டர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைபேசி மூலம் முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் ேமாடி, மாநிலங்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோர் எக்ஸ் தளத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்னர் கதிர்காமம் கதிர்வேல்சுவாமி கோவிலில் சிறப்பு பூஐையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.