ஓசூர், அக்.15: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தின. இதில் 2,580 ேபர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இணை இயக்குநர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அசோக் லைலேண்ட், டி.வி.எஸ், டெல்டா, டாடா எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட 102 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. தேர்வு செய்யப்பட்ட 757 பேருக்கு, பணி நியமன ஆணைகளை பிரகாஷ் எம்எல்ஏ, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர் சபீனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், துணை இயக்குநர் இளவரசி, உதவி இயக்குநர் திவ்யதர்ஷனி, மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் பன்னீர் செல்வம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் சந்தோசம், ரகு, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், டேக்ஸ் கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மண்டல குழுத்தலைவர் ரவி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், மஞ்சுளாமுனிராஜ், பிடிஓ.,க்கள் சீனிவாசமூர்த்தி, பூபதி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.