எட்டயபுரம், நவ. 27: எட்டயபுரம் தாலுகா பொன்னையாபுரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீடுவீடாக ரேசன் அரிசி வாங்கிக் கொண்டிருந்த இருவரை மடக்கினர். விசாரணையில் அவர்கள், தென்காசி கரிசல்குளத்தை சேர்ந்த சந்தனப்பாண்டியன் (28), கயத்தாறு அருகேயுள்ள சிவஞானபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் (31) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 7 மூட்டை அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அரிசி மூட்டை மற்றும் இருவரை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
7 மூட்டை ரேஷன் அரிசியுடன் இருவர் கைது
0
previous post