புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. நாளை மறுநாள் ஓட்டுஎண்ணிக்கை நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி, திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தர பிரதேச மாநிலம் கோஷி, உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, மேற்குவங்க மாநிலம் துக்புரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. அங்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா‘ கூட்டணி வேட்பாளருக்கும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் 5 தொகுதிகளில் முதல் முறையாக நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடைத்தேர்தல் முடிவு அனைவரையும் மிகவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.