சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், தஞ்சை, மதுரை நகரம் தலா 102 ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நாகை, திருச்சி 101, தூத்துக்குடி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.