திருமலை: தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் நேற்று காலை சுமார் 6.45 மணியளவில் கரககுடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடமேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோத்தே கிராமத்தின் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்க தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் திடீரென போலீசார் மீது தூப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் பெண் உட்பட 6 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டு கொன்றனர்.
மாவோயிஸ்டுகளின் சடலங்களை மீட்டு, அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.