சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஊதிய உயர்வினால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகை 2024 செப். 1ம் தேதி முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும். சலவைப்படி ரூ.160ஆகவும் தனி பேட்டா ரூ.21 ஆகவும் உயர்த்தப்படும். திருமண கடன் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.