Tuesday, June 24, 2025
Home செய்திகள் 62வது லீக் போட்டியில் இன்று ஆறுதல் வெற்றிக்கு மோதும் சென்னை – ராஜஸ்தான்

62வது லீக் போட்டியில் இன்று ஆறுதல் வெற்றிக்கு மோதும் சென்னை – ராஜஸ்தான்

by Karthik Yash

* ஐபில் 18வது தொடரின் 62வது லீக் போட்டி, டெல்லியில் இன்று நடக்கிறது.
* இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
* எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி, 12 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 9 தோல்விகளை பெற்று, 6 புள்ளிகளுடன் பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது.
* சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, 13 போட்டிகளில் ஆடி 3ல் வெற்றி, 10ல் தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது.
* சென்னை அணி, கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 4ல் தொடர் தோல்வி, கடைசி போட்டியில் வெற்றி அடைந்தது.
* ராஜஸ்தான் அணி, கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், 2வதில் மட்டும் வெற்றி, மீதமுள்ள 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
* இந்த இரு அணிகளும் இதுவரை, 30 போட்டிகளில் ஆடியுள்ளன.
* அவற்றில், சென்னை 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
* அப்போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை 246 ரன்களையும், ராஜஸ்தான் 223 ரன்களையும் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக சென்னை 109, ராஜஸ்தான் 126 ரன் எடுத்துள்ளன.
* இந்த இரு அணிகளும் கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், ராஜஸ்தான் 4ல் வெற்றி வாகை சூடியது. ஒன்றில் மட்டுமே சென்னை வென்றது.
* இன்றைய போட்டியில் இவ்விரு அணிகளில் எந்த அணி வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது.

ஐபிஎல் புள்ளிப் பட்டியல்
ரேங்க் அணி போட்டி வெற்றி தோல்வி ரன்ரேட் புள்ளி
1 குஜராத் 12 9 3 +0.795 18
2 பெங்களூரு 12 8 3 +0.482 17
3 பஞ்சாப் 12 8 3 +0.389 17
4 மும்பை 12 7 5 +1.156 14
5 டெல்லி 12 6 5 +0.260 13
6 கொல்கத்தா 13 5 6 +0.193 12
7 லக்னோ 11 5 6 -0.469 10
8 சன்ரைசர்ஸ் 11 3 7 -1.192 7
9 ராஜஸ்தான் 13 3 10 -0.701 6
10 சென்னை 12 3 9 -0.992 6
(சன்ரைசர்ஸ் லக்னோ போட்டிக்கு முன்)

* கேப்டனாக ஷ்ரேயாஸ் அசாத்திய சாதனை
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அணியை சிறப்பாக வழி நடத்தி சென்றதன் பலனாக, 11 ஆண்டு இடைவெளிக்கு பின், பஞ்சாப் அணி, பிளே ஆப் சுற்றுக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் இதற்கு முன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் செயல்பட்டார். கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. நடப்பாண்டுக்கான ஏலத்தில், ஷ்ரேயாஸ் ஐயரை, பஞ்சாப் அணி, ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர், இதற்கு முன் டெல்லி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு பிளே ஆப் சுற்று வரை டெல்லி அணியை இரண்டு முறை வழி நடத்தி சென்றவர். தற்போது, பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளதால், 3 அணிகளுக்கு தலைமை தாங்கி, அவற்றை பிளே ஆப் சுற்று வரை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற அரிய சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தி உள்ளார்.

* பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 3 அணிகள்
ஐபிஎல் 59வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 10 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபாரமாக வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த 60வது லீக் போட்டியில் டெல்லி அணியை குஜராத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மகத்தான வெற்றி பெற்றது. அதன் மூலம், குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு உயர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி அணி 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த மாற்றங்களால், புள்ளிப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆப்புக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் 3 அணிகள், பிளே ஆப்புக்குள் நுழைந்ததை அடுத்து, மீதமுள்ள 4வது இடத்துக்கு மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த அணிகள் மீதமுள்ள போட்டிகளில் பெறும் வெற்றி, தோல்விகளை பொறுத்து 4ம் இடம் யாருக்கு என்பது முடிவாகும்.

* 800 ரன்கள் கடந்து கில், சுதர்சன் சாதனை: ஐபிஎல்லில் முதல் இந்திய இணை
டெல்லி அணிக்கு எதிரான 60வது லீக் போட்டியில் குஜராத் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் (93 ரன்), தமிழக வீரர் சாய் சுதர்சன் (108 ரன்), டெல்லி வீரர்களின் பந்துகளை சிதறடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 205 ரன் குவித்தனர். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 800 ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய இணை என்ற மகத்தான சாதனையை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

ஐபிஎல் தொடர்களில் அதிக ரன் குவித்த இந்திய இணைகள்
வீரர்கள் அணி ஆண்டு ரன்கள்
சுப்மன் கில், சாய் சுதர்சன் குஜராத் 2025 839
ஷிகார் தவான், பிருத்வி ஷா டெல்லி 2021 744
மயங்க் அகர்வால், ராகுல் பஞ்சாப் 2020 671
மயங்க் அகர்வால், ராகுல் பஞ்சாப் 2021 602
விராட் கோஹ்லி, படிக்கல் பெங்களூரு 2021 601

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi