தெலுங்கானா: ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலம் செல்கிறார். தெலுங்கானாவின் வாரங்கலில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டும் விழாவுக்கு முன்னர் வாரங்கலில் பத்ரகாளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் கலந்து கொள்ளவுள்ள நிகழ்ச்சியை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.